4 & 5 ஆம் வகுப்புகளுக்கு இரண்டாம் - பருவத் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து பள்ளியின் UDISE எண் & கடவுச்சொல் உள்ளீடு செய்து 15.12.22 முதல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் ..
Wednesday, December 14, 2022
4 & 5 வகுப்புகளுக்கு இரண்டாம் - பருவத் தேர்வு நடத்துதல் சார்ந்து....SCERT இயக்குநரின் செயல்முறைகள்...
4 & 5 வகுப்புகளுக்கு இரண்டாம் - பருவத் தேர்வு நடத்துதல் சார்ந்து....SCERT இயக்குநரின் செயல்முறைகள்...
தமிழ்நாடு அமைச்சர்களின் துறைகள் மாற்றம்.......
தமிழக அமைச்சர்களின் இலக்குகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழக அரசின் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 11 தமிழ்நாடு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. சிலருக்குக் கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
* அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு;
* அமைச்சர் பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு
* வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு
* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு
* கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக நியமனம்
* சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு
* விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யானாதன், சுற்றுசூழல் துறை தொடர்ந்து கவனிப்பார்
* அமைச்சர் சேகர் பாபுவிடம் கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்துறை ஒதுக்கீடு
அமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு
அமைச்சர் ஆர். காந்திக்கு கைத்தறி, ஜவுளித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வருமான வரி விளக்கங்கள் - நிதியாண்டு 2022-2023 ( தமிழில்...)
மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு.......
.
Applications are invited from eligible candidates only through online mode upto 13.01.2023 for direct recruitment to the vacancies in the post of District Educational Officer ( Group - I C Services ) in School Education Department included the Tamil Nadu School Educational Service
Friday, December 9, 2022
வட்டாரக் கல்வி அலுவலருக்கு மீண்டும் தேர்வுநிலை/சிறப்புநிலை வழங்கும் அதிகாரம்........
இரண்டாம் பருவம் தொகுத்தறிவு தேர்வு 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை தேர்வுகள் நடத்துவது சார்ந்து SCERT இயக்குநரின் புதிய செயல்முறைகள் .....
இரண்டாம் பருவம் தொகுத்தறிவு தேர்வு 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை தேர்வுகள் நடத்துவது சார்ந்து SCERT இயக்குநரின் புதிய செயல்முறைகள் .........
Thursday, December 8, 2022
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் தேதி மாற்றம் (டிசம்பர் 12.12.22,13.12.22) -மற்றும் கூட்டப் பொருள் சார்ந்து -பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறைகள் ...
ஊரகத் திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு - அரசுத் தேர்வுத் துறை அறிவிப்பு......
அரசு பள்ளிகளுக்கு சுமார் 800 கோடி மதிப்பீட்டில் 6000 புதிய வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு.......
ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் 800 கோடி மதிப்பீட்டில் 6000 புதிய வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது......
கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு நாளை 09.12.2022 விடுமுறை......
மாண்டஸ் புயல் மழை காரணமாக இதுவரை 15 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ( 09.12.2022 ) விடுமுறை
* கள்ளக்குறிச்சி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* புதுக்கோட்டை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* அரியலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* தஞ்சாவூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* திருவாரூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* திருப்பத்தூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* விழுப்புரம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* கடலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* சென்னை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* காஞ்சிபுரம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* வேலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
Wednesday, December 7, 2022
மாநில அளவிலான கலைத் திருவிழா - போட்டிகள் நடைபெறும் நாட்கள் அறிவிப்பு.......
நிர்வாக காரணங்களுக்காக மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 27.12.2022 முதல் 30.12.2022 வரை நடைபெற உள்ளன.
இனி அனைத்து நலத்திட்டங்களும் EMISல் பதிவாகி உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு மட்டுமே - பள்ளிக் கல்வித்துறை........
அனைத்து வகை அரசு / அரசு உதவி / பகுதி நிதி உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கல்வி தகவல் மேலாண்மை மையத்திடமிருந்து ( EMIS ) பெறப்பட்டு இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் 2023-2024 கல்வியாண்டிற்கு அனைத்து வகை நலத்திட்டங்களும் மாணாக்கர்களுக்கு வழங்க வேண்டியுள்ளதால் முதன்மை கல்வி அலுவலர்கள் இதன் மீது தனி கவனம் செலுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையினை சரிபார்த்து அதில் வேறுபாடு இருப்பின் அதனையும் EMIS - இல் 16.12.2022 - க்குள் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.
இனி வருங்காலங்களில் முதன்மை கல்வி அலுவலரால் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே சார்ந்த நலத்திட்டங்களுக்கான தேவைப்பட்டியலாக ( Indent ) எடுத்துக்கொள்ளப்படும் எனவும் இதன் மூலம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பகுதி நேரப் பயிற்றுநர்கள் (ஓவியம்) கலந்தாய்வு 13/12/2022க்கு ஒத்திவைப்பு.......
மேலும் , பணியிட மாறுதல் கலந்தாய்வு 13.12.2022 செவ்வாய் கிழமை அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி.........
மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி வட்டார அளவில் ஆசிரியர்களுக்கு 02.01.2023 முதல் 04.01.2023 வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது.
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலங்களையும் சேர்த்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு நிலை வழ்குதல் அரசாணை வெளியீடு....
GO NO : 219 , Date : 02.12.2022
இடைநிலை ஆசிரியர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலங்களையும் சேர்த்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு நிலை வழ்குதல் அரசாணை வெளியீடு
CONT.P.No.1355 of 2022 & BATCH COMPLIANCE ORDER - Download here
நேரடி பட்டதாரிகளையே ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும்: உயா் நீதிமன்றம்......
கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று படித்தவா்களையே ஆசிரியா்களாக நியமிக்கும் வகையில் ஆசிரியா் நியமன நடைமுறைகளை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய தமிழக பள்ளிக் கல்வி மற்றும் உயா் கல்வித் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்துக்குள்பட்ட அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த நித்யா, ஆங்கில பாடப் பிரிவுக்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயா்வு வழங்க கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி.எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘மனுதாரா், தமிழ் பாடப்பிரிவில் பி.எட்., படிப்பை முடித்துள்ளாா். அதன்பின்னா், இளநிலை ஆங்கிலத்தை தொலைநிலைக் கல்வி முறையின் கீழ் படித்துள்ளாா். எனவே, மனுதாரா் பதவி உயா்வுக்கு தகுதி பெறவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழ் பாடத்துக்கான பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வுக்கு மனுதாரரை பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டாா்.
மேலும், கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று படித்தவா்களையே ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் ஏற்கெனவே பல வழக்குகளில் தீா்ப்பளித்துள்ளது. தொலைநிலைக் கல்வி மூலம் படித்தவா்கள் ஆசிரியா் பணிக்குத் தகுதியானவா்கள் அல்ல. இட ஒதுக்கீட்டின் கீழ் நியமனம் மேற்கொள்வதாக இருந்தாலும் கூட, தகுதியானவா்களையே ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும். தற்போது ஆசிரியா்களாக உள்ள பெரும்பாலானோா் கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று படிக்காதவா்களாக இருப்பது துரதிா்ஷ்டவசமானது.
அகில இந்திய அளவில் கல்வியின் தரத்தில் தமிழகம் 27-ஆவது இடத்தில் உள்ளது. கல்விக்கு ஆண்டுக்கு ரூ.36,895 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், பெருந்தொகை ஆசிரியா்கள் ஊதியத்துக்கே செலவிடப்படுகிறது.
ஆசிரியா்கள் நியமனம் தொடா்பான திட்டத்தை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வி மற்றும் உயா் கல்வித் துறை செயலாளா்களுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்
ஆசிரியர் தகுதித் தேர்வு - 2022, தாள் 1 முடிவுகள் வெளியீடு.....