Saturday, July 18, 2015

3120 பக்க NMMS RESULT ல் தேர்வான மாணவர்களின் பெயர்களை காண்பது எப்படி?

         240 பக்க தகவல்கள் ஒரே நீள் வரிசையில் வரவேண்டியவை . excel   to pdf convert செய்யும் பொது பல பக்கமாக மடங்கி உள்ளது. உங்கள் மானவர்ன் விவரங்கள் அடங்கிய அணைத்து பக்கங்களையும் வரிசைபடுத்தி print எடுக்கவும்.( excel  copy  வெளியிடப்படவில்லை )




Tuesday, July 14, 2015

பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு

           பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு


Sunday, July 12, 2015

திருத்திய ஊதியம் - தமிழ்நாடு திருத்திய ஊதிம் 2009 - திருத்திய ஊதிய மாற்றியமைப்பு சார்பான கோரிகைகள் பெற இயலாது என அரசு அறிவிப்பு


அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகம்: இந்த ஆண்டு புது நியமனத்திற்கு வாய்ப்பு இல்லை

      கடந்த கல்வியாண்டில், ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட, தற்போதுள்ள உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை, அதிக அளவில் உள்ளதால், நடப்பு கல்வியாண்டில், தமிழகத்தில் அரசு பள்ளிகளில், புதிய ஆசிரியர் நியமனத்துக்கு வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது.
       தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும், 5,000க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன.


      கடந்த கல்வியாண்டின் துவக்கத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற, 3,500 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும்7,000 பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என, 10 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஓய்வு:

       கடந்த மே 31ம் தேதி, தமிழகம் முழுவதும், 4,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இப்பணியிடங்களுக்கு, தகுதித்தேர்வு நடத்தி, விரைவில் பணிநியமனம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, ஆசிரியர் கல்வி படித்து, வேலைக்கு காத்திருப்போரிடையே இருந்து வருகிறது. இந்நிலையில், பள்ளிகளில், பணிநிரவல் நடத்துவதற்காக, 1 முதல், 5ம் வகுப்பு வரை, 1:30 என்ற விகிதத்திலும், 6 முதல், 8ம் வகுப்பு வரை, 1:35என்ற ஆசிரியர் - மாணவர் விகிதத்திலும், கடந்த கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை அடிப்படையில், கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது.இவற்றில், உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை, ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையை விட, அதிக அளவில் உள்ளது. இதனால், நடப்பு கல்வியாண்டில், பணிநிரவல் நடத்தினால்,அனைத்து தகுதியான ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பினால் கூட, உபரி ஆசிரியர் பணியிடம் நீடிக்கும் நிலை உள்ளது.

நிர்பந்தம்:

    இதனால், இந்தகல்வியாண்டில், புதிய ஆசிரியர் நியமனத்துக்கு வாய்ப்பில்லை என, கல்வித் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர்கள் கூறியதாவது:

    கடந்த முறை ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி வழங்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தது. அதனால், உபரி ஆசிரியர் பணியிடங்களை நீக்காமல், புதிய ஆசிரியர் நியமனம் நடைபெற்றது. உதாரணமாக, ஒரு பள்ளியில் பணிநிரவலுக்கு கணக்கெடுக்கும் போது, மாணவர்களின் எண்ணிக்கைக்கு, ஐந்து ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே போதுமானதாக இருக்கும். 
          ஆனால், அங்கு, எட்டு ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த உபரியாக உள்ள, மூன்று பணியிடங்களை முறையாக நீக்கியிருப்பின், கடந்த கல்வியாண்டில் புதிய ஆசிரியர் நியமனம், வெகு சொற்பமாகவே இருந்திருக்கும். தேர்வு எழுதி காத்திருப்போரை ஏமாற்றம் செய்யக்கூடாது என்பதற்காக, உபரி ஆசிரியர் பணியிடங்களை நீக்காமல், புதிய ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டது.கடந்த கல்வியாண்டு இறுதியில், 4,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வுபெற்றுள்ள நிலையில், தற் போது பணிநிரவல் நடத்தப்பட்டால், மேற்கண்ட உபரி ஆசிரியர் பணியிடங்கள் குறையும். அதே சமயம், பல ஆசிரியர்களுக்கு, வேறு மாவட்டங்களுக்கு செல்லும் நிலை கூட உருவாகும். அப்போதும், உபரி ஆசிரியர் பணியிடங்களை முற்றிலும் நீக்க முடியாது. இதனால், காலி ஆசிரியர் பணியிடங்கள் இருக்க வாய்ப்பில்லை. அதே சமயம், அரசு பள்ளிகளில் ஆண்டுக்காண்டு, மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருவதால், நடப்பு கல்வியாண்டில், உபரி ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை கூடவும் வாய்ப்புள்ளது. இந்த காரணங்களால் தான், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படுவதும் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தூய்மையான பாரதம் தூய்மையான பள்ளி

   மனிதவள மேம்பாட்டுத்துறை - "தூய்மையான பாரதம் தூய்மையான பள்ளி"  ( SWACHH BHARATH SWACHH VIDHAYALAYA ) - பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் - இயக்குனர் செயல்முறைகள்


கல்வி வளர்ச்சிநாள் விழா 2015 அரசாணை மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் செயல் முறைகள்......





Monday, June 8, 2015

மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்தால் கடும் நடவடிக்கை : பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை

                ஆசிரியர்கள் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் உகந்ததாக ஆடை அணிய வேண்டும். மாணவிகளை தொடுவதோ, கிள்ளுவதோ கூடாது. தொந்தரவு செய்வது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார்.
             இது குறித்து பள்ளி கல்வி இயக்குனர் விடுத்துள்ள சுற்றறிக்கை: மாணவ, மாணவிகளுக்கு நல்லதோர் முன்னுதாரணமாகவும், வழிக்காட்டியாகவும் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். ஆசிரியர்களும், ஆசிரியைகளும் பள்ளிக்கு வரும்போது பண்பாட்டிற்கும், கலாசாரத்திற்கும் உகந்த ஆடைகளை அணிய வேண்டும். இதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். மாணவ, மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான முறையில் தவறாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசையோ, அரசு சார்ந்த அதிகாரிகளையோ தேவையற்ற விமர்சனம் செய்வது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடத்தைவிதி 12ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். 

              ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுக்கும் போது 5 நாட்களுக்கு மேல்தான் விடுப்பு எடுக்க வேண்டும். அடிக்கடி மருத்துவ விடுப்பு எடுத்தால், மருத்துவ குழுவிற்கு அனுப்பப்படும். வருடத்திற்கு 3 மாதம் என கணக்கிட்டு விடுப்பு எடுக்க வேண்டும். தலைமையாசிரியர்கள் விடுப்பு எடுக்கும்போது உயர் அலுவலரின் அனுமதி இல்லாமல் எடுக்கக்கூடாது. அவ்வாறு விடுப்பில் செல்லும் போது உதவி ஆசிரியர்களிடம் பொறுப்பினை ஒப்படைத்து செல்ல வேண்டும். பள்ளிகளில் அளவைப் பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும். ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு மற்றும் அனைத்து தபால்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும். 

             பள்ளி வேலை நேரத்தில் வகுப்பை விட்டு வேறு வகுப்பிற்கோ, வேறு அலுவலகத்திற்கோ செல்லக்கூடாது. உதவி ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன் பள்ளி நேரத்தில் பயன்படுத்தக்கூடாது. மாணவர்களை அடிப்பதோ, உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கக் கூடாது. மேலும் பெண் பிள்ளைகளை தொடுவதோ, கிள்ளுவதோ, பாலியல் தொந்தரவு செய்வதோ தெரியவந்தால் நடத்தை விதி 20ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூர்விடுப்பு (லோக்கல் ஹாலிடே) தேவைப்படுகிற தலைமையாசிரியர் இரண்டு நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும்.  இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.