அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை தேர்வு
செய்வதற்காக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர்
தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய வெயிட்டேஜ்
மதிப்பெண்கள் அடிப்படையிலான தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.
கடந்த மாதம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் வெளியிடப்பட்ட நிலையில்,
தற்போது இடைநிலை ஆசிரியர்களுக்கான, வெயிட்டேஜ் மதிப்பெண்களுடன் கூடிய
பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
கடந்த மே மாதம் தமிழக அரசு
அறிவித்த, புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்களுக்கான அரசாணை அடிப்படையில், இந்த
பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. தேர்ச்சி பெற்றவர்கள் www.trb.tn.nic.in
என்ற இணையதளத்தில் தங்களின் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம் என்றும்
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
தெரிவிக்கப்பட்டிருகிறது
No comments:
Post a Comment