Wednesday, October 3, 2018

பள்ளிகளில் விழாக்கள் எவ்வாறு கொண்டாட வேண்டும் - தலைமையாசிரியர்களுக்கு நெறிமுறைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு...



DGE - How To Upload NMMS Exam 2018 Application - Using Username And Password?


DGE - How To Upload NMMS Exam 2018 Application - Using Username And Password?


Flash News :Nmms online apply direct link Nmms தேர்வுக்கு விண்ணப்பிக்க நேரடி லிங்க் மற்றும் username password details

தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களின் புதிய சீருடை வெளியீடு.....


  தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளி மாணவர்களின் புதிய சீருடை வண்ணங்கள் மாற்றப்பட்டுள்ளது.

     இந்த அறிவிப்பை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.
        1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை  பச்சை நிற அரைகால் சட்டையும், இளம்பச்சை நிறக் கோடிட்ட மேல் சட்டையும் சீருடையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
       அதேபோல் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பழுப்பு நிறத்தால் ஆன முழுக்கால் சட்டையும், பழுப்பு நிறத்தால் ஆன கோடிட்ட மேல் சட்டையும் சீருடையாக வழங்கப்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த புதிய சீருடை திட்டம் வரும் கல்வி ஆண்டில் இருந்து அமலுக்கு வரும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
     இது குறித்த சுற்றறிக்கை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநரால் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sunday, September 9, 2018

தமிழக ஆசிரியர் கூட்டணி புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்வு


கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டம் கல்வித் துறையின் நிர்வாக வசதிக்காக 4 கல்வி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டதன் காரணமாக தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட அமைப்பு, மாநில தேர்தல் விதித் திருத்தத்தின் அடிப்படையில் கல்வி மாவட்ட அளவில் மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஒசூர் சூடவாடி துவக்கப் பள்ளியில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வருவாய்  மாவட்ட சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் அதன் மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக மாவட்டச் செயலாளர் திரு ம. பவுன்துரை அனைவரையும் வரவேற்றார். தலைவர் தமது உரையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கல்வித் துறையின் நிர்வாக வசதிக்காக மத்தூர், கிருஷ்ணகிரி, ஒசூர், டெங்கனிக்கோட்டை என 4 கல்வி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது பற்றியும் ஆசிரியர் நலன் காக்கும் வகையில் மாவட்டக் கல்வி அலுவலர்களை எளிதில் சந்தித்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாநில சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார்.
மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்களின் கருத்துரைகளுக்குப் பின்னர் மத்தூர், ஒசூர், டெங்கனிக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு கீழ்க் கண்ட பொறுப்பாளர்கள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
மத்தூர் கல்வி மாவட்டம்
1.   மாவட்டத் தலைவர்      :     சா. இராஜேந்திரன்
2.   மாவட்டச் செயலாளர்    :     செ. இராஜேந்திரன்
3.   மாவட்டப் பொருளாளர்   :     த. செல்வம்
4.   மாவட்ட மகளிர் அணி   :     க. தமிழ்ச்செல்வி
5.   மாவட்ட து. தலைவர்    :     இரா. சாந்தா
6.   மாவட்ட து. செயலாளர்  :     பா.ஜியாவுல்லா
7.   மாவட்ட தணிக்கைக் குழு :     சி. மாதையன்
நிகழ்வில் மாநிலப் பொருளாளர் திரு க. சந்திரசேகர் அவர்கள் புதியதாக தேர்வு பெற்ற பொறுப்பாளர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மேலும் சேலம் மாவட்டத் தலைவர் திரு க. உதயகுமார், ஊத்தங்கரை வட்டாரச் செயலாளர் சே. லீலாகிருஷ்ணன், மத்தூர் வட்டாரச் செயலாளர் இரா. தனசேகரன், ஒசூர் வட்டாரம் சார்பில் வெ.இராஜேந்திரன் சூளகிரி வட்டாரச் செயலாளர் இரா.இராஜேஸ் எபனேசர்,  கெலமங்கலம் வட்டாரச் செயலாளர் வே. சுமன், தளி வட்டாரச் செயலாளர் என்.லோகேஷ் உள்ளிட்ட அனைத்து பொருப்பாளர்களும் வாழ்த்துரை வழங்கினர்.  
     இறுதியில் டெங்கனிக்கோட்டை கல்வி மாவட்டத் தலைவர் தூ. மனுநீதி அனைவருக்கும் நன்றி கூறினார். 
























Saturday, August 25, 2018

தமிழக ஆசிரியர் கூட்டணி சிறப்புக் கூட்டம்




தமிழக ஆசிரியர் கூட்டணியின் ஊத்தங்கரை, மத்தூர் வட்டாரக் கிளைகளின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று (25.08.2018) ல் ஊத்தங்கரையில் நடைபெற்றது.
ஊத்தங்கரை வட்டாரத் தலைவர் திரு கி. நாகேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்திற்கு வட்டாரச் செயலாளர் திரு சே. லீலாகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். மத்தூர் வட்டாரச் செயலாளர் திரு ப. தனசேகர் கருத்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் திரு. செ. இராஜேந்திரன் அவர்கள் கலந்துக் கொண்டார். அவர் தனது சிறப்புரையில் இதுவரையில் வருவாய் மாவட்ட அளவில் செயல்பட்ட கிளைகள், மாநில அமைப்பின் சட்ட விதிகள் திருத்தத்தின் படி, நிர்வாக வசதிக்காக கல்வி மாவட்ட அளவில் செயல்படும் எனவும் அதற்கான புதிய பொருப்பாளர்கள் தேர்வு செய்வது குறித்தும், தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள பங்கேற்பு ஓய்வூதிய மாற்றம் மற்றும் ஊதியக் குழு முரண்பாடுகள் களையும் குழுக்கள் விரைவில் தனது அறிக்கைகளை வெளியிட வேண்டியதன் அவசியம் குறித்தும், அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாகப் பேசினார்.
பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் : 1.
     புதிய மத்தூர் கல்வி மாவட்டத்திற்கு பொருப்பாளர்களாக ஊத்தங்கரை மற்றும் மத்தூர் வட்டாரங்களில் இருந்து ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒப்புதல் வழங்குதல்.

தீர்மானம் : 2.
     கல்வி மாவட்ட அளவில் கிளைகள் துவக்கப்படுவதால் மாவட்டக் கிளைக்கான முழு அங்கீகாரம் பெறும் வகையில் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் : 3.
     பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டி தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை விரைவில் பெற்று நடைமுறையில் உள்ள பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசை கேட்டுகொள்ளல்.
தீர்மானம் : 4.
     இடைநிலை ஆசிரியர் உள்ளிட்டவர்களுக்கு ஊதியக் குழுவில் ஏற்பட்ட  ஊதிய நிர்ணய முரண்பாடுகளை களைய தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவின் அறிக்கையை விரைவில் பெற்று ஊதிய முரண்பாடுகளை களைய தமிழக அரசைக் கேட்டுக்கொள்ளல்
தீர்மானம் : 5.
     தமிழகத்தில் அனைத்து துவக்கப் பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் குறைந்தது இரண்டு ஆசிரியர் பணி புரியும் நிலையை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்துதல்.
தீர்மானம் : 6.
     அரசால் பள்ளிகளுக்கு வழங்கப்படும் புதிய தொழிற்நுட்ப வசதிகள் உள்ளிட்ட அனைத்து சிறப்பு வசதிகளையும் மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க வேண்டல்.
தீர்மானம் : 7.
     மறைந்த முன்னால் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி மற்றும் முன்னால் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயி ஆகியோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தல்.
இறுதியில் வட்டாரப் பொருளாளர் திரு த செல்வம் அனைவருக்கும் நன்றி கூறினார்.
     கூட்டத்தில் மத்தூர் வட்டாரப் பொருளாளர் க. இராஜேந்திரன், ஊத்தங்கரை வட்டார மகளிர் அணிச் செயலாளர் க. தமிழ்ச்செல்வி, செயற்குழு உறுப்பினர்கள் ஈ. அகிலாண்டேஸ்வரி, ச.சித்ரா, இரா.சாந்தா, க. சரஸ்வதி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.