Saturday, June 16, 2018

மதிப்புமிகு ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அண்ணன் அவர்களின் இடைநிலையாசிரியர் பணிநிரவல் பற்றிய பதிவு

*இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் அண்ணன் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அவர்களுக்கு தெரிவித்த உறுதியான தகவல்.*
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

          ஆகஸ்ட் 2017 ல் மாணவர்களின் பதிவும் வருகையும் குறைந்திருந்தாலும் 2018 சூன் மாதத்தில் வகுப்பில் போதிய பதிவும் வருகையும் கூடுதலாக இருந்தால் இடைநிலை ஆசிரியர்களை பணிநிரவல் செய்யத் தேவையில்லை. இது குறித்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் வழியாக மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலரிடம் ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டினால் போதுமானதாகும் என்று தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் ஐபெட்டோ அகில இந்திய செயலாளருக்கு நேற்று 15.06.18 மற்றும் இன்று16.06.18 பேசிய போது உறுதியான தகவலை தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கக் கூடாது என்று பொது நோக்குடன் தெரிவித்தார். அதுசமயம் ஏற்றுக்கொள்ள முன்வராத முதன்மை கல்வி அலுவலர்கள் இருப்பார்களேயானால் அது தொடர்பாக மாநில அமைப்புக்கு உடன் தொடர்பு கொண்டால் இயக்குநர் அவர்களிடம் உடனே தொடர்பு கொண்டு சரிசெய்யப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிரவலும் பெரியளவில் பாதிப்பின்றி செயல்படுத்தப் பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம்.
            மாணவர்களின் கல்வி நலனை மையப்படுத்திதான் கல்வித்துறை செயல்பட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

Sunday, June 10, 2018

1,300 பள்ளிகளை இழுத்து மூடும் அரசு 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சிக்கல் ....


              திண்டுக்கல்:''பணி நிரவல் மூலம் 1,300 பள்ளிகளை மூடி 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலர் வின்சென்ட் பால்ராஜ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
               நிர்வாக சீர்திருத்தம் என தொடக்க கல்வி, பள்ளிக்கல்வி, ஆங்கில வழி கல்வித்துறைகளை ஒருங்கிணைந்துள்ளனர். ஒரே அலுவலரிடம் அதிகாரத்தை குவிப்பதால் ஊழல் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, துறைகள் இணைப்பை கைவிட வேண்டும். காமராஜர் முதல் ஜெயலலிதா வரை இருந்த முதல்வர்கள் ஆண்டுதோறும் புதுப்புது பள்ளிகளை திறந்தனர். முதல்முறையாக இப்போது 1,300 பள்ளிகளை அரசு மூடுகிறது. கல்வி அமைச்சரோ, 'பள்ளிகளை மூட வில்லை. இணைப்பு மையமாக செயல்படும்' என்கிறார்.
15,000 பணியிடம் காலி
                         பணி நிரவலால் பள்ளிகள் மூடப்படும். அங்கு பள்ளிகளை மீண்டும் திறக்க கிராம மக்களிடம் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பேச்சு நடத்தி குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். 'புதிய பாடத்திட்டத்தில் அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்கள் ஓடி வருவர்' என்கிறார் கல்வி அமைச்சர். மாணவர்கள் அரசு பள்ளிகளை நோக்கி வரும் போது ஆசிரியர் இல்லாத நிலை ஏற்படும். பணிநிரவலால் இடைநிலை ஆசிரியர்கள் 10 ஆயிரம் பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 5,000 பேர் குறைக்கப்பட உள்ளனர். ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்க வேண்டும். பணிநிரவலை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான Android App

DOWNLOAD "CEO PORTAL - TEACHERS APP" - STEP BY STEP PROCEDURE -தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான Android App

DEE - EMIS இணைய தளத்தில் அனைத்து வகை பள்ளி மாணவர்களைப் பதிவுசெய்தல் தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்!!