Friday, October 17, 2014

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருடன் சந்திப்பு………



இன்று கிருஷ்ணகிரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு ஜி. இராஜேந்திரன் அவர்களை அவரது அலுவலகத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டக் கிளை சார்பில் சந்தித்தோம்.
அப்போது அவர் நமது இயக்கத்தின் மீதும் இயக்கக் கோட்பாடுகள் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தமையும், அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு, அகில இந்திய செயலாளர் மரியாதைக்குறிய அண்ணன் வா. அண்ணாமலை அவர்களின் செயல்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டமை மன மகிழ்வைத் தந்தது.
அதே சமயத்தில் அவர் மாவட்டக் கல்வி வளர்ச்சியில் காட்டிய அக்கரையும், அதை மேம்படுத்திட மேற்கொள்ள உள்ள அடுத்தகட்ட செயல் திட்டங்களையும் கூறி அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்பையும்   வேண்டியது பாராட்டத்தக்கது. தாம் பணியாற்றும் காலத்தில் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி சிறந்து விளங்கிட வேண்டுமென்ற அவரின் அவா நிறவேற எமது இயக்க ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக நாங்கள் உறுதி அளித்தோம்.
மேலும் அவர் ஆசிரியர்கள் தேவைகள், பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் தொலைபேசி வாயிலாக தமக்குத் தெரிவித்தாலே போதும், தான் அவற்றை உடன் நிறைவேற்றித் தருவதாகவும், நேரில் வந்துதான் தெரிவிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை எனவும் கூறியமை அவர் மீது மிகுந்த மரியாதையை மேலோங்கச்செய்தது. அவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்




No comments:

Post a Comment