பொங்குக பொங்கல் !
பொங்குகவே
பொங்கல் பொங்குகவே
மங்களம்
எங்கும் நிறைந்திடவே
மாநிலம்
முழுதும் செழித்திடவே
பொங்குகவே
பொங்கல் பொங்குகவே !
தித்திக்கும்
கரும்பின் சுவையும்
தெவிட்டாத
பொங்கலின் ருசியும்
என்றும்
வாழ்வில் நிலைத்திடவே
பொங்குகவே
பொங்கல் பொங்குகவே !
உலக அமைதியின்
ஊற்றுக்கண்ணாய்
உலகசமாதான தூதர்களாய்
செயல்படும்
ஒப்புயர்வற்ற
தமிழர்களின் வாழ்வில்
பொங்குகவே
பொங்கல் பொங்குகவே !
தங்கத்
தமிழாம் எந்தமிழை
சந்தம்
மாறாமல் முழங்கி
சங்கம்
வளர்த்திட்ட தமிழர்வாழ்வில்
பொங்குகவே
பொங்கல் பொங்குகவே !
தரணி
புகழும் தமிழின்
தலைமகனே தன்மானமிக்க
தமிழனே
உங்கள்
அனைவரின் வாழ்விலும்
பொங்குகவே
பொங்கல் பொங்குகவே !
உலகாளும்
உயர்செம் மொழியாம்
எங்கள்
தாய்த்தமிழ் மொழியின்
வளர்ச்சிக்கு
உழைப்போர் இல்லங்களில்
பொங்குகவே
பொங்கல் பொங்குகவே !
அன்புடன் ………….
கவி. செங்குட்டுவன், ஊத்தங்கரை – 635207
அலைபேசி: 9842712109 / 7402732132, தொ.பே:
04341-223011/223023
மின்னஞ்சல்: rajendrankavi@yahoo.co.in/kavi.senguttuvan@gmail.com
No comments:
Post a Comment