Sunday, March 8, 2015

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜேக்டோ பேரணி....


           இன்று (08.03.2015) கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) சார்பில் நடைபெற்ற மாபெரும் பேரணி மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் துவக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரையிலான அனைத்து நிலை ஆசிரியர் சங்கங்களின் ஆசிரியர்களும்  எழுச்சியுடன் கலந்துக்கொண்டனர். இப்பேரணியில் 3000க்கும் மேற்பட்ட இருபால் ஆசிரியர்கள் பங்குபெற்றனர்.
        கிருஷ்ணகிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கிய பேரணி நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று மீள அதே இடத்திற்கு வந்தடைந்தது. பேரணியில் வந்த இருபால் ஆசிரியர்களும் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழங்கினர்.

















































Thursday, March 5, 2015

08.03.2015 ஜேக்டோ பேரணிக்கான ஆசிரியர் சந்திப்புகள்........


               08.03.2015 அன்று நடைபெற உள்ள ஜேக்டோவின் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கான, ஊத்தங்கரை ஒன்றியத்தில் அனைத்து ஆசிரியர் இயக்க பொருப்பாளர்களும் ஒன்று சேர்ந்து மூன்று குழுக்களாக பிரிந்து ஒன்றியம் முழுமையும் உள்ள அனைத்து துவக்க, உயர்துவக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு நேரிடையாகச் சென்று ஆசிரியர்களை சந்தித்து பேரணியில் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 
  அதில் எனது தலைமையில் இன்று நடைபெற்ற ஆசிரியர் சந்திப்பு நிகழ்வுகள்..........














Sunday, March 1, 2015

தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே-2015


             தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மே 2015 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.

அறிவிக்கை நாள் : 1.03.2015

விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.3.2015.

விவரங்களுக்கு :
www.tnpsc.gov.in

Saturday, February 28, 2015

08.03.2015 ஜேக்டோ ஆற்பாட்ட பேரணி ஆயத்த ஆசிரியர் சந்திப்பு......

                  ஊத்தங்கரை ஒன்றியத்தில் இன்று நடைபெற்ற அனைத்து துவக்க மற்றும் உயர்துவக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவளமைய கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஆசிரியர்களை நேரில் சந்தித்து வரும் 08.03.2015 ல் நடைபெற உள்ள ஜேக்டோ சார்பிலான மாபெரும் ஆற்பாட்ட பேரணியில் கலந்துக்கொள்ள வேண்டி அழைப்பு விடுத்தோம்.











Friday, February 27, 2015

பள்ளிகளில் குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்லும் போது குழந்தைகளின் பாதுகாப்பு சார்பான வழிகாட்டு நெறிமுறைகள்......

அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் - பதவி உயர்வு

      பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக புதிதாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் அப்பள்ளிகளுக்கு பதவி உயர்வு மூலம் தலைமையாசிரியர் நியமனம் செய்தல் மற்றும் தற்போது காலியாக உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களையும் பதவி உயர்வு மூலம் கலந்தாய்வு நடத்தி நியமனம் செய்திட இயக்குனர் உத்தரவு