Wednesday, September 2, 2015

தமிழக ஆசிரியர் கூட்டணியின் - வட்டார அளவிலான ஆர்ப்பாட்டம்



இன்று 02.09.2015 தமிழக ஆசிரியர் கூட்டணியின் ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் சார்பில், மத்திய அரசு 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள  தொழிற்சங்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் திரு கி. கோபால் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக வட்டாரச் செயலாளர் திரு சே. லீலாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அவர் தமது உரையில் மத்திய அரசு 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும், இதனால் ஆசிரியர்களாகிய நாம் எந்த அளவுக்கு பாதிப்படைய உள்ளோம் என்பது குறித்தும் விரிவாகப் பேசினார்.
இறுதியில் வட்டாரப் பொருளாளர் திரு த. செல்வம் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணிச் செயலாளர் திருமதி க. தமிழ்ச்செல்வி, திருமதி ஈ. அகிலாண்டேஸ்வரி, திருமதி ச. சித்ரா, திருமதி க. சரஸ்வதி, திருமதி இரா. சாந்தா, திருமதி மு. இலட்சுமி, திருமதி த. லதா, திரு கி. நாகேஷ், திரு மு. சம்பத், திரு க. அன்பு, திரு கா. சக்திவேல், திரு இரா. இராஜா, திரு ஆ. மணிவண்ணன்  உள்ளிட்ட ஏராளாமான ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.








No comments:

Post a Comment