Tuesday, November 5, 2013
இணை பட்டப் படிப்புகள் - தமிழக அரசு ஆணை
பொதுப் பணிகள் - பல்வேறு பல்கலைக்கழங்களால் வழங்கப்படும் இளங்கலை / முதுகலை பட்டப் படிப்புகள் அவற்றுக்கு இணையானதாக கருதப்படும் பட்டப்படிப்புகள் - தமிழக அரசு ஆணை வெளியீடு.
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு முடிவுகள்
தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் கீழ்கண்ட இணைப்பைச் சுட்டி அதில் தமது தமது தேர்வு எண்ணை கொடுத்து பெற்ற மதிப்பெண்களைத் தெரிந்துக்கொள்ளலாம்.
Tamil Nadu Teachers Eligibility Test 2013 - Click here for Provisional Mark List for Paper I
Monday, November 4, 2013
எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் "இ-வித்யா" திட்டம் அறிமுகம்
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் "இ-வித்யா" திட்டம் மாநிலத்தில் முதன்முறையாக ஏனாமில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதுச்சேரியில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மாணவர்கள் "ஆப்சென்ட்" ஆனாலோ, தாமதமாக வந்தாலோ, பெற்றோர்களின் மொபைல் போனுக்குபள்ளியில் இருந்து தகவல் பறக்கும்.மேலும், ரேங்க் கார்டு வழங்குவது, பெற்றோர் சந்திப்பு கூட்டம், விடுமுறை போன்ற விபரங்களும் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.சில பள்ளிகளில் மாணவர்கள் செய்ய வேண்டிய வீட்டு பாடங்கள், தினசரி தேர்வில் எடுத்த மார்க் போன்ற தகவல்களும் எஸ்.எம். எஸ்., மூலம் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.இதன்மூலம், மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் "கட்" அடித்தால் உடனடியாக தகவல் தெரிந்து கண்டிக்க முடியும் என்பதால், இத்திட்டம், பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் திட்டத்தை அரசு பள்ளிகளிலும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து, "இ-வித்யா" என்றபெயரில் இந்த திட்டம் முதன் முறையாக ஏனாம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.முதற்கட்டமாக ஏனாம் நகரப் பகுதியில் அமைந்துள்ள ராஜிவ்காந்தி அரசு ஆங்கில உயர்நிலைப்பள்ளி, கிரையம்பேட்டாவில் உள்ள காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில், "இ-வித்யா" செயல்பாட்டுக்கு வருகிறது.மத்திய அரசு திட்டமான சர்வ சிக்ஷா அபியான் (அனைவருக்கும் கல்வித் திட்டம்) உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள, "இ-வித்யா" திட்டப் பணிகளில் ஏனாமில் உள்ள தேசிய தகவல் மைய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இரு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் மொபைல் போன் உள்ளிட்ட விபரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
இரு பள்ளிகளை தொடர்ந்து ஏனாமில் உள்ள மற்ற பள்ளிகளில் இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது.இதைதொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், "இ-வித்யா" திட்டத்தை அமல்படுத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது
Saturday, October 26, 2013
1.2 கோடி மாணவர்களின் விவரம்: இணையதளத்தில் பதிவு
தமிழகத்தில், அனைத்து
விதமான பள்ளிகளில் படிக்கும், 1.3 கோடி மாணவ, மாணவியரில், 1.2 கோடி பேரின்
முழுமையான விவரங்கள், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதம் உள்ள, 10
லட்சம் மாணவர்களின் பதிவுகள், நவம்பர் இறுதிக்குள், பதிவு செய்யப்படும்"
என, பள்ளி கல்வித்துறை, முதன்மை செயலர், சபிதா தெரிவித்தார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, அனைத்து
வகையான பள்ளிகளில் பயிலும், மாணவ, மாணவியரைப் பற்றிய விவரங்களை, இணைய
தளத்தில் பதிவு செய்து, அவர்களுக்கு, "ஸ்மார்ட் கார்டு" வழங்க, பள்ளி
கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவரைப்
பற்றிய, அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படுகின்றன.
மாநிலத்தில், பிளஸ் 2 வரை, 1.3 கோடி மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இவர்களில், இதுவரை, 1.2 கோடி மாணவ, மாணவியரின் விவரங்கள், இணையதளத்தில்
பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா
தெரிவித்தார்.
இது குறித்து, அவர், மேலும் கூறியதாவது: இணையதளத்தில் தகவல்கள்
பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களுக்கு, படிப்படியாக, "ஸ்மார்ட் கார்டு"
வழங்கப்பட்டு வருகிறது. மீதம் உள்ள, 10 லட்சம் மாணவர்கள் குறித்த
விவரங்களை, நவம்பர் இறுதிக்குள் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளோம். ஒரு
மாணவர், ஒரு பள்ளியை விட்டு, வேறொரு பள்ளியில் சேர, "ஸ்மார்ட் கார்டை"
பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதேபோல், ஒரு மாணவர், தற்போது என்ன வகுப்பு படிக்கிறார்; படிக்கிறாரா,
இல்லையா; படிப்பை பாதியில் நிறுத்தி விட்டாரா என்பது உட்பட, அனைத்து
தகவல்களையும், ஒருங்கிணைந்த பள்ளி மேலாண்மை தகவல் அமைப்பு முறை மூலம் அறிய
முடியும். அதேபோல், மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட பணிகளையும்,
இத்திட்டத்தின் கீழ் கண்காணிக்க முடியும். இவ்வாறு, செயலர் தெரிவித்தார்.
Tuesday, October 15, 2013
எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி திட்டத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை.......
கட்டாய கல்வி சட்டத்தின்கீழ், 8ம் வகுப்பு
வரையான மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி "அனைவரும் பாஸ்" என்ற திடத்திற்கு,
பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், அது பரிசீலனைக்கு
உட்படுத்தப்படவுள்ளது.
ஹரியானா மாநில கல்வி அமைச்சர் கீதா புக்கலின்
தலைமையிலான கல்விக்கான தேசிய ஆலோசனை வாரியத்தின் துணை கமிட்டி, இதுதொடர்பான
சிக்கலை ஆராய்ந்து வருகிறது மற்றும் இந்த கமிட்டி, அக்டோபர் 23ம் தேதி
தனது அறிக்கையை மனிதவள அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது. மேலும், இந்தக்
கமிட்டியானது, அனைவரும் பாஸ் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு
தெரிவித்துவரும் நாடாளுமன்ற பேனலையும் சந்திக்கவுள்ளது.
பல மாநிலங்கள் இந்த "அனைவரும் பாஸ்"
திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏனெனில், 9ம்
வகுப்புவரை எந்த சிக்கலுமின்றியும், கடின உழைப்பின்றியும் கடந்துவரும்
மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை முதன்முதலாக எதிர்கொள்ளும்போது கடும்
நெருக்கடியை சந்திக்கின்றனர். இதனால், அவர்களின் நிலை மட்டுமின்றி,
ஆசிரியர்களின் நிலைமையும் சிக்கலுக்கு உள்ளாகிறது என்று இந்த அம்சத்தை
எதிர்ப்பவர்கள் வாதிடுகிறார்கள்.
மத்திய மனிதவள இணையமைச்சர், இந்த கமிட்டியின்
அறிக்கையை, அடுத்த கூட்டத்திற்கு முன்னதாகவே சமர்ப்பித்து விடுமாறு,
ஹரியானா அமைச்சர் புக்கலிடம் கூறியுள்ளார். ஏனெனில், இதன்மூலம் அடுத்து
நடைபெறும் கூட்டத்தில் இதைப்பற்றி தெளிவாக விவாதிக்க முடியும் என்பதால்
இவ்வாறு அறிவுறுத்தப்படுவதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்வே இல்லாத இந்த "அனைவரும் பாஸ்" திட்டம்,
மாணவர்களின் சுய திருப்தியை பாதிப்பதோடல்லாமல், ஆசிரியர்களின் திறனையும்
பாதிக்கிறது என்பதால், இத்திட்டத்தை மறுஆய்வு செய்யுமாறு, மத்திய மனிதவள
அமைச்சகத்தை இந்தக் கமிட்டி கேட்டுக்கொள்ளும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்களுக்கான சர்வதேச அடையாள அட்டை
மாணவர்கள் மாவட்டங்கள், மாநிலங்களை கடந்து நாடு
விட்டு பிற நாடுகளுக்கு சென்று படிப்பது இன்று சாதாரண ஒன்றாகி விட்டது.
எங்கு சென்றாலும் நமக்கானதொரு அடையாளம் தேவைப்படுகிறது.
எங்கு சென்றாலும் நமக்கானவற்றைப் பெறுவதற்கு,
நம்மை மிகச் சரியாக அடையாளப்படுத்திக் கொள்ளவும், சட்ட ரீதியான, சமூகப்
பாதுகாப்பு, சலுகைகள் போன்றவற்றை பெறுவதற்கும் ஒரு அடையாள அட்டை
தேவைப்படுகிறது.
நம் தமிழகத்திலே கூட பள்ளி, கல்லூரி மாணவர்
அடையாள அட்டை இருந்தாலும், பேரூந்தில் இலவசமாக பயணிப்பதற்கு அரசாங்கம்
தனியாக ஒரு அடையாள அட்டையை வழங்குகிறது. அது தவிர பள்ளி மாணவர்கள் அடையாள
அட்டையைக் கொண்டு பள்ளிச் சீருடைகள் தள்ளுபடி விலையில் ஒரு சில கடைகள்
தருகின்றன, கல்லூரி அடையாள அட்டையைக் கொண்டு பல பொழுதுபோக்கு நிறுவனங்கள்
தள்ளுபடிகளை தருகின்றன.
மாணவர் அடையாள அட்டையை படிக்கும் கல்லூரிகள்,
பள்ளிக்கூடங்கள் வழங்கினாலும் அதற்கான பொதுவான அங்கீகாரம் என்பது அனைத்து
இடங்களிலும் இருப்பதில்லை.
தமிழக மாணவர்கள் வேறு மாநிலத்திற்கு
செல்லும்பொழுதோ, வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் மாணவர்கள் அங்கிருந்து
விடுமுறைக்கு தம் சொந்த நாட்டிற்கு வரும்போதோ அல்லது பயிற்சி படிப்பிற்காக
வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு செல்லும்பொழுதோ, அந்த இடத்தில்
மாணவர் சலுகைகளை பெற முடியாத நிலைக்கு உள்ளாகின்றனர்.
இந்த குறையைப் போக்கும் வகையில்
கிடைத்திருப்பதுதான் சர்வதேச மாணவர் அடையாள அட்டை(ISIC). யுனெஸ்கோ
நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே சர்வதேச மாணவர் அடையாள அட்டையாக இது
விளங்குகிறது.
124 நாடுகளில் பயன்படுத்தக்கூடிய இந்த மாணவர்
அடையாள அட்டையைக் கொண்டு சில்லறை விற்பனை கடைகள், உணவகங்கள், போக்குவரத்து
நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், எழுது பொருட்கள், புத்தக விற்பனை
நிலையங்கள் போன்ற 1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில்
சலுகைகளைப் பெறுவதற்கு இந்த அட்டை உதவுகின்றது.
தகுதி
முழு நேர படிப்பாக படிக்கும் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் எவரும் ஆன்-லைன் வழியாக அடையாள அட்டையைப் பெறலாம்.
கட்டணம்
வருடத்திற்கு 500 ரூபாய் மற்றும் வரிகள் சேர்த்து கட்ட வேண்டியது இருக்கும்.
எங்கு விண்ணப்பிக்கலாம்?
ISIC இன் www.isic.co.in/apply என்ற இணைய
பக்கம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்களுக்கு அஞ்சல் வழியாக
அடையாள அட்டை அனுப்பப்படும்.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.isic.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Subscribe to:
Posts (Atom)