சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .
பாஷ்யம் என்பது இவரது இயற்பெயர். மயிலாடுதுறைச் சார்ந்த கிந்தளூர் எனும் ஊரில் பிறந்தவர். கதைக்கும், கதை எழுதுபவரின் உருவத்திற்கும் சம்பந்தம் இருக்க வேண்டும் என்கிற நியதி என்றும் கிடையாது. என்றாலும் இவரது கதைகளைப் படித்து விட்டு, ஏதே கற்பனையில் இருந்த சிலர் இவரைப் பார்க்கச் சென்று, பார்த்து வியந்திருக்கிறார்கள் எனும் குறிப்புகளும் நமக்குக் கிடைக்கின்றன. ஆரம்பத்தில் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையின் நிரூபராகவும், பின்பு செய்தி ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். சிறிது காலத்திற்குப் பிறகு அதிலிருந்து விலகிய ‘சாண்டில்யன்’ இந்துஸ்தான் எனும் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இந்துஸ்தான் பத்திரிகையில் இருக்கும்போது தான் இவருக்கு சினிமா இதற்கு முன் 1949ல் ‘லேனா’ செட்டியாரின் ‘கிருஷ்ணபக்தி’ என்கிற படத்தில் ச.து.சு.யோகியார், சுத்தானந்த பாரதி ஆகியோருடன் இணைந்து வசனம் எழுதிய அனுபவமும் உண்டு. 1953ல் சித்தூர் வி.நாகையா தயாரிதத ‘என்வீடு’ என்கிற படத்திற்கும் சாண்டில்யன் வசனம் எழுதியுள்ளார். திரைப்பட உலகம் நிரந்தரமல்ல என்று அறிந்து வைத்திருந்த சாண்டில்யன் இவரது புகழ்பெற்ற ‘ஜீவபூமி’ நாவல் ‘அமுதசுரபி’ இதழில் தொடராக வெளிவந்தது. பத்திரிகைத் தொழிலை தொழிற்சங்க அமைப்பினுள் கொண்டுவர வேண்டுமென்று குரல் கொடுத்த ஆரம்பப் பத்திரிகையாளர்களில் ‘சாண்டில்யன்’ மிகவும் முக்கியமானவர். அதேபோல் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தொடக்கக் காலத்திலிருந்தே தொடர்பு கொண்டிருந்ததோடு சில முக்கிய நிர்வாகப் பொறுப்புக்களையும் வகித்திருக்கிறார். இவர் ஒரு கட்டத்தில் ‘குமுதம்’ வார இதழின் நட்சத்திர எழுத்தாளராக உருவெடுத்தார். இவரது சரித்திர புதினங்கள் பல ‘குமுதத்தில்’ தொடராக வெளிவந்தது. இவர் தொடர் வெளிவரும் காலத்தில் ‘குமுதத்தின்’ சர்குலேசன் மிக அதிகமாக இருக்குமாம். முக்கியமாக ‘குமுத’த்தில் இவர் எழுதிய கன்னிமாடம், யவனராணி, கடல்புறா போன்ற தொடர்கள் வெகுஜென வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இவரது மேற்கூறிய தொடர்களில் பெண்கள் பற்றிய வருணைகள் இணைஞர்களை வெகுவாகக் கவர்ந்தன. சிலர் இதை ஆபாச எழுத்து எனவும் கூறினார்கள். அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் ‘சாண்டில்யன்’ எழுதிக் குவித்துக் கொண்டேயிருந்தார். இவர் எழுதிய நூல்களைப் பட்டியலிடுவது சற்று சிரமம்தான். இவர் எழுதிய சில முக்கயி நூல்கள். ராஜ பேரிகை, மதுமலர், மனமோகம், செண்பகத் தோட்டம், ஜீவபூமி, நங்கூரம், புரட்சிப்பெண், ஜலதீபம், ராஜதிலகம், ராஜமுத்திரை, கன்னிமாடம், கடல்புறா, யவனராணி மற்றும் ஸ்ரீராமானுஜர் வாழ்க்கை வரலாறு. இவரது சரித்திரப் புதினங்களுக்கு இலக்கிய ரீதியாக பெரிய மதப்பொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. தேர்ந்த இலக்கிய விமர்சனங்கள்தான் இதற்குச் சரியான பதிலைச் சொல்ல முடியும். டவுன்லோட் லிங்க் : அவனி சுந்தரி சந்திரமதி சேரன் செல்வி சித்தரஞ்சனி இளைய ராணி இந்திர குமாரி ஜலதீபம் பாகம் -1 ஜலதீபம் பாகம் -2 ஜலதீபம் பாகம் -3 ஜீவபூமி கடல் வேந்தன் கடல் புறா பாகம் -1 கடல் புறா பாகம் -2 கடல் புறா பாகம் -3 கடல் ராணி கன்னி மாடம் கவர்ந்த கண்கள் காவேரி மைந்தன் பாகம் -1(அனுஷா வெங்கடேஷ் ) காவேரி மைந்தன் பாகம் -2(அனுஷா வெங்கடேஷ் ) காவேரி மைந்தன் பாகம் -3(அனுஷா வெங்கடேஷ் ) மாதவியின் மனம் மது மலர் மலை அரசி மஞ்சள் ஆறு மலை வாசல் மங்களதேவி மன்னன் மகள் மோகன சிலை மோகினி வனம் மூங்கில் கோட்டை நாக தீபம் நாக தேவி நங்கூரம் நீல ரதி நீல வள்ளி நீள் விழி பல்லவ பீடம் பல்லவ திலகம் பாண்டியன் பவனி ராஜ யோகம் ராணா ஹமீர் ராஜ முத்திரை பாகம் -1 ராஜ பேரகை பாகம் -1 ராஜ பேரகை பாகம் -2 ராஜ பேரகை பாகம் -3 துறவி உதய பானு விஜய மகாதேவி 1 யவன ராணி பாகம் -1 யவன ராணி பாகம் -2 |
Tuesday, January 14, 2014
சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக ..............
கிழமையைக் கண்டறிய எளிய வழி.......
பிறந்த நாள் அல்லது முக்கியமான ஏதாவதொரு நாளைக் குறிப்பிட்டுச் சொன்னால், நீங்கள் அந்த நாளுக்கான கிழமையைக் கணக்கிட்டுக் கூற முடியும். எப்படி என்கிறீர்களா?
ஜனவரி - 0
பிப்ரவரி - 3
மார்ச் - 3
ஏப்ரல் - 6
மே - 1
ஜூன் - 4
ஜூலை - 6
ஆகஸ்ட் - 2
செப்டம்பர் - 5
அக்டோபர் - 0
நவம்பர் - 3
டிசம்பர் - 5
இதை மட்டும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் அல்லது தங்கள் மனதினில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் யாரிடமாவது அவர்களுடைய பிறந்த நாள் அல்லது குறிப்பிடத்தக்க ஒரு நாளைக் கேளுங்கள்
அவர் பதில் - மார்ச் 21, 1999
மேலுள்ள மாதங்களுக்கான வரிசையில் அதற்கான எண் - 3
அடுத்துத் தேதியை எடுக்கவும் - 21
வருடத்தின் கடைசி இரண்டு இலக்கத்தை மட்டும் எடுக்கவும் - 99
வருடக் கடைசி இலக்கத்தை 4 ஆல் வகுக்கவும் - 99/4 = 24 மீதி 3
அடுத்து அனைத்து எண்களையும் சேர்க்கவும் - 3 + 21 + 99 + 24 = 147
தற்போது கூட்டி வந்த எண்ணை 7 ஆல் வகுக்கவும் - 147/7 = 21 ஆல் வகுத்த பின்பு மீதி 0
மீதியாக வரும் எண்
0 - ஞாயிற்றுக் கிழமை
1 - திங்கள் கிழமை
2 - செவ்வாய்க் கிழமை
3 - புதன் கிழமை
4 - வியாழக் கிழமை
5 - வெள்ளிக் கிழமை
6 - சனிக் கிழமை.
இங்கு நாம் கணக்கிட்ட நாளுக்கான கிழமை 0 என்பதால் ஞாயிற்றுக் கிழமை.
பிறந்த நாள் அல்லது முக்கியமான ஏதாவதொரு நாளைக் குறிப்பிட்டுச் சொன்னால், நீங்கள் அந்த நாளுக்கான கிழமையைக் கணக்கிட்டுக் கூற முடியும். எப்படி என்கிறீர்களா?
ஜனவரி - 0
பிப்ரவரி - 3
மார்ச் - 3
ஏப்ரல் - 6
மே - 1
ஜூன் - 4
ஜூலை - 6
ஆகஸ்ட் - 2
செப்டம்பர் - 5
அக்டோபர் - 0
நவம்பர் - 3
டிசம்பர் - 5
இதை மட்டும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் அல்லது தங்கள் மனதினில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் யாரிடமாவது அவர்களுடைய பிறந்த நாள் அல்லது குறிப்பிடத்தக்க ஒரு நாளைக் கேளுங்கள்
அவர் பதில் - மார்ச் 21, 1999
மேலுள்ள மாதங்களுக்கான வரிசையில் அதற்கான எண் - 3
அடுத்துத் தேதியை எடுக்கவும் - 21
வருடத்தின் கடைசி இரண்டு இலக்கத்தை மட்டும் எடுக்கவும் - 99
வருடக் கடைசி இலக்கத்தை 4 ஆல் வகுக்கவும் - 99/4 = 24 மீதி 3
அடுத்து அனைத்து எண்களையும் சேர்க்கவும் - 3 + 21 + 99 + 24 = 147
தற்போது கூட்டி வந்த எண்ணை 7 ஆல் வகுக்கவும் - 147/7 = 21 ஆல் வகுத்த பின்பு மீதி 0
மீதியாக வரும் எண்
0 - ஞாயிற்றுக் கிழமை
1 - திங்கள் கிழமை
2 - செவ்வாய்க் கிழமை
3 - புதன் கிழமை
4 - வியாழக் கிழமை
5 - வெள்ளிக் கிழமை
6 - சனிக் கிழமை.
இங்கு நாம் கணக்கிட்ட நாளுக்கான கிழமை 0 என்பதால் ஞாயிற்றுக் கிழமை.
தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்
பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:
தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 60
வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life
Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க
வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு
மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின்
புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய
அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து
சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.
பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில்
வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு
அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து
பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல்
இணைக்க வேண்டும்.
தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.
மண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.
கட்டணம்:
பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ.415 மட்டும்.தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் + அஞ்சல் கட்டணம் ரூ.65.
செலுத்தும் முறை:
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாகச் செலுத்தலாம்.
அஞ்சல் மூலம் செலுத்த: உதவி இயக்குநர்
(வெளியீடுகள்), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-600 002 என்ற
பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம். பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது
விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:
பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும். பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.
பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள்
ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும்.
அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும்
கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.
பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.
நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது. பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது. இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
எப்படி பெறுவது?
அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள்,
அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை
பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு
அனுப்பப்படும்.
தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள்,
தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு
மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய
நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட,
அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.
விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:
சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும்
பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம்
செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.
விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே
கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor)
இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இட
வேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக
நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம்
பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital
Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:
உதவி இயக்குநர் (வெ), எழுதுபொருள் அச்சுத் துறை
ஆணையரகம், சென்னை-2-இல் 044-2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற
தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்
http://www.stationeryprinting.tn.gov.in/servicetopublic.htm இத்தளத்திற்குச் சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.
http://www.stationeryprinting.tn.gov.in/forms.htm விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.
தத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர் கவனத்திற்கு:
சுவீகாரத் தந்தை/தாய் இருப்பின் அவர்கள்
சுவீகாரம் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட
வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட
வேண்டும்.
சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன்/மகளின் சுவீகாரத்
தந்தை/ தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதை அரசு வெளியீட்டில் பொது
அறிவிக்கையாக மட்டுமே வெளியிட இயலும். இதற்கான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட
சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச்
சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.
நன்றி :
ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் விபரம்....
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத
மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்குதகுதி தேர்வு மதிப்பெண், பிளஸ்–2 மதிப்பெண்,பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் ஆகியவற்றின்
அடிப்படையில் நியமனம் நடைபெறும்.
பகிர்ந்தளிக்கும் மதிப்பெண்கள் விபரம் :
தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும்,
பிளஸ்–2 தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும்,
பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்ணும்,
பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மொத்தம் 100 மதிப்பெண்கள்.
தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும்.
மதிப்பெண்ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு :
12–ம் வகுப்பு
90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்
பெற்றிருந்தால் – 10 (அதிகபட்ச முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 8 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 6 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 4 மதிப்பெண்
50 சதவீதம் முதல் 60 சதவீதத்திற்குள் – 2 மதிப்பெண்
பட்டப் படிப்பு
70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்
50சதவீதத்திற்கு கீழ் – 10 மதிப்பெண்
பி.எட்.படிப்பு
70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்
தகுதித்தேர்வு
90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 60 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 54 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 48 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 42 மதிப்பெண
மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்குதகுதி தேர்வு மதிப்பெண், பிளஸ்–2 மதிப்பெண்,பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் ஆகியவற்றின்
அடிப்படையில் நியமனம் நடைபெறும்.
பகிர்ந்தளிக்கும் மதிப்பெண்கள் விபரம் :
தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும்,
பிளஸ்–2 தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும்,
பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்ணும்,
பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மொத்தம் 100 மதிப்பெண்கள்.
தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும்.
மதிப்பெண்ஒதுக்கீடு விவரம் பின்வருமாறு :
12–ம் வகுப்பு
90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்
பெற்றிருந்தால் – 10 (அதிகபட்ச முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 8 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 6 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 4 மதிப்பெண்
50 சதவீதம் முதல் 60 சதவீதத்திற்குள் – 2 மதிப்பெண்
பட்டப் படிப்பு
70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்
50சதவீதத்திற்கு கீழ் – 10 மதிப்பெண்
பி.எட்.படிப்பு
70 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 15மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 12 மதிப்பெண்
தகுதித்தேர்வு
90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் – 60 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் – 54 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள் – 48 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள் – 42 மதிப்பெண
Sunday, January 12, 2014
பொங்கல் வாழ்த்து !
பொங்குக பொங்கல் !
பொங்குகவே
பொங்கல் பொங்குகவே
மங்களம்
எங்கும் நிறைந்திடவே
மாநிலம்
முழுதும் செழித்திடவே
பொங்குகவே
பொங்கல் பொங்குகவே !
தித்திக்கும்
கரும்பின் சுவையும்
தெவிட்டாத
பொங்கலின் ருசியும்
என்றும்
வாழ்வில் நிலைத்திடவே
பொங்குகவே
பொங்கல் பொங்குகவே !
உலக அமைதியின்
ஊற்றுக்கண்ணாய்
உலகசமாதான தூதர்களாய்
செயல்படும்
ஒப்புயர்வற்ற
தமிழர்களின் வாழ்வில்
பொங்குகவே
பொங்கல் பொங்குகவே !
தங்கத்
தமிழாம் எந்தமிழை
சந்தம்
மாறாமல் முழங்கி
சங்கம்
வளர்த்திட்ட தமிழர்வாழ்வில்
பொங்குகவே
பொங்கல் பொங்குகவே !
தரணி
புகழும் தமிழின்
தலைமகனே தன்மானமிக்க
தமிழனே
உங்கள்
அனைவரின் வாழ்விலும்
பொங்குகவே
பொங்கல் பொங்குகவே !
உலகாளும்
உயர்செம் மொழியாம்
எங்கள்
தாய்த்தமிழ் மொழியின்
வளர்ச்சிக்கு
உழைப்போர் இல்லங்களில்
பொங்குகவே
பொங்கல் பொங்குகவே !
அன்புடன் ………….
கவி. செங்குட்டுவன், ஊத்தங்கரை – 635207
அலைபேசி: 9842712109 / 7402732132, தொ.பே:
04341-223011/223023
மின்னஞ்சல்: rajendrankavi@yahoo.co.in/kavi.senguttuvan@gmail.com
Saturday, January 11, 2014
TRB - TET சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்புக் கடிதம்
TRB - TET சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்புக் கடிதத்தை டி.ஆர்.பி. வெளியிட்டுள்ளது. அதனைப் பெற நீங்கள் தேர்ச்சி பெற்றுள்ள தேர்வுக்கான கீழ்க்கண்ட தொடுப்புகளைச் சுட்டி
Call Letters For CV
தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு - விண்ணப்பிக்க கால நீட்டிப்பு
தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) 2013 - தேர்வர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் - கால நீட்டிப்பு குறித்து
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS)
2013 சம்பந்தமான தேர்வர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம்
செய்ய ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த இறுதி நாளான 10.01.2014 க்குப் பதிலாக 11.01.2014 முதல்
20.01.2014 வரை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய கால நீட்டிப்பு
செய்யப்படுவதாக அரசுத் தேர்வுகள் துறை அறிவிப்பு.
Subscribe to:
Posts (Atom)