Tuesday, September 27, 2022

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த முழு விபரம் .......

 


    தமிழ்நாட்டில் பி.எட் முடித்தவர்கள் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அதன்படி 2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விரும்புவோர் கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி உடன் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து சிலர் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனைத்தொடர்ந்து ஏப்ரல் 26ம் தேதி வரை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வில், முதல் தாளுக்கு 2,30,878 பேர் மற்றும் இரண்டாம் தாளுக்கு 4,01,886 பேர் என 6,32,764 என மொத்தம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளை ஆகஸ்ட் 25 தேதி முதல் 31ம் தேதி வரை நடத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டிருந்தது. பின்பு தேதி மாற்றியது.

    இந்நிலையில் தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்குரிய தேர்வு தேதி குறித்த அறிவிப்பை TRB வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, TRB தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்குரிய தேர்வானது அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் நடப்பு ஆண்டு முதல் இத்தேர்வை கணினி வழியில் நடத்த உள்ளதாக தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. அனைத்து தேர்வர்களும் கணினி வழித்தேர்வை (Computer Based Examination) பயிற்சி தேர்வுகளாக மேற்கொள்ள தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இதனை அனைத்து தேர்வர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment