CEO PROMOTION | 4 பேர் முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூரில் உள்ள அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா,
சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து
அவர் நேற்று பதவி ஏற்றார்.
4 பேர் முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அவர்கள் பெயர்
விவரம் வருமாறு:-
கரூர் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி பொன்னம்மாள் பதவி உயர்வு பெற்று, கரூர்
அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
பொள்ளாச்சி மாவட்ட கல்வி அதிகாரி சண்முகவடிவு, பதவி உயர்வு பெற்று
அனைவருக்கும் கல்வி திட்ட தஞ்சாவூர் முதன்மை கல்வி அதிகாரியாக
பணிஅமர்த்தப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி ஜெயமீனா தேவி பதவி உயர்வு பெற்று,
வேலூர் அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரியாக
நியமிக்கப்பட்டார்.
கோவில்பட்டி மாவட்ட கல்வி அதிகாரி பத்மாவதி பதவி உயர்வு பெற்று,
ராமநாதபுரம் அனைவருக்கும் கல்விதிட்ட முதன்மை கல்வி அதிகாரியாக செல்கிறார்.
இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.