Wednesday, August 6, 2014

முதுகலை ஆசிரியர் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு......

இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

             அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அடிப்படையிலான தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இடைநிலை ஆசிரியர்களுக்கான, வெயிட்டேஜ் மதிப்பெண்களுடன் கூடிய பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
     கடந்த மே மாதம் தமிழக அரசு அறிவித்த, புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்களுக்கான அரசாணை அடிப்படையில், இந்த பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. தேர்ச்சி பெற்றவர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களின் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருகிறது

ஆசிரியர்கள் முன் அனுமதி பெறாத நேர்வுகளில் ஊக்க ஊதியம் அனுமதிக்கக்கூடாது என இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் முன் அனுமதி பெறாத நேர்வுகளில் ஊக்க ஊதியம் அனுமதிக்கக்கூடாது என இயக்குனர் உத்தரவு

Wednesday, July 30, 2014

2014-15ம் கல்வியாண்டில் புதியதாக பள்ளிகளை தரம் உயர்த்தி முதல்வர் உத்தரவு

       2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 128 தொடக்கப் பள்ளிகளும், 42 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி முதல்வர் உத்தரவு

காமன்வெல்த் போட்டியில் 10 தங்கப்பதக்கங்களை அள்ளிய இந்தியா

          கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டியில், மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு இன்று ஒரே நாளில் 3 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. மல்யுத்தத்தில் இந்திய வீரர்கள் சுஷில்குமார்,அமித்குமார், மற்றும் இந்திய வீராங்கனை வினேஸ் தங்கப்பதக்கம் வென்றனர். இதுவரை 36 தங்கப்பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

      ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்தியா பதக்கப்படியலில் 7வது இடத்தில் இருந்தது.

           மல்யுத்தத்தில் 3 தங்கம்: இன்று மல்யுத்த போட்டியில், இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம் கிடைத்தது. முதல் தங்கத்தை அமித் குமார் பெற்றுத்தந்தார். அவர், ஆண்கள் பிரிவு 57 கிலோ பிரிவில் எபிக்வெமினோமோ வெல்சனை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

            இந்திய வீராங்கனை வினேஸ், இங்கிலாந்தின் யானா ரட்டிகனை, மகளிர் 48 கிலோ பிரிவில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

      3வது தங்கத்தை சுஷில்குமார் பெற்றார். அவர்74 கிலோ பிரிவில், பாகிஸ்தானின் அப்பாசை வீழ்த்தி இந்தியாவுக்கு 10வது தங்கத்தை பெற்றுத்தந்தார்.

85 கிலோ பளுதூக்குதல் 85 கிலோ பிரிவில், இந்திய வீரர் விகாஸ் தாகூர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
காமன்வெல்த் போட்டியில், மல்யுத்தம் 125 கிலோபிரிவில் இந்திய வீரர் ராஜீவ் தோமர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ளூதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு வெண்கலம் கிடைத்தது.சந்திரகாந்த் வாளி வெண்கலப்பதக்கம் வென்றார்.

       துப்பாக்கி சுடுதலில் மேலும் பதக்கங்கள்: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் பல பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில் இன்றும் மேலும் பதக்கங்கள் கிடைத்தன.
        25 மீட்டர் ரேபிட் பைபர் பிரிவில், ஹர்ப்ரீட் சிங் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

      ஆண்கள் பிரிவு துப்பாக்கிசுடுதலில் இந்திய வீரர் மனவ்ஜீத் சந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

        50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் இந்தியாவின் லஜ்ஜா கோஸ்வாமி வெண்கலப்பதக்கம் வென்றார்.

     இதன் மூலம், இந்தியா 10 தங்கம், 15 வெள்ளி மற்றும் 11 வெண்கலப்பதக்கங்களுடன் இந்தியா 6வது இடத்தில் உள்ளது

இந்த ஆண்டு 887 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்

           தமிழக அரசு தகவல் இந்த ஆண்டு புதிதாக 887 இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டில் 9,692 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதன் காரணமாக, இப்போது இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் குறைவான காலிப் பணியிடங்களே உள்ளன.

          கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 30 ஆயிரத்து 592 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அவர்களில் 887 பேர் மட்டுமே இந்த ஆண்டு பணி நியமனம் செய்யப்படுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் 42 ஆயிரத்து 109 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் இந்த ஆண்டு சுமார் 11ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

15 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கு தலைமை ஆசிரியர்களை கூடுதல் பொறுப்பாக நியமித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது

          தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு தாமதம் காரணமாக 15 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கு தலைமை ஆசிரியர்களை கூடுதல் பொறுப்பாக நியமித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்களாக பணியாற்றிய 15 பேருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக கடந்த 25ம் தேதி பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இவர்கள் உடனே புதிய பணியிடங்களில் சேரவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.


           இதனால் தமிழகத்தில் 15 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதன் மூலமும், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலமும் நிரப்பப்படுவது வழக்கம்.
பதவி உயர்வு தாமதமாக� வருவதால் தற்போது 15 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கு மேல்நிலைப் பள�ளி, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அந்த நிலையில் பணியாற்றுபவர்களை மாவட்ட கல்வி அலுவலர் கூடுதல் பொறுப்பாக நியமித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் விவரம் வருமாறு: (அவர்கள் தற்போது வகிக்கும் பணியிடம் அடைப்புக்குறிக்குள்)
1) சுப்பிரமணியன் (மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர், சென்னை) & ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர், சென்னை.
2) சுடலைமுத்து (தலைமை ஆசிரியர், சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி) & மாவட்ட கல்வி அலுவலர், தூத்துக்குடி.
3) முருகானந்தம் (தலை மை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, தருமத்துப் பட்டி, திண்டுக்கல் மாவட் டம்) & மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர், திண்டுக்கல்.
4) வளர்மதி (தலைமை ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை) & மாவட்ட கல்வி அலுவலர், பட்டுக்கோட்டை.
5) ராஜா (தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, தேவீரப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி.
6) சிவஞானம் (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கோவிலூர், திருவண்ணாமலை மாவட் டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், திருவண்ணாமலை.
7) வனஜா (தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கலையம்புதூர், திண்டுக்கல் மாவட்டம்) & மாவட்ட கல்வி அலுவலர், பழனி, திண்டுக்கல் மாவட்டம்.
8) லட்சுமி (தலைமை ஆசிரியர், அரசு மேல்ந�லைப்பள்ளி, இலுப்பூர், புதுக்கோட்டை மாவட்டம்) & மாவட்ட கல்வி அலுவலர், அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம்.
9) நீலவேணி (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, பழையனூர், சிவகங்கை மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், சிவகங்கை.
10) தமிழ்ச்செல்வன் (தலைமை ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி, கடலூர் மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், கடலூர்.
11) பிச்சையப்பன் (மெட் ரிக் பள்ளிகள் ஆய்வாளர், கடலூர்) & மாவட்ட கல்வி அலுவலர், கடலூர்.
12) பவுன் (தலைமை ஆசிரியர், நகராட்சி உயர்நிலைப்பள்ளி, சின்னமனூர், தேனி மாவட்டம்) & மாவட்ட கல்வி அலுவலர், உத்தமபாளையம், தேனி மாவட்டம்.
13) தெய்வசிகாமணி (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, இலந்தைக்கூடம், அரியலூர் மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், அரியலூர்.
14) சங்கரராமன் (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, வில்லிசேரி, தூத்துக்குடி மாவட்டம்) & மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், தூத்துக்குடி.
15) ஜேக்கப் அருள் மாணிக்கராஜ் (தலைமை ஆசிரியர், இசிஇ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தென்காசி) & மாவட்ட கல்வி அலுவலர், தென்காசி, நெல்லை மாவட்டம்.