Sunday, July 12, 2015
Monday, June 8, 2015
மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்தால் கடும் நடவடிக்கை : பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை
ஆசிரியர்கள் பண்பாட்டிற்கும்,
கலாச்சாரத்திற்கும் உகந்ததாக ஆடை அணிய வேண்டும். மாணவிகளை தொடுவதோ,
கிள்ளுவதோ கூடாது. தொந்தரவு செய்வது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்
என்று பள்ளி கல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து பள்ளி கல்வி
இயக்குனர் விடுத்துள்ள சுற்றறிக்கை: மாணவ, மாணவிகளுக்கு நல்லதோர்
முன்னுதாரணமாகவும், வழிக்காட்டியாகவும் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
ஆசிரியர்களும், ஆசிரியைகளும் பள்ளிக்கு வரும்போது பண்பாட்டிற்கும்,
கலாசாரத்திற்கும் உகந்த ஆடைகளை அணிய வேண்டும். இதை அந்தந்த பள்ளி தலைமை
ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். மாணவ, மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான
முறையில் தவறாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
எடுக்கப்படும். அரசையோ, அரசு சார்ந்த அதிகாரிகளையோ தேவையற்ற விமர்சனம்
செய்வது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடத்தைவிதி 12ன் கீழ் நடவடிக்கை
எடுக்கப்படும்.
ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுக்கும் போது 5
நாட்களுக்கு மேல்தான் விடுப்பு எடுக்க வேண்டும். அடிக்கடி மருத்துவ
விடுப்பு எடுத்தால், மருத்துவ குழுவிற்கு அனுப்பப்படும். வருடத்திற்கு 3
மாதம் என கணக்கிட்டு விடுப்பு எடுக்க வேண்டும். தலைமையாசிரியர்கள் விடுப்பு
எடுக்கும்போது உயர் அலுவலரின் அனுமதி இல்லாமல் எடுக்கக்கூடாது. அவ்வாறு
விடுப்பில் செல்லும் போது உதவி ஆசிரியர்களிடம் பொறுப்பினை ஒப்படைத்து செல்ல
வேண்டும். பள்ளிகளில் அளவைப் பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும்.
ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு மற்றும் அனைத்து தபால்களிலும் தமிழில் மட்டுமே
கையொப்பமிட வேண்டும்.
பள்ளி வேலை நேரத்தில் வகுப்பை விட்டு வேறு
வகுப்பிற்கோ, வேறு அலுவலகத்திற்கோ செல்லக்கூடாது. உதவி ஆசிரியர்கள்
வகுப்பறையில் செல்போன் பள்ளி நேரத்தில் பயன்படுத்தக்கூடாது. மாணவர்களை
அடிப்பதோ, உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கக் கூடாது.
மேலும் பெண் பிள்ளைகளை தொடுவதோ, கிள்ளுவதோ, பாலியல் தொந்தரவு செய்வதோ
தெரியவந்தால் நடத்தை விதி 20ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்ளூர்விடுப்பு (லோக்கல் ஹாலிடே) தேவைப்படுகிற தலைமையாசிரியர் இரண்டு
நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, June 7, 2015
Wednesday, June 3, 2015
பள்ளிகள் ஆண்டாய்வு,பள்ளிகள் பார்வை சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் அறிவுரைகள்...
தொடக்க
கல்வி-உதவி தொடக்க கல்வி அலுவலர்/கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள்
மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு,பள்ளிகள் பார்வை சார்ந்து தொடக்க
கல்வி இயக்குனரின் அறிவுரைகள்...
Tuesday, June 2, 2015
பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்து அரசு உத்தரவு
CEO Transfer List
✅Radhakrishnan ceo kanyakumari to Pta secretary chennai
✅Virudhu Nagar ceo Jayakumar to virudhunagar
✅Tiruvannamalai SSA ceo pugalhendhi to Viruthunagar ceo
✅Krishnagiri SSA ceo Mr.Ponkumar to Tiruvannamalai Ceo
✅ Karur ceo tiruvalarselvi to Tanjore
✅ Tanjore ceo tamilvannan to Krishnagiri
✅ Krishnagiri ceo to karur
✅Tuticorn ceo munusamy to perambalur
✅ Nagapattinam ceo Ramakrishnan to Tuticorn
✅Coimbatore ceo gnanagowri to salem
. ✅ KANCHEEPURAM ceo Shanthy to pudhukottai
✅ Pudhukottai ceo arulmurugan to Coimbatore
✅ Salem SSA ceo Usha to KANCHEEPURAM

பள்ளிக்கல்வித்துறையில்
முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்து அரசு உத்தரவு =Mr.Radhakrishnan
ceo Kanyakumari to PTA Secretary Chennai = Virudhu Nagar ceo Mr.
Jayakumar to Kanyakumari, = Tiruvannamalai SSA ceo Mr.Pugazhendhi to
Viruthunagar ceo, = Krishnagiri SSA ceo Mr.Ponkumar to Tiruvannamalai
ceo, = Karur ceo Mrs.Tiruvalarselvi to Tanjore, = Tanjore ceo
Mr.Tamilvannan to Krishnagiri, =Krishnagiri ceo toKarur, = Tuticorn ceo
Mr.Munusamy to Perambalur,CEO = Nagapattinam ceo Mr.Ramakrishnan to
Tuticorin, =Coimbatore ceo Mrs.Gnanagowri to Salem.. = Kanchipuram
ceoMrs. Shanthy to Pudhukottai =Pudhukottai ceo Mr.Arulmurugan to
Coimbatore, = Salem SSA ceo Mrs. Usha to Kanchipuram. Copy and WIN :
http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN :
http://ow.ly/KNICZ
Copy and WIN : http://ow.ly/KNICZ

Saturday, May 23, 2015
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க விரைவில் வருது...விருட்சுவல் கிளாஸ்
விருதுநகர்: அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, கற்றல் திறன், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த தமிழக அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது. முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25 அரசு பள்ளிகளில் ‘விருட்சுவல் கிளாஸ் ரூம்கள்’ அமைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ‘மாடர்ன் பள்ளியாக’ அரசு பள்ளிகள் செயல்பட உள்ளன. ஒரு பள்ளியில் ஆசிரியர் எடுக்கும் பாடம் இந்த முறை உள்ள மற்ற பள்ளிகளிலும் பார்வையிடும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் இவ்வசதி துவங்க உள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை என 53,772 பள்ளிகள் உள்ளன. இதில், 36,962 மேல்நிலைப்பள்ளிகள் அடங்கும். அரசு பள்ளிகளில் 5 லட்சத்து 20,532 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். ஒரு காலத்தில் அரசு பள்ளிக்கென்று இருந்த கம்பீரம் கடந்த சில ஆண்டுகளாக காற்றில் பறந்துக் கொண்டிருக்கிறது. தனியார் பள்ளிகளின் வசதிகள், பாடமுறைகளுக்கு ஈடுகொடுக்க முடியாததால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை சதவீதம் குறைந்து வருகிறது. கிராமங்களில் வசிப்பவர்கள், ஏழை, எளிய மக்கள் மட்டுமே தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கின்றனர். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூட தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழக அரசு சார்பில் சத்துணவு, காலணிகள், சைக்கிள், பாடபுத்தகங்கள், லேப்டாப் என வழங்கினாலும் மாணவர்கள் சேர்க்கையில் அரசு பள்ளிகள் பின்தங்கியே உள்ளன. பல இடங்களில் ஆசிரியர் எண்ணிக்கையை விட மாணவர்கள் குறைவாக(!?!) இருக்கும் அரிய சம்பவமும் நடந்து வருகிறது. ஒரு சில ஊர்களில் அரசு பள்ளிகளை மாணவர்களின்றி பூட்டும் கொடுமையும் நடந்து வருகிறது. இந்த முறையை மாற்ற தற்போது ஸ்மார்ட் கிளாஸ் ஒரு சில அரசு பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவதை தடுக்கும் வகையில் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் நடத்தப்பட்டன. எனினும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கவில்ைல. தனியார் பள்ளிகளில் கம்ப்யூட்டர் மூலம் கற்பிக்கும் வகுப்பறைகள், ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் என அடுத்தடுத்து நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து முதல்கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும் தலா 25 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ‘விருட்சுவல் கிளாஸ் ரூம்’ அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவைகள் இந்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வர உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விருட்சுவல் வகுப்பறைகளில் கம்ப்யூட்டர்கள், ஹெட்போன், புரஜெக்டர் உள்ளிட்ட கணினி சார் உபகரணங்கள் இருக்கும். இந்த வகுப்பறைகளில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும். மாணவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் குறைதீர் கற்றல்முறை வழங்கப்படும். வீடியோ மூலம் பாடங்கள், பாடப்பொருட்கள் வடிவமைத்தல் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும். இந்த வசதி உள்ள வகுப்பறையில் இருந்து எடுக்கப்படும் பாடத்தை, இதே வசதி கொண்ட மற்றொரு வகுப்பறையில் உள்ள மாணவர்களும் கற்கலாம். உதாரணத்திற்கு, மதுரையில் எடுக்கப்படும் ஒரு பாடத்தை, அதே நேரம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் பயிலும் விதத்தில் நவீனமயமாக்கப்பட உள்ளது.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தலா 25 விருட்சுவல் கிளாஸ் ரூம்கள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ள 25 அரசு பள்ளிகளில் நடப்பாண்டில் விருட்சுவல் கிளாஸ் ரூம்கள் அமைக்கப்படும். இதன்மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும், பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதமும் அதிகரிக்கும்’ என்றார். இதுகுறித்து ஸ்டூடண்ட்ஸ் இயக்குனர் ராஜராஜன் கூறுகையில், ‘ஒரு காலத்தில் அரசு பள்ளிகளில் படித்தால்தான் கவுரவம் என்ற பெற்றோரின் மனநிலை மெல்ல, மெல்ல மாறி வருகிறது. கடனை வாங்கியாவது தனியார் பள்ளிகளில் சேர்த்து நல்ல மதிப்பெண் எடுக்க வைத்துவிட வேண்டும் என்னும் மனநிலை ஏழை பெற்றோரிடமே ஏற்பட்டு விட்டது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்காக தியாகம் செய்யும் ஆசிரியர்கள் சரளமாக குறைந்து விட்டனர். அரசு இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை காட்டி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்’ என்றார்.
அரசு பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், ‘மாணவர்கள் சேர்க்கைைய அதிகப்படுத்த ஒரு சில அரசு பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்கள், ஊர் பிரமுகர்கள், ஊராட்சி தலைவர்கள் நிதி திரட்டி கம்ப்யூட்டர் வசதியுடன் ஸ்மார்ட் கம்ப்யூட்டர் வசதியுடன் ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தை நிறைவேற்றி வருகின்றனர். தமிழக அரசு கூடுதல் அக்கறை காட்டும் பட்சத்தில் அரசு பள்ளிகளும் தனியார்களுக்கு ஈடு கொடுத்து முன்னேறும்’ என்றார்.
ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட 24 பதவிக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பு
மத்திய அரசின் உயர் பதவியான, ஐ.ஏ.எஸ்., -
ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 பதவிகளில், 1,119 காலியிடங்களை நிரப்புவதற்கான,
சிவில் சர்வீசஸ் தேர்வு, ஆக., 23ம் தேதி நடக்கிறது; இதற்கு, இன்று முதல்
ஆன் - லைனில் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் உயர் பதவிகளான, ஐ.ஏ.எஸ்., -
ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., புதுச்சேரி போலீஸ் சர்வீஸ், இந்தியக் கணக்குகள்
துறை அதிகாரி உள்ளிட்ட, 24 வகை பதவிகளுக்கு, சிவில் சர்வீசஸ் தேர்வை,
மத்திய அரசு நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வின் அறிவிக்கை,
இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. இந்த ஆண்டு, ஆக., 23ல் முதல்நிலைத்
தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும்
வேலூர் ஆகிய ஊர்கள், தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
இத்தேர்வுக்கு www.upsconline.nic.in என்ற இணையதளத்தில், ஆன் - லைன் மூலம்
மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, ஜூன் 19ம் தேதி, இரவு
11:59க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று, மத்திய அரசின் பணியாளர்
தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தேர்வின் முழு விவரங்களும்,
மே 23ம் தேதி எம்ப்ளாய்மென்ட் நியூஸ் பத்திரிகை,
www.employmentnews.gov.in, மற்றும் http://www.upsc.gov.in/ இணையதளங்களில்
தெரிந்து கொள்ளலாம். முதல்நிலைத் தேர்வுக்குப் பின், முதன்மைத் தேர்வு
மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வின் மூலம், மத்திய
அரசு, 1,119 காலியிடங்களை நிரப்பவுள்ளது
Subscribe to:
Posts (Atom)