Friday, January 9, 2015
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசு; தமிழக அரசு அறிவிப்பு .......
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை போனஸ் வழங்கப்படும்
என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில், ஏ, பி பிரிவைச்
சேர்ந்தவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் சி,டி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு
ரூ.3,000 வரையிலும் போனஸாக அளிக்கப்படும் என அறிவிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு
போனஸ், சிறப்பு போனஸ் ஆகியன தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த
ஆண்டு வழங்கப்பட்டதைப் போன்று, இந்த ஆண்டும் வழங்க முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
அதன் விவரம்: கடந்த 2013-14-ஆம் ஆண்டுக்கு சி, டி தொகுதியைச் சேர்ந்த
அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3,000 என்ற உச்சவரம்புக்குள்பட்டு 30
நாள்கள் ஊதியத்துக்கு இணையாக மிகை ஊதியம் வழங்கப்படும்.
ஏ, பி தொகுதியைச் சேர்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள் கடந்த நிதியாண்டில்
குறைந்தபட்சம் 240 நாள்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து வருவோருக்கு
சிறப்புமிகை ஊதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
அதாவது, சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட
ஊதியம் பெறும் முழுநேர, பகுதி நேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும்
பணியாளர்கள், சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப்
பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில்
பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், பஞ்சாயத்து
உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தாற்காலிக
உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள், ஒரு பகுதி தினக்
கூலிகளாக பணியாற்றி பின்பு நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள்
ஆகியோருக்கு இந்த சிறப்பு மிகை ஊதியம் அளிக்கப்படும்.
உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில்
பணிபுரியும் அலுவர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக் குழு,
அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்
ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்தியப் பணி
விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்த மிகை-சிறப்பு
மிகை ஊதியம் வழங்கப்படும்.
ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும்.
பொங்கலை ஒட்டி வழங்கப்படும் போனஸ், சிறப்பு போனஸ் வழங்க அரசுக்கு ரூ.326.49
கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Thursday, January 1, 2015
Tuesday, December 30, 2014
பள்ளி மாணவர் ஆதார் எண்ணை பெற்று பதிவு செய்யுங்கள் - தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி துறை உத்தரவு
'பள்ளி மாணவர்களின் ஆதார் எண்களை பெற்று, அதை கட்டாயம் பதிவு செய்ய
வேண்டும்' என, தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் தலைமை
ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கக, மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி,
சமீபத்தில் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளிகள்
இயக்குனர்களுக்கு, கடிதம் ஒன்றை அனுப்பினார். அக்கடிதத்தில், மாணவர்கள்
குறித்த தகவல்கள், ஆதார் எண் பதிவு செய்தல் குறித்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், இதுகுறித்த
உத்தரவுகள், சம்பந்தப்பட்ட இயக்குனர் அலுவலகங்களில் இருந்து
பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
* கல்வி தகவல் மேலாண்மை முறை இணையதளத்தில், 2012 - 13ம் கல்வியாண்டில்
இருந்து, பள்ளிகள் விவரங்கள் அடிப்படையில், தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டு
உள்ளது. அதை சரிபார்த்து, நடப்பு கல்வியாண்டிற்கு, புதிய பள்ளிகள்,
விடுபட்ட பள்ளிகள் விவரங்களை பதிய வேண்டும்.
* 2014 - 15ல், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின்
விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்யும் பணிகளை, ஜன., 31க்குள் முடிக்க
வேண்டும். அதன்பின், தலைமை ஆசிரியர்கள், மாணவர் வருகை பதிவுடன், விவரங்களை
சரிபார்க்க வேண்டும். ஆய்வு அலுவலரிடமும் சமர்ப்பிக்க வேண்டும்.
* ஒன்று முதல் பிளஸ் 2 மாணவர்கள் வரை, ஆதார் எண்களை பெற்று, கல்வி தகவல்
மேலாண்மை முறை இணையதளத்தில் பதிவு செய்ய, தயார் நிலையில் இருக்க வேண்டும்.
* ஒவ்வொரு பள்ளியிலும், ஆதார் எண் பெற்ற, பெறாத மாணவர்கள் எண்ணிக்கை
விவரங்களை, ஆய்வு அலுவலர்கள் பெற்று, தகவல் மேலாண்மை முறை மாநில
மையத்திற்கு அனுப்ப வேண்டும்.
சிறப்பு முகாம்
* அதிகளவில் ஆதார் எண் பெறாத பகுதிகளை, மாவட்ட ஆய்வு அலுவலர்கள்
கண்டறிந்து, அந்த பகுதி அல்லது மண்டலங்களில், மாணவர்களுக்கு சிறப்பு
முகாம்கள் நடத்தி, ஆதார் அட்டை வழங்க, மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம்
அனுப்ப வேண்டும்.
* மாணவர்களின் பெற்றோர் மொபைல் எண், மின் அஞ்சல் முகவரி, எடை உயரம் ஆகிய
விவரங்களை பெற்று, இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இவ்வாறு, பள்ளிகளுக்கு
அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Monday, December 29, 2014
Sunday, December 28, 2014
பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களின் தகவல் தொகுப்பு விவரங்களை இணையதளத்தில் 2014-15ம் ஆண்டிற்கு மேம்படுத்துதல் சார்ந்த திட்ட இயக்குனரின் அறிவுரைகள்
Subscribe to:
Posts (Atom)