Saturday, May 23, 2015

ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட 24 பதவிக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பு

               மத்திய அரசின் உயர் பதவியான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 பதவிகளில், 1,119 காலியிடங்களை நிரப்புவதற்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு, ஆக., 23ம் தேதி நடக்கிறது; இதற்கு, இன்று முதல் ஆன் - லைனில் விண்ணப்பிக்கலாம்.


              மத்திய அரசின் உயர் பதவிகளான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., புதுச்சேரி போலீஸ் சர்வீஸ், இந்தியக் கணக்குகள் துறை அதிகாரி உள்ளிட்ட, 24 வகை பதவிகளுக்கு, சிவில் சர்வீசஸ் தேர்வை, மத்திய அரசு நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வின் அறிவிக்கை, இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. இந்த ஆண்டு, ஆக., 23ல் முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் வேலூர் ஆகிய ஊர்கள், தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இத்தேர்வுக்கு www.upsconline.nic.in என்ற இணையதளத்தில், ஆன் - லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, ஜூன் 19ம் தேதி, இரவு 11:59க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று, மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தேர்வின் முழு விவரங்களும், மே 23ம் தேதி எம்ப்ளாய்மென்ட் நியூஸ் பத்திரிகை, www.employmentnews.gov.in, மற்றும் http://www.upsc.gov.in/ இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். முதல்நிலைத் தேர்வுக்குப் பின், முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வின் மூலம், மத்திய அரசு, 1,119 காலியிடங்களை நிரப்பவுள்ளது

No comments:

Post a Comment