Thursday, May 29, 2014

துவக்கக்கல்வி - ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

துவக்கக்கல்வியின் தரம் மேம்பட ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

              தமிழகத்தில் துவக்கக்கல்வி தரத்தை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு வரும் கல்வியாண்டில் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் முழு அடிப்படை வசதிகள் உள்ள துவக்கப்பள்ளிகளில், புத்தகங்கள் வாசிப்பு, ஆங்கில உச்சரிப்பு, கணித உபகரணங்களை பயன்படுத்துவதில் ணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்த, ஆசிரியர்களுக்கு கூடுதல் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
 
             பாடப்புத்தகங்களில் எப்பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டாலும், விடை எழுதுதல் தொடர்பாக, தேர்வுகளுக்கு தயார்படுத்துதல், எளிதாக ஆங்கிலம், கணிதம் கற்பித்தல் குறித்து, ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடப்புத்தகங்கள், நோட்டுகள், கணித கருவிகள் வழங்கியதும், பயிற்சி அளிக்கப்பட உள்ளது என, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜூன் 2ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு: இயக்குநர் திட்டவட்டம்

              கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 2ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார். மதுரையில் 11 மாவட்டங்களில், கல்வித் துறை தணிக்கை தடைகளை நீக்குவது, குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. மாநில கணக்காயர் சந்தான வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
               இயக்குனர் ராமேஸ்வரமுருகன் கூறியதாவது: அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2ல் திறக்கப்படும். இதில் மாற்றம் இல்லை. பிளஸ் 1 வகுப்புகள் ஜூன் 16ல் துவங்கும். மாநிலத்தில் கடந்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில், அரசு பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி 5 சதவீதம் அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறையவில்லை, என்றார். மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளியில் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கும் பணிகளை அவர் ஆய்வு செய்தார். மாவட்டத்தில், 2,48,252 பாடப் புத்தகங்கள், 1,82,541 நோட்டுக்கள், 43,775 மாணவர்களுக்கான சீருடைகள் வழங்கும் பணி நடக்கிறது.

மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு - நுழைவுச்சீட்டு


 
         மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு ஹால் டிக்கட் TNPSC இணையதளத்திலிருந்து தற்போது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

          தற்போது 11 காலிப்பணி யிடங்களை நிரப்ப அறிவிக்கப் பட்டுள்ள டி.இ.ஓ. தேர்வில் முதல்நிலைத் தேர்வு ஜூன் 8-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு ஹால் டிக்கட் TNPSC இணையதளத்திலிருந்து தற்போது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
           தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஜூன் மாதம் 8-ந்தேதி காலை DEO பதவிக்கு முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. மொத்த காலிப்பணியிடங்கள் 2342 உள்ளன. எழுத்து தேர்வு நடத்த உள்ளது. இத்தேர்வுக்கு 20000 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 709 பேர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளன. . பெரும்பான்மையான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு உரிய கல்வித்தகுதி இல்லாததே காரணம் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
 

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்குநர் - ஆணை

          தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகள் / அரசு அலுவலகங்களிலும் மழை நீர் சேமிப்பு அமைப்பை 30.06.2014க்குள் ஏற்படுத்ததொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்குநர் - ஆணை

Monday, May 26, 2014

துறைத் தேர்வு முடிவுகள் - அரசு அறிவிக்கை

Department Exam Bulletins Download

Bulletin No.View/Download
Bulletin No. 7 dated 16th March 2014(contains results of Departmental Examinations, December 2013)Download
Bulletin No. 6 dated 7th March 2014 - Extraordinary(contains results of Departmental Examinations, December 2013)Download

Saturday, May 24, 2014

வருவாய் மாவட்ட வாரியான +2 தேர்ச்சி விகிதப் பட்டியல்........

10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்: கடைசி இடத்தில் திருவண்ணாமலை.


           தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டன.இதில், மாநில அளவிலான தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உயர்ந்துள்ளது

        வருவாய் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், ஈரோடு மாவட்டம் 97.88 சதவீதத்துடன் முதலிடத்திலும், திருவண்ணாமலை 77.84 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளது.பிளஸ் 2 தேர்விலும் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை வகித்தது கவனிக்கத்தக்கது.

வருவாய் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதப் பட்டியல் பின்வருமாறு:

மாவட்டம்      தேர்ச்சி /விகிதம் (%)       பள்ளிகளின் எண்ணிக்கை
ஈரோடு             97.88              334

கன்னியாகுமரி      97.78              391


நாமக்கல்           96.58              298


விருதுநகர்          96.55              325

கோயம்பத்தூர்       95.6              502

கிருஷ்ணகிரி        94.58             356

திருப்பூர்             94.38             312

தூத்துக்குடி          94.22             278

சிவகங்கை          93.44             256


சென்னை            93.42            589

மதுரை              93.13            449


ராமநாதபுரம்         93.11            227

கரூர்                92.71            180

ஊட்டி               92.69            177

தஞ்சாவூர்           92.59             390


திருச்சி              92.45            396

பெரம்பலூர்          92.33            124


திருநெல்வேலி       91.98            448

சேலம்               91.89            473

புதுச்சேரி             91.69            279

தர்மபுரி              91.66            285

புதுக்கோட்டை        90.48            295

திண்டுக்கல்          89.84            317

திருவள்ளூர்          89.19            580


காஞ்சிபுரம்           89.17            565

தேனி                87.66            184

வேலூர்              87.35            566

அரியலூர்            84.18            149

திருவாரூர்           84.13            203

கடலூர்              83.71            385

விழுப்புரம்           82.66            534

நாகப்பட்டினம்       82.28             263

திருவண்ணாமலை   77.84            450

Wednesday, May 14, 2014

அரசு மருத்துவக் கல்லூரி - எம்பிபிஎஸ் விண்ணப்பம் விற்பனை

எம்பிபிஎஸ் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பம் விற்பனை: அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெறலாம்

கோப்பு படம்
 
       தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில்மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 15 சதவீதம் (383) இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 85 சதவீதமான 2,172 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. 13 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து சுமார் 1,000 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது. சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 85 இடங்களும் 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் வழங்கும் சுமார் 900 இடங்களும் மாநில அரசால் நிரப்பப்படுகிறது. 

   2014-15ம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம், வரும் 14-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் விநியோகம் செய்யப்படுகிறது. எல்லா நாட்களிலும் (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். எம்பிபிஎஸ், பிடிஎஸ் இரண்டுக்கும் ஒரே விண்ணப்பம். விலை ரூ.500. தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அருந்ததியினர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது சாதிச் சான்றிதழின் 2 நகல்களை கொடுத்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில், ‘செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்குநரகம், 162, பெரியார் ஈ.வே.ரா.நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.