Wednesday, August 27, 2014

வட்டாரச் செயற்குழுக் கூட்டம்.


தமிழக ஆசிரியர் கூட்டணி
ஊத்தங்கரை வட்டாரக் கிளை
வட்டாரச் செயற்குழுக் கூட்டம்.
இன்று (26.08.2014) தமிழக ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் செயற்குழுக் கூட்டம் வட்டாரத் தலைவர் திரு கி. கோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக வட்டாரச் செயலாளர் திரு சே. லீலாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்டார். அவர் தமது சிறப்புரையில் வரும் 12.10.2014 அன்று நடைபெற உள்ள மாவட்ட சிறப்பு மாநாட்டில் இவ்வட்டாரத்தில் இருந்து அதிக அளவிலான ஆசிரியர்கள் கலந்துக்கொள்ள வேண்டுமெனவும், இவ்வட்டாரத்தில் ஒய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவை மிக சிறப்பாக நடத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இயக்கம் தொடர்பானவை
தீர்மானம் : 1.
    வரும் 12.10.2014 ல் நடைபெற உள்ள மாவட்ட சிறப்பு மாநாட்டில் ஊத்தங்கரை வட்டாரத்தில் இருந்து அதிக அளவிலான ஆசிரியர்கள் பங்கேற்று சிறப்பித்தல்.
தீர்மானம் : 2.
     ஊத்தங்கரை ஒன்றியத்தில் பணிநிறைவு பெற்ற 5 இயக்க ஆசிரியர்களுக்கு மிகச்சிறப்பான முறையில் பாராட்டு விழா நடத்துதல்.
தீர்மானம் : 3.
     இயக்க இதழான “ஆசிரியர் இயக்க குரல்” க்கு 50 ஆயுட் சந்தாக்களை திரட்டி அளித்திட முயற்சி மேற்கொள்ளல்.
தமிழக அரசுக்கானவை :
தீர்மானம் : 4.
     தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு  மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட உரிய ஆணை விரைந்து வழங்கிட வேண்டும்.
தீர்மானம் : 5.
     பங்கேற்பு ஓய்வூதியத் திட்ட்த்தை முற்றிலுமாக இரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்திட வழிவகை செய்ய வேண்டும்.
      இறுதியில் வட்டாரப் பொருளாளர் திரு பூ. இராம்குமார் நன்றி கூறினார். கூட்டத்தில் திருமதி ஈ. அகிலாண்டேஸ்வரி, திருமதி இரா. சாந்தா, திரு மொ. சிதம்பரம், திரு கி. நாகேஷ், திரு த. செல்வம் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.




No comments:

Post a Comment