Tuesday, June 3, 2014
Saturday, May 31, 2014
தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயத்துள்ள பள்ளிக் கட்டண விபரம்
Private Schools Fee Structure 2013-2016
TN Private Schools Fee Determination Committee - Latest up dated (inclusive order on Objection) Fee Structure 2013-2016
Justice Thiru S.R Singaravelu,
Chairman,
Private Schools Fee Determination Committee,
Chennai - 600 006.
Fee Structure for the year 2013-2016
District wise Particulars Latest updated
(inclusive order on Objection)
District | |
Ariyalur | Fixation |
Chennai | Fixation |
Coimbatore | Fixation |
Cuddalore | Fixation |
Dharmapuri | Fixation |
Dindigul | Fixation |
Erode | Fixation |
Kancheepuram | Fixation |
Kanyakumari | Fixation |
Krishnagiri | Fixation |
Madurai | Fixation |
Nagapattinam | Fixation |
Namakkal | Fixation |
Perambalur | Fixation |
Pudukkottai | Fixation |
Ramanathapuram | Fixation |
Salem | Fixation |
Sivagangai | Fixation |
Thanjavur | Fixation |
The Nilgiris | Fixation |
Theni | Fixation |
Thiruvallur | Fixation |
Thiruvarur | Fixation |
Tiruchirappalli | Fixation |
Tirunelveli | Fixation |
Tiruppur | Fixation |
Tiruvannamalai | Fixation |
Tuticorin | Fixation |
Vellore | Fixation |
Villupuram | Fixation |
Virudhunagar | Fixation |
Thursday, May 29, 2014
அளவுகோள் அற்ற அளவீடு - அடிப்படையே தவறு
இன்றைய ஊடகங்களும், கல்விக்கும் அதன் வளர்ச்சிக்கும் கடுகளவும் தன்னை வருத்திக்கொள்ளாதவர்களும் கல்வியை காப்பாற்றுவதாகக் கூறி அதன் மீது
சேற்றை பூசுபவர்களும் 12ம் வகுப்பு பொதுத் (எழுத்து) தேர்வின் தேர்ச்சி
விகிதத்தை மட்டுமே அளவுகோளாகக் கொண்டு தனியார் பள்ளிகளையும் - அரசு பள்ளிகளையும்
ஒப்பிடுவது அடிப்படையிலேயே தவறானது. அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அதிகாரிகள்
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது
அதைவிடவும் தவறானது.
ஏன் தெரியுமா? இதோ
கீழே அதற்கான எதார்த்தமான உண்மைகள்…….
தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு
கிடைக்கும் வசதிகளும் வாய்ப்புகளும் - அரசுபள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும்
கிடைக்கிறது என யாராவது உறுதி தர முடியுமா?
தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின்
வாழ்க்கைத் தரமும் - அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கைத் தரமும் சம
அளவானதுதான் என யாராவது கூற முடியுமா?
பெற்றோர் என்ற வகையில் தனியார் பள்ளியில்
படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் கவனிப்பு - அரசு பள்ளியில் படிக்கும் அனைத்து
மாணவர்களுக்கும் கிடைக்கிறது என யாராவது கூற முடியுமா?
தனியார் பள்ளியில் பெற்றோர்/மாணவர்கள் மீது
தினிக்கப்படும் சட்ட திட்டங்களை - அரசுபள்ளியிலும் செயல்படுத்த முடியும் என்றோ
அல்லது அதற்கான வழி வகைகள் உள்ளது என்றோ யாராவது கூற இயலுமா?
தனியார் பள்ளியில் பணியாற்ரும் ஆசிரியர்களுக்கு
கற்பித்தல் பணியைத் தவிற பிற பணிகள் ஏதும் வழங்கப்படுவதில்லை என்ற நிலைப்பாட்டை -
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் செயல்படுத்த யாராவது முன்வருவார்களா?
தனியார் பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு
படிப்பு மட்டுமே முழு நேர தொழில் - அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் இதைச்
செயல்படுத்திட அவர்களின் குடும்பச் சூழல் உகந்ததாக உள்ளது என யாராவது கூற முடியுமா?
தனியார் பள்ளி மாணவனின் கல்விக்காக அவனது
ஒட்டுமொத்த குடும்பமும் தம்மை அர்ப்பனித்துக் கொண்டு செயல்படுகிறது - அரசு பள்ளி
மாணவனுக்கும் இதே அளவி ஒத்துழைப்பு அவனது குடும்பத்திலிருந்து கிடைக்கிட யாராவது
உத்தரவாதம் தர இயலுமா?
அரசுப் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச்
சட்டத்தின் படி வயதுக்கேற்ற வகுப்பில் மாணவரைச் சேர்க்க (இதற்கு முன்பு பள்ளியே
செல்லாதவராய் இருந்தாலும் கூட)வலியுறுத்தும் அதிகாரிகள் மற்றும் கல்வி ஆர்வலர்கள்
எனப்படுவோர் இது போன்ற முறையில் தனியார் பள்ளியில் எத்தனை மாண்வர்கள்
சேர்க்கப்பட்டுள்ளனர் எனக் கூற முடியுமா?
பள்ளியே செல்லாத/பள்ளியை விட்டு இடையில் நின்ற
மாணவர் எந்த வயதுடையவராக இருந்தாலும் (14 வதுக்குள்), அண்டின் எந்த
மாதத்தில் எந்த நாளில் வந்தாலும் அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற சட்டம் -
தனியார் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படுகிறதா? இது வரையில் எந்தப் பள்ளியில் எத்தனை மாணவர்கள்
சேர்க்கப்பட்டுள்ளார்கள் விபரம்தர யாராவது தயாரா?
10ம் வகுப்பில் 5 பாடங்களுக்கும் தனித்தனியே தேர்ச்சி மதிப்பெண்
அட்டை வைத்திருப்பவரெல்லாம் கூட (முதல் தேர்வில் 5பாடங்களிலும் தோல்வி கண்டவர்) அரசுப்பள்ளியில் 11ம் வகுப்பில் சேரத்தகுதியானவராகக் கருதப்பட்டு
சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள் - இதே போன்ற நிலையை எந்த ஓர் தனியார் பள்ளியிலாவது
காட்ட இயலுமா?
அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் ,ஆசிரியர்களுக்கும் மாதத்தின் பல நாட்களில் வழங்கப்படும் அலுவலகப் பணிகள் – தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகிறதா?
தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை எந்த ஓர் பெற்றோரும் அல்லது பொதுமக்களும் பள்ளி வளாகத்தில் நேரடியாகச் சந்திக்க இயலாது – இத்தகைய பாதுகாப்பு அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் உண்டா?
அரசுப் பள்ளியில்
தேசிய பசுமைப் படை, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், தேசிய மாணவர் படை, தேசிய சாரணியர் இயக்கம், செஞ்சுருள் சங்கம், நுகர்வோர் சங்கம்,
என பல்வேறு அமைப்புகள் செயல்படுத்த வேண்டுமென்ற கட்டாய ஆணை உள்ளது. இது போன்ற அமைப்புகள் எத்தனை தனியார் பள்ளிகளில் உள்ளது எனக் கூற முடியுமா?
இதனை வேறுபாடுகளுக்கும் இடையில்தான் அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாவட்ட , மாநில, தேசிய அளவில் சிறப்பிடம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள்.
இத்தனை வேறுபாடுகள் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கிடையே உள்ளபோது வெறும் தேர்ச்சி சதவீதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இருவேறு பள்ளிகளையும் ஒப்பிடுவது எவ்வகையில் நியாயம், சிந்திப்பீர் தெளிவு பெறுவீர்.
ஆக்கம்………
கவி.செங்குட்டுவன் (எ) செ. இராஜேந்திரன்,
மாவட்டத்தலைவர்,
தமிழக ஆசிரியர் கூட்டணி, ஊத்தங்கரை
கிருஷ்ணகிரி மாவட்டம்
தமிழ் படித்தால் தான் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியும் - கல்வித்துறை அறிவிப்பு
தமிழ் படித்தால் தான் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியும் கல்வித்துறை அறிவிப்பு
அடுத்த கல்வியாண்டு (2015-16) முதல், அனைத்து
பள்ளிகளிலும் 10ம் வகுப்பில் தமிழ் முதல்பாடமாக இருக்க வேண்டும். அப்பொழுது
தான் அரசு பொதுத்தேர்வு எழுத முடியும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னையில், அமைச்சர் வீரமணி தலைமையில்,
பள்ளிகல்வித்துறை ஆய்வுக்கூட்டம் நடந்தது. முதன்மை செயலர் சபீதா,
அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, மெட்ரிக் பள்ளி
இயக்குனர் பிச்சை, உயரதிகாரிகள், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி
அதிகாரிகள், தொடக்ககல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் கலந்து
கொண்டனர். மாவட்ட வாரியாக, பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம், அதை
அதிகரிப்பது எப்படி, மாணவர்களுக்கு அரசின் இலவச நலத்திட்டங்களை வழங்குவது
உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த கல்வியாண்டு(2015-16)
முதல், மெட்ரிக் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும், 10ம்வகுப்பில், தமிழ்
முதல் பாடமாக இருக்க வேண்டும். இல்லையெனில், அம்மாணவர்கள், அரசு
பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
ஜெயக்குமார் கூறியதாவது: ஆறாம் வகுப்பில், தமிழ் முதல்பாடமாக கட்டாயம்
இருக்க வேண்டுமென, முன்னர் அமல்படுத்தப்பட்ட திட்டம், படிப்படியாக
அடுத்தடுத்த வகுப்புகளுக்கு கொண்டுவரப்பட்டு, அடுத்த கல்வியாண்டில், 10ம்
வகுப்பில் அமல்படுத்தப்படுகிறது. தமிழ் முதல்பாடமாக இருந்தால் மட்டுமே,
அப்பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியும். மாறாக, மலையாளம், இந்தி,
தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் உள்ளிட்டவற்றை முதல்பாடமாக எடுத்தால்,
அவர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என
தெரிவிக்கப்பட்டது. தமிழ் பாடத்தை கட்டாயமாக்கும் நோக்கிலேயே இவ்வாறு
கூறப்பட்டது. தற்போது, பிற மொழியை, முதல் பாடமாக எடுத்து படிக்கும்
மாணவர்கள், 500க்கு 500 பெற்றாலும், அவர்களுக்கு, மாநில ரேங்க்
தரப்படுவதில்லை. கடந்த கல்வியாண்டில், 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு
அடைவுத்திறன் தேர்வு நடத்தப்பட்டது. அதில், குறைந்த மதிப்பெண் பெற்ற
மாணவர்களுக்கு, அவர்களை மேம்படுத்தும் நோக்கில், தமிழ், ஆங்கிலத்தில்
வாசிப்பு, எழுத்து பயிற்சி, கணிதப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது, என்றார்.
துவக்கக்கல்வி - ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
துவக்கக்கல்வியின் தரம் மேம்பட ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
தமிழகத்தில் துவக்கக்கல்வி தரத்தை மேம்படுத்த,
ஆசிரியர்களுக்கு வரும் கல்வியாண்டில் சிறப்பு பயிற்சி அளிக்க
திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் முழு அடிப்படை வசதிகள் உள்ள
துவக்கப்பள்ளிகளில், புத்தகங்கள் வாசிப்பு, ஆங்கில உச்சரிப்பு, கணித
உபகரணங்களை பயன்படுத்துவதில் ணவர்களின் தனித்திறன்களை
வெளிப்படுத்த, ஆசிரியர்களுக்கு கூடுதல் சிறப்பு பயிற்சி அளிக்க
திட்டமிடப்பட்டுள்ளது.
பாடப்புத்தகங்களில் எப்பகுதியில் இருந்து கேள்விகள்
கேட்கப்பட்டாலும், விடை எழுதுதல் தொடர்பாக, தேர்வுகளுக்கு தயார்படுத்துதல்,
எளிதாக ஆங்கிலம், கணிதம் கற்பித்தல் குறித்து, ஜூன் 2ல் பள்ளிகள்
திறக்கப்பட்டு பாடப்புத்தகங்கள், நோட்டுகள், கணித கருவிகள் வழங்கியதும்,
பயிற்சி அளிக்கப்பட உள்ளது என, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரி ஒருவர்
கூறினார்.
ஜூன் 2ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு: இயக்குநர் திட்டவட்டம்
கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 2ல் மீண்டும்
பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன்
தெரிவித்தார். மதுரையில் 11 மாவட்டங்களில், கல்வித் துறை தணிக்கை தடைகளை
நீக்குவது, குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. மாநில கணக்காயர்
சந்தான வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இயக்குனர் ராமேஸ்வரமுருகன் கூறியதாவது: அனைத்து
பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2ல் திறக்கப்படும். இதில் மாற்றம்
இல்லை. பிளஸ் 1 வகுப்புகள் ஜூன் 16ல் துவங்கும். மாநிலத்தில்
கடந்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர்கள்
தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு பத்தாம் வகுப்பு
தேர்வில், அரசு பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறையவில்லை, என்றார். மீனாட்சி
சுந்தரேஸ்வரர் பள்ளியில் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கும்
பணிகளை அவர் ஆய்வு செய்தார். மாவட்டத்தில், 2,48,252 பாடப் புத்தகங்கள்,
1,82,541 நோட்டுக்கள், 43,775 மாணவர்களுக்கான சீருடைகள் வழங்கும் பணி
நடக்கிறது.
மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு - நுழைவுச்சீட்டு
மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு ஹால் டிக்கட் TNPSC இணையதளத்திலிருந்து தற்போது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
தற்போது 11 காலிப்பணி யிடங்களை நிரப்ப அறிவிக்கப் பட்டுள்ள டி.இ.ஓ. தேர்வில் முதல்நிலைத் தேர்வு ஜூன் 8-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு ஹால் டிக்கட் TNPSC இணையதளத்திலிருந்து தற்போது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
தற்போது 11 காலிப்பணி யிடங்களை நிரப்ப அறிவிக்கப் பட்டுள்ள டி.இ.ஓ. தேர்வில் முதல்நிலைத் தேர்வு ஜூன் 8-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு ஹால் டிக்கட் TNPSC இணையதளத்திலிருந்து தற்போது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஜூன் மாதம் 8-ந்தேதி காலை DEO
பதவிக்கு முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. மொத்த காலிப்பணியிடங்கள் 2342
உள்ளன. எழுத்து தேர்வு நடத்த உள்ளது. இத்தேர்வுக்கு 20000 பேர்
விண்ணப்பித்தனர். அவர்களில் 709 பேர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளன. .
பெரும்பான்மையான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு உரிய கல்வித்தகுதி
இல்லாததே காரணம் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)