Thursday, September 5, 2024
ஆசிரியர் தின விழா - 2024
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (05.09.2024) ஆசிரியர் தினவிழா நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் சோ. சிவகுருநாதன் அனைவரையும் வரவேற்று ஆசிரியர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்துக்கொண்டார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களை பெருமைப் படுத்தும் வகையில் அவர்களின் சேவைகளை, தமது பேச்சு, கவிதைகள் மூலம் வெளிப்படுத்தினர். உதவி ஆசிரியர்கள் மு. அனிதா, மு. அகிலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கும், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கி அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகளை கூறினார். பின்னர் அவர் தனது உரையில் சமுதாயச் சிற்பிகளான ஆசிரியர்களை சமூகம் கொண்டாட வேண்டும் எனவும், மாணவர் தமது ஆசிரியர்களை என்றும் மறவாது நினைவில் கொண்டு, அவர்கள் கூறும் நற்கருத்துகளை ஏற்று செயல்பட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்றும் கூறினார். அதன் அடிப்படையிலேயே தான் தலைமை ஆசிரியராகப் பணியேற்ற 2002ஆம் ஆண்டு முதல் தம்மோடு பணியாற்றும் உதவி ஆசிரியர்களை பாராட்டி, வாழ்த்து தெரிவித்துப் பரிசளித்து வருவதாகவும் தெரிவித்தார். நிகழ்ச்சிகளை பள்ளி இதவி ஆசிரியர் பூ. இராம்குமார் ஒருகிணைத்தார்.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் கோ. ஆனந்தன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment