Tuesday, March 18, 2014

கடவுச்சீட்டு பெற அல்லது புதுப்பிக்க மறுப்பின்மை சான்று நியமன அலுவலரே (DEEO) வழங்கலாம்

          தொடக்கக் கல்வி - "பி" "சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு கடவுச்சீட்டு பெற அல்லது புதுப்பிக்க மறுப்பின்மை சான்று நியமன அலுவலரே (DEEO) வழங்கலாம் என இயக்குனர் உத்தரவு

Monday, March 17, 2014

பிளஸ் 2, கணித தேர்வு: தவறான கேள்விக்கு 6 மதிப்பெண், தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ் 2, கணித தேர்வு: தவறான கேள்விக்கு 6 மதிப்பெண், தேர்வுத்துறை அறிவிப்பு

            பிளஸ் 2, கணித தேர்வில், தவறாக கேட்கப்பட்ட, 47வது கேள்வியை, மாணவர்கள், 'தொட்டிருந்தால்' அதற்குரிய, ஆறு மதிப்பெண், முழுமையாக வழங்கப்படும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்தார்.
 
               பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த 14ல், மிகவும் முக்கியமான கணித தேர்வு நடந்தது. இதில், ஆறு மதிப்பெண் பகுதியில், 47வது கேள்வி, தவறாக கேட்கப்பட்டிருந்தது. 'இதற்குரிய ஆறு மதிப்பெண்ணை, முழுமையாக தேர்வுத்துறை வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஆய்வு செய்த தேர்வுத்துறை, 47வது கேள்வியை, 'தொட்டிருந்தால்' அதற்குரிய ஆறு மதிப்பெண்ணும், முழுமையாக வழங்கப்படும் என, அறிவித்துள்ளது. இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், நேற்று கூறுகையில், ''குறிப்பிட்ட கேள்வியின்படி விடை அளித்தால், சரியான விடை வருகிறது என, ஆசிரியர்கள் தெரிவித்தனர். எனினும், மாணவர்கள் குழப்பம் அடைந்ததாக, தகவல் வந்துள்ளது. எனவே,அந்த கேள்வியை, 'அட்டன்' செய்திருந்தால், அதற்குரிய மதிப்பெண், முழுமையாக வழங்கப்படும்,'' என்றார்.அவர் மேலும் கூறியதாவது: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, 24ல் துவங்கும். ஏப்ரல், 15ம் தேதிக்குள், விடைத்தாள் திருத்தும் பணியை முடிக்க வேண்டும் என, ஆசிரியர்களிடம் தெரிவித்து உள்ளோம். இந்த பணியில், 50 ஆயிரம் ஆசிரியர், இதர ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

              66 மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணி நடக்கும். ஏப்ரல், 15க்குள், இந்த பணி முடிந்தால், அதற்கு அடுத்த கட்ட பணிகள் முடிய, மேலும், 15 நாள் ஆகும். எனவே, கடந்த ஆண்டைப்போல்,மே, முதல் வாரத்தில், தேர்வு முடிவை வெளியிட திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு, தேவராஜன் தெரிவித்தார். கடந்த ஆண்டு, மே, 9ல், தேர்வு முடிவு ?வளியானது. இந்த ஆண்டு, மிக விரைவாக, விடைத்தாள் திருத்தும் பணி முடியும்பட்சத்தில், ஒரு வாரம் முன்னதாக முடிவு ?வளியாகவும் வாய்ப்பு உள்ளது.

Saturday, March 15, 2014

நன்றி...... நன்றி....அனைவருக்கும் நன்றி............

                         இன்றைய  (15.03.2014) எனது பிறந்த நாளுக்கு நேற்றும், இன்றும் ஆகிய இரு நாட்களாக அலைபேசி, மின்னஞ்சல், முகநூல் என பல்லூடக வழியாகவும், நேரிலும் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது இதயபூர்வ நன்றிகள் என்றும் உரியது.



                          கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நான்......

 எனது மகள் எனக்களித்த பரிசு தனது கைவண்ணத்தில் வரைந்த கண்ணாடி ஓவியம்
 எனது மணைவி எனக்களித்த பரிசு வெள்ளித்தட்டு




 எனது குழந்தைகள் எனக்களித்த வாழ்த்து மடல்கள்.......


Friday, March 14, 2014

2014 நாடாளுமன்றத் தேர்தல் பணி - மதிப்பூதியம்

         2014 நாடாளுமன்றத் தேர்தல் பணிக்கான    மதிப்பூதியம் (ELECTION DUTY - REMUNERATION DETAILS) கீழக்கண்டவாறு வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிகிறது.

Wednesday, March 12, 2014

தமிழகத்தில் முதன்முறையாக இளங்கலையுடன் பி.எட். 4 ஆண்டு படிப்பு

தமிழகத்தில் முதன்முறையாக இளங்கலையுடன் பி.எட். 4 ஆண்டு படிப்பு திருவாரூர் மத்திய பல்கலை. அறிமுகம்

             இளங்கலை பட்டப் படிப்புடன் கூடிய பி.எட். படிப்பு திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த 4 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பில் சேர்ந்தால் இளங்கலை பட்டம் மற்றும் பி.எட். பட்டத்தை ஒருசேர பெற்றுவிடலாம்.
                   கலை, அறிவியல் கல்லூரிகளில் படிப்பவர்கள் ஆசிரியர் பணியில் சேர விரும்பினால் பட்டப் படிப்பை முடித்துவிட்டு அதன் பிறகு கல்வியியல் கல்லூரியில் பி.எட். படிப்பில் சேருவார்கள். அதற்கு தனியே விண்ணப்பித்து இடம் கிடைக்குமா என்று தேடிஅலைய வேண்டும்.

வரும் கல்வியாண்டில் அறிமுகம்

                         இந்நிலையில் பட்டப் படிப்புடன் கூடிய பி.எட். படிப்பை ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பாக (பி.ஏ.எட். மற்றும் பி.எஸ்சி.எட்.) திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வரும் கல்வியாண்டு (2014-15) அறிமுகப்படுத்த உள்ளது. கலை அல்லது அறிவியல் பிரிவு என தங்களுக்கு விருப்பமான ஒருங்கிணைந்த பி.எட். படிப்பை மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.

பிளஸ் 2 தகுதி

               இந்த ஒருங்கிணைந்த பி.ஏ.எட்., பி.எஸ்சி.எட். படிப்புகளில் பிளஸ் 2 முடித்தவர்கள் சேரலாம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம். ஓ.பி.சி. பிரிவினர் 55 சதவீத மதிப்பெண், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் 50சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.கலை, அறிவியல் ஆகிய பிரிவுகளில் ஒவ்வொன்றிலும் தலா 30 இடங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகம் மத்திய கல்வி நிறுவனம் என்பதால் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், ஓ.பி.சி. (இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு) வகுப்பினர் ஆகியோருக்கு இடஒதுக்கீடு உண்டு.

ஏப்ரலில் நுழைவுத்தேர்வு

                  தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு அடிப்படையில் மேற்கண்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். தமிழகத்தில் திருவாரூர், சென்னை, மதுரை, கோவை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நுழைவுத்தேர்வு ஏப்ரல் 26, 27-ம் தேதிகளில் நடைபெறும்.நுழைவுத்தேர்வு எழுத விரும்புபவர்கள் ஏப்ரல் 2-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.cucet2014.co.in) விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு, பாடத்திட்டம் உள்ளிட்டவை தொடர்பான விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.cutn.ac.in) விளக்கமாக தெரிந்துகொள்ளலாம்.தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) அனுமதி கிடைத்ததும் வரும் கல்வியாண்டில் ஒருங்கிணைந்த பி.எட். படிப்புகள் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணை பதிவாளர் (கல்வி) ஏ.ஆர்.வெங்கடகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இதுபோன்ற ஒருங்கிணைந்த பி.ஏ.எட்., பி.எஸ்சி.எட். படிப்புகள் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள மண்டல கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் வழங்கப்படுகிறது. இத்தகைய ஒருங்கிணைந்த பி.எட். படிப்புகள் தமிழகத்தில் தொடங்கப்படுவது இதுவே முதல்முறை.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு ANSWER KEY வெளியீடு (NMMS - 2014 TENTATIVE KEY)

கடந்த மாதம் நடந்து முடிந்த எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு வினாக்களுக்கான விடைக்குறிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Click here to DOWNLOAD NMMS - 2014 TENTATIVE KEY 

Tuesday, March 11, 2014

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான தேர்வு தேதிகளில் மாற்றம்

                  தொடக்கக் கல்வி - பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு பள்ளி வேலை நாட்களில் மாற்றம்  23.4.14 முதல் 25.4.14 வரை விடுமுறை 3ம் பருவத் தேர்வு ஏப்.,21ம் தேதி தொடங்கி ஏப்.,29வரை நடக்கிறது.  மே1 முதல் கோடை விடுமுறை  தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவிப்பு

         மக்களவைத் தேர்தலையொட்டி தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
         வழக்கமாக இந்தப் பள்ளிகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெறும். ஆனால், மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் ஏப்ரல் 24 -ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுவதால், தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

            இதையடுத்து ஏப்ரல் 23, 24, 25 ஆகிய தேதிகளில் இந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தொடக்கக் கல்வித் துறை அறிவித்துள்ளது.இந்தத் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான மூன்றாம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 21, 22, 26, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.1 முதல் 4-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் செயல்வழிக் கற்றல் முறை அமலில் உள்ளதால் அவர்கள் இந்தத் தேர்வை எழுத மாட்டார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கான 220 நாள்கள் வேலைநாள்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பள்ளிகளுக்கு வாக்குப்பதிவுக்குமுன்னதாக விடுமுறை வழங்குவதில் பிரச்னை இருந்தது.வாக்குப் பதிவையொட்டி 3 நாள்களுக்கு விடுமுறை விடப்படுவதால், அதற்குப் பதிலாக மார்ச் 22, ஏப்ரல் 5, 26 ஆகிய நாள்களில் பள்ளிகள் செயல்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.பள்ளி வேலை நாள்களுக்கும், தேர்தலுக்கும் பிரச்னை வராமல் தேர்வு தேதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு மே 1-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது.
              பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6,7,8,9,11 வகுப்புகளுக்கு ஏப்ரல் 3 முதல் 16-ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வு மார்ச் 25-ஆம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.வாக்குப் பதிவையொட்டி உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதிக்குப் பிறகு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது