தமிழக ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி மாவட்டக் கிளையின் செயற்குழுக் கூட்டம் இன்று (26.07.2014) ஒசூர் சூடவாடி துவக்கப் பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்டச் செயலாளர் இரா. பவுன்துரை அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் சேலம் சரக உருது உதவித் தொடக்கக் கல்வி அலுவலராகப் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ள முன்னாள் மாவட்டச் செயலாளர் திரு வ.மி. ஹபிபுர்ரஹ்மான் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தல், மாவட்டக் கிளை சார்பில் புதிய மாநிலப் பொருப்பாளர்களுக்கு பாராட்டு விழா நடத்துதல் மற்றும் ”ஆசிரியர் இயக்க குரல்” சந்தா சேகரிப்பு இயக்கம் அனைத்து வட்டாரக் கிளைகளிலும் நடத்துதல் உள்ளிட்ட செய்திகளை தனது உறையில் விரிவாக எடுத்துக் கூறினார். பின்னர் மாவட்டச் செயலாளர் அவர்கள் இதைச் செயல் வடிவம் பெறத் தக்க அறிவுரைகளை வழங்கிய பின்னர் அனைத்து வட்டாரப் பொருப்பாளர்களும் தமது கருத்துரைகளைப் பதிவு செய்தனர். அதன் பின் கீழ்க் கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள் :
1. சேலம் சரக உருது உதவித் தொடக்கக் கல்வி அலுவலராகப் பணி மாற்றம்
செய்யப்பட்டுள்ள முன்னாள் மாவட்டச் செயலாளர் திரு வ.மி. ஹபிபுர்ரஹ்மான்
அவர்கள் பணி சிறக்க இச்செயற்குழு பாராட்டு தெரிவிக்கிறது.
2. வரும் 12.10.2014 அன்று தளியில் தமிழக ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி மாவட்டக் கிளையின் சார்பில் புதிய மாநிலப் பொருப்பாளர்களுக்கு பாராட்டு விழா மிகச் சிறப்பாக நடத்துதல்.
3. அனைத்து வட்டாரங்களிலும் ”ஆசிரியர் இயக்க குரல்” சந்தா சேகரிப்பு இயக்கம் நடத்தி, 300க்கும் அதிகமான ஆயுட் சந்தாக்களை சேர்த்து 12.10.2014 விழாவில் மாநில பொருப்பாளர்களிடம் வழங்குதல்.
இன்றைய கூட்டத்தில் ஊத்தங்கரை, மத்தூர். ஒசூர், தளி, கெலமங்கலம், சூளகிரி ஆகிய ஒன்றியங்களின் பொருப்பாளர்களும், மாவட்ட தலைமை நிலையச் செயலாளர் திரு தூ. மனுநீதி, உள்ளிட்ட அனைவரும் கலந்துக்கொண்டனர்.
இறுதியில் மாவட்டப் பொருளாளர் திரு அ.செ. நவீத்அக்பர் அனைவருக்கும் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment