Friday, September 30, 2022

எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம் -கணிதம்- அரும்பு ,மொட்டு, மலர்-பயிற்சி ஏடு-PDF

 எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம்  -கணிதம்-  அரும்பு ,மொட்டு, மலர்-பயிற்சி ஏடு- WORKS BOOKS-PDF



MATHS -அரும்பு -CLICK HERE

MATHS -மொட்டு-CLICK HERE

MATHS -மலர்- CLICK HERE

Wednesday, September 28, 2022

முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.....

 




சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான 2,346 இடங்களின் தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார். முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நாளை தொடங்கி 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பெறப்பட்டது. அனைத்து விண்ணப்பங்களும் சான்றிதழ்களும் பரிசீலனை செய்யப்பட்டுள்ள இன்று அதற்கான தர வரியை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா,சுப்பிரமணிய வெளியிட்டார்.இவை அனைத்திற்குமான கலந்தாய்வானது இணையதளம் வாயிலாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை மருத்துவப்படிப்பிற்காக அரசு கல்லூரியில் 1,162 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 763 இடங்களும் உள்ளன. முதுகலை பல் மருத்துவத்திற்காக 31 சுயநிதி கல்லூரிகளில் உள்ள 296 முதுநிலை பல் மருத்துவ இடங்கள், 94 பட்ட படிப்பு இடங்கள் என மொத்தம் 2,346 இடங்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ மேற்படிப்பிற்காக பெறப்பட்ட 6,960 விண்ணப்பங்களில் 6, 893 விண்ணப்பங்கள் தகுதியானதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டிற்காக பெறப்பட்ட 2,025 விண்ணப்ப்பங்களில் 286 விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்தவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

முதுகலை பல் மருத்துவத்திற்கு அரசு கல்லூரிகளில் 679 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 662 விண்ணப்பங்கள் தகுதியானவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டில் 341 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 310 விண்ணப்பங்கள் தகுதியானவையாக தேர்வு செய்யப்பட்டுளள்து. இதற்கான தரவரிசை பட்டியலை தற்ப்போது சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டார்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணிநியமன ஆணை வழங்கினார்......

 


    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ( 28.9.2022 ) தலைமைச் செயலகத்தில் , உயர்கல்வித் துறை சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1024 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 11 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். 
    அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் , விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு உரிய நபர்களை தெரிவு செய்திட ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 27.11.2019 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டு , 8.12.2021 முதல் 13.12.2021 வரை கணினி வழித் தேர்வுகள் நடத்தப்பட்டு , தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

     அதன்படி , விரிவுரையாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 1024 நபர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கினார் . அமைச்சர் இந்நிகழ்ச்சியில் , மாண்புமிகு உயர்கல்வித் துறை முனைவர் க.பொன்முடி , தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு , இ.ஆ.ப. , உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் . தா . கார்த்திகேயன் , இ.ஆ.ப. , தொழில்நுட்ப கல்வி ஆணையர் திருமதி க . லட்சுமிபிரியா , இ.ஆ.ப. , மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி & தனியார் பள்ளிகள்) ஆகியவற்றிற்கு கோப்புகள் பரிமாற்றம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்....

 



    தொடக்கக் கல்வி - கள அளவில் நிர்வாக மறுகட்டமைப்பு - ஒப்படைக்கப்பட வேண்டிய பணியிடங்களைக் கொண்டு புதிய பணியிடங்கள் உருவாக்கம் பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர்களின் திருத்தி அமைக்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகள் - 58 மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) பணியிடங்கள் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். 


மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்.....


IMG_20220928_153839


        மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    பணவீக்கம், விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். இதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், ஜூலை - டிசம்பர் காலத்துக்கான அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். பண்டிகைக்காலம் நெருங்கிவிட்ட நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருந்தனர்.

    இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதன்படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 38% ஆக உயர்ந்துள்ளது. இதனால் சுமார் 50 லட்சத்துக்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 60 லட்சத்துக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்

Tuesday, September 27, 2022

SMC & கிராம சபா கூட்டத்தில் பங்கேற்கும் முதன்மைக் கருத்தாளர்களுக்கான பங்கும் , பொறுப்பும் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனரின் செயல் முறைகள்........


   30.09.2022 அன்று நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்திலும் அதனைத்தொடர்ந்து 02.10.2022  கிராம சபா கூட்டத்திலும் பங்கேற்கும் முதன்மைக் கருத்தாளர்களுக்கான பங்கும் பொறுப்பும் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனரின் செயல் முறைகள்.


ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த முழு விபரம் .......

 


    தமிழ்நாட்டில் பி.எட் முடித்தவர்கள் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அதன்படி 2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விரும்புவோர் கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி உடன் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து சிலர் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனைத்தொடர்ந்து ஏப்ரல் 26ம் தேதி வரை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வில், முதல் தாளுக்கு 2,30,878 பேர் மற்றும் இரண்டாம் தாளுக்கு 4,01,886 பேர் என 6,32,764 என மொத்தம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளை ஆகஸ்ட் 25 தேதி முதல் 31ம் தேதி வரை நடத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டிருந்தது. பின்பு தேதி மாற்றியது.

    இந்நிலையில் தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்குரிய தேர்வு தேதி குறித்த அறிவிப்பை TRB வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, TRB தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்குரிய தேர்வானது அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் நடப்பு ஆண்டு முதல் இத்தேர்வை கணினி வழியில் நடத்த உள்ளதாக தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. அனைத்து தேர்வர்களும் கணினி வழித்தேர்வை (Computer Based Examination) பயிற்சி தேர்வுகளாக மேற்கொள்ள தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இதனை அனைத்து தேர்வர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.