Thursday, December 18, 2014

பட்டதாரி ஆசிரியர் தகுதி பெற்று நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க அரசு பரிசீலிக்க ஏதுவாக விவரம் அளிக்க இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில், பட்டதாரி ஆசிரியர் தகுதி பெற்று நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க அரசு பரிசீலிக்க ஏதுவாக விவரம் அளிக்க இயக்குனர் உத்தரவு

பணியிட மாறுதல்களை நிறுத்திவைக்க அரசு முதன்மை செயலாளர் திருமதி.சபிதா உத்தரவு - அரசானை வெளியீடு


துறைத் தேர்வுகள் - நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது........

Wednesday, December 17, 2014

அரசு பள்ளிகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக நவீனப்படுத்த எஸ்.சி.இ.ஆர்.டி., பரிசீலனை


         தமிழகத்தில், அரசு பள்ளிகளை, ஸ்மார்ட் வகுப்பறைகளாக நவீனப்படுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் - எஸ்.சி.இ.ஆர்.டி., பரிசீலனை செய்து வருகிறது.


    புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம், அரசு பள்ளி மாணவர்களை, 21ம் நூற்றாண்டின் நவீன செயல்பாட்டிற்கு கொண்டு செல்வது; தற்போதைய கற்றல் - கற்பித்தல் முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள்; தொழில்நுட்பம் நிறைந்த வகுப்பறைகள் என்ற சூழ்நிலையை உருவாக்க, எஸ்.சி.இ.ஆர்.டி., முயற்சி எடுத்து வருகிறது.

     இதுதொடர்பாக, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மனிதவள மேம்பாட்டு மையங்களின் ஆலோசனைகள் கோரப்பட்டன.

  மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்திற்கு, 411 ஆய்வுகள் வந்தன; இதில், 211 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டன.

  இதுகுறித்து, எஸ்.சி.இ.ஆர்.டி., இணை இயக்குனர், அமுதவல்லி கூறுகையில், "தேர்வு செய்யப்பட்ட ஆய்வுகளை அனுப்பிய, கல்வியாளர்களை அழைத்து விளக்கமளிக்கும் வகையில், தேசிய கருத்தரங்கு, சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. பின், அரசுக்கு பரிந்துரைக்கப்படும்" என்றார்.

Monday, December 15, 2014

2 ஆண்டுகள் ஆனது பி.எட்., எம்.எட். படிப்புகள்: வழிகாட்டுதலை வெளியிட்டது என்.சி.டி.இ. .....


        தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, பி.எட்., எம்.எட். ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.


            இந்தப் படிப்புகள் இதுவரை ஓராண்டு படிப்புகளாக இருந்து வந்தன. தரமான ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கத்தில் படிப்புக் காலம் உயர்த்தப்பட்டுள்ளதாக என்.சி.டி.இ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

          உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதலை (என்.சி.டி.இ. வழிகாட்டுதல் 2014) முதன் முறையாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

            இந்த வழிகாட்டுதல் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அதன் தலைவர் சந்தோஷ் பாண்டா தெரிவித்தார்.

    இதில் ஆசிரியர் கல்வியியல் படிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

          புதிய வழிகாட்டுதலின்படி, இதுவரை ஓராண்டு படிப்பாக இருந்து வந்த இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பு (பி.எட்.), முதுநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பு (எம்.எட்.) ஆகியவற்றின் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

      ஆண்டுக்கு 200 வேலை நாட்கள் கல்லூரி நடத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், பி.எட். கல்லூரி தொடங்க விண்ணப்பிக்கும் அமைப்பு மொத்தமாக 2,500 சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தையும், 1,500 சதுர மீட்டர் பரப்பில் கட்டட வசதியையும் கொண்டிருக்க வேண்டும்.

        பி.எட்., எம்.எட். இரண்டு படிப்புகளையும் கொண்ட கல்லூரி தொடங்க குறைந்தபட்சம் 3,000 சதுர மீட்டர் நிலப் பரப்பையும், 2,000 சதுர மீட்டர் பரப்பில் கட்டட வசதியையும் கொண்டிருக்க வேண்டும்.

        பட்டயப் படிப்புக்கு ஒரே பெயர்: என்.சி.டி.இ. வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் பி.டி.சி., ஜே.பி.டி., டி.எட். என பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வரும் இரண்டு ஆண்டு ஆசிரியர் கல்வியியல் பட்டயப் படிப்பு இப்போது "டி.எல்.எட்' (தொடக்க ஆசிரியர் கல்வியியல் பட்டயப் படிப்பு) என ஒரே பெயராக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

          மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பு: 3 வயது முதல் 6 வயது வரையுடைய குழந்தைகளின் திறனை வளர்க்கும் வகையில் புதிதாக 2 ஆண்டு மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பை (டி.பி.எஸ்.இ.) என்.சி.டி.இ. அறிமுகம் செய்துள்ளது.

        இதுபோல் புதிய 3 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட்.,எம்.எட். படிப்பு, 4 ஆண்டு பி.எஸ்சி.பி.எட்., பி.ஏ.பி.எட்., ஆகியவற்றுக்கான புதிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Sunday, December 14, 2014

885 ஆசிரியப் பயிற்றுநர்களை பள்ளிக்கு மாறுதல் செய்ய வேண்டும் என்ற தீர்ப்பின் நகல் .....

        ஆசிரியப் பயிற்றுநர்களை பள்ளிக்கு அனுப்பக்கோரி, அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் மா.இராஜ்குமார் அவர்கள் தொடுத்த வழக்கில் 885 ஆசிரியப்பயிற்றுநர்களை பள்ளிக்கு மாறுதல் செய்ய வேண்டும் என்ற தீர்ப்பின் நகல்