Friday, October 24, 2014

தமிழ்நாட்டில் அனைத்து வகையான சான்றிதழ்களை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள்:

  1. சாதி சான்றிதழ்
  2. வருமான சான்றிதழ்
  3. பிறப்பிடச் சான்றிதழ்
  4. இருப்பிடச் சான்றிதழ்
  5. வேளாண் சேவை இணைப்பு படிவம்
  6. விற்பகர் சான்றிதழ் - உரங்கள் (படிவம் அ)
  7. புதுப்பித்தல் சான்றிதழ் - உரங்கள் (படிவம்)
  8. பூச்சிக்கொல்லி பதிவு செய்வதற்கான சான்றிதழ்
  9. பூச்சிக் கொல்லி தயாரிப்புக்கான உரிமத்தை புதிப்பிக்கும் சான்றிதழ்
  10. பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல்  உரிமம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
  11. பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல்   புதுப்பித்தல்கான விண்ணப்படிவம்
  12. தமிழ்நாட்டில் குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
  13. சமூக நலம

Thursday, October 23, 2014

4 பேருக்கு முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு

CEO PROMOTION | 4 பேர் முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலூரில் உள்ள அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் நேற்று பதவி ஏற்றார். 4 பேர் முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:- கரூர் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி பொன்னம்மாள் பதவி உயர்வு பெற்று, கரூர் அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பொள்ளாச்சி மாவட்ட கல்வி அதிகாரி சண்முகவடிவு, பதவி உயர்வு பெற்று அனைவருக்கும் கல்வி திட்ட தஞ்சாவூர் முதன்மை கல்வி அதிகாரியாக பணிஅமர்த்தப்பட்டார். திண்டுக்கல் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி ஜெயமீனா தேவி பதவி உயர்வு பெற்று, வேலூர் அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கோவில்பட்டி மாவட்ட கல்வி அதிகாரி பத்மாவதி பதவி உயர்வு பெற்று, ராமநாதபுரம் அனைவருக்கும் கல்விதிட்ட முதன்மை கல்வி அதிகாரியாக செல்கிறார். இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி பட்டய சான்று (DIPLOMA IN TEACHER EDUCATION), மேல்நிலைக் கல்விக்கு(+2) இணையாக கருதி தமிழக உத்தரவு

      பொது பணிகள் - இணை கல்வித் தகுதி நிர்ணயம் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி - பட்டய சான்று (DIPLOMA IN TEACHER EDUCATION), மேல்நிலைக் கல்விக்கு(+2) இணையாக கருதி தமிழக உத்தரவு

Sunday, October 19, 2014

நல்லாசிரியர் விருது - பாராட்டுவிழா


            தமிழக அரசால் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது (மாநில நல்லாசிரியர் விருது) வழங்கி சிறப்பிக்கப்பட்ட ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்களுக்கு  ஊத்தங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில், இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினர் திரு திருச்சி சிவா அவர்கள் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.
             அப்போது அவர் அறிஞர் அண்ணா, ஈ.வே.இரா. பெரியார் ஆகியோரின் பிறந்தநாள் சிறப்பு சொற்பொழிவாக தென்றலும் - புயலும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.



















Saturday, October 18, 2014

பட்டப்படிப்புக்கு முன்பு பிளஸ்-2 படிக்காத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

      பட்டப்படிப்புக்கு முன்பு பிளஸ்-2 படிக்காத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தகுதியுடன், ஆசிரியர் பயிற்சி முடித்த தர்மன் உட்பட 6 பேர் கடந்த 1985-87-ம் ஆண்டுகளில் அரசுப்பள்ளி ஆசிரியராக நியமிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் நடத்திய நுழைவுத் தேர்வை எழுதி பாஸ் செய்து, பி.லிட், பட்டம் பெற்றனர். அதன் பின்னர் பி.எட். படித்து முடித்தனர். இந்த நிலையில், 131 தமிழ் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியலை கடந்த ஆண்டு ஜனவரியில் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. அந்தப்பட்டியலில் தர்மன் உட்பட 6 பேரின் பெயர் இல்லை. எனவே, பள்ளிக் கல்வித்துறையிடம் முறையிட்டனர். பிளஸ்-2 படிக்காமல் பட்டம் படித்துள்ளதால், அதை பதவி உயர்வைப்பெறும் தகுதியாகக் கருத முடியாது என்று அந்தத் “துறை கூறிவிட்டது. இதுகுறித்து ஐகோர்ட்டில் 6 பேரும் மனு தாக்கல் செய்தனர். அதில், யு.ஜி.சி. (பல்கலைக்கழக மானியக்குழு) விதிகளின்படி எங்களுக்கு பதவி உயர்வு பெறும் தகுதி உள்ளதால் பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- யு.ஜி.சி. விதிப்படி, பிளஸ்-2 முடித்துவிட்டு பட்டப்படிப்பில் சேரலாம். பிளஸ்-2 படிக்கவில்லை என்றால், பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம். இரண்டாவது முறைப்படி மனுதாரர்கள் பட்டம் படித்துள்ளனர். அதன்பிறகு அவர்கள் பிளஸ்-2-விலும் தேர்ச்சி பெற்றனர். ஆனாலும் யு.ஜி.சி. முறைப்படியே அவர்கள் பட்டம் படித்தனர். அதை அவர்கள் படித்த பல்கலைக்கழகங்களும் ஏற்றுள்ளன. எனவே, மனுதார்கள் பெற்ற பட்டம் செல்லும். அதன்படி, மனுதாரர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியானவர்கள். எனவே பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களுக்கு 8 வாரங்களுக்குள் பதவி உயர்வு அளிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TET தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை

         23.08.2010க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவுற்ற பணி நாடுநர்களுக்கு, 23.08.2010க்குப் பின்னர் பணி நியமனம் வழங்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என்று அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சார்பில் தகுதிகாண் பருவத்தினை முடித்து ஆணை வழங்குவதில் காலதாமதம் ஏதும் இன்றி செயல்படவும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்ப்பட்டுள்ளனர்.