சூளகிரி ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கிருஷ்ண தேஜஸ் அவர்களைக் கண்டித்து தமிழக ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆகிய இரு அமைப்புகள் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலாளர் திரு அ. வின்செண்ட் பால்ராஜ் அவர்கள் துவக்கி வைத்தார். தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் திரு பி. முனீஷ் அவர்கள் முன்னிலை வகித்தார்.
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலாளர் திரு இரா. தாஸ் அவர்கள் கண்டனப் பேருரை நிகழ்த்தினார். பின்னர் தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில மகளிர் அணிச் செயலாளர் திருமதி எஸ். தேன்மொழி, மாவட்டச் செயலாளர் திரு வ.மி. ஹபிபுர்ரஹ்மான், மாவட்ட தலைமை நிலையச் செயலாளர் திரு தூ. மனுநீதி தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் திரு. இரா. சேகர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
பின்னர் தோழமைச் சங்கங்கள் சார்பில் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் திரு டியூக். பொன்ராஜ், முன்னாள் மாவட்டத் தலைவர் திரு சரவணபவன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் துணைத் தலைவர் திரு கே. சென்னப்பன், அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் திரு அகோரம், தமிழ்நாடு சிறுபான்மை மொழி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் திரு வி. விஜயகுமார், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
முடிவில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் திரு கோ. முருகேசன் அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டத்தை முடித்து வைத்தார். இறுதியில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்டப் பொருளாளர் திரு அ.செ. நவீத்அக்பர் அனைவருக்கும் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்ட நிகழ்வில் சூளகிரி ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கிருஷ்ணதேஜஸ் அவர்கள்.........
* ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் செய்திட்ட ரூபாய் 13 இலட்சத்திற்கு மேற்பட்ட ஊழல்.
* ஆசிரியர்களிடையே மொழி, இனம்,சாதி அடிப்படையில் பிரிவினை உணர்வினைத் தூண்டுதல்
* ஆசிரியர்களை சங்க வேறுபாடுகளோடு அணுகும் அவலநிலை.
* தேவையில்லாமல் ஆசிரியர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களுக்கு தண்டனை அளித்தல்.
* ஆசிரியர் விரோதப் போக்கை கடைபிடித்தல்
உள்ளிட்ட தவறான போக்கை கண்டித்து அனைவரும் பேசி தமிழக அரசும், கல்வித் துறையும் அவரை உடன் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவியில் இருந்து நீக்கி ஆணை வழங்கிட கேட்டுக்கொண்டனர்.
No comments:
Post a Comment