தமிழக அரசால் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது (மாநில நல்லாசிரியர் விருது) வழங்கி சிறப்பிக்கப்பட்ட ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்களுக்கு ஊத்தங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில், இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினர் திரு திருச்சி சிவா அவர்கள் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.
அப்போது அவர் அறிஞர் அண்ணா, ஈ.வே.இரா. பெரியார் ஆகியோரின் பிறந்தநாள் சிறப்பு சொற்பொழிவாக தென்றலும் - புயலும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
No comments:
Post a Comment