Thursday, December 8, 2022

ஊரகத் திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு - அரசுத் தேர்வுத் துறை அறிவிப்பு......




    நாளை மறுநாள் 10.12.22 சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான TRUST EXAM எனப்படும் கிராமப்புற   ஊரகத் திறனாய்வுத் தேர்வு புயல் மழை காரணமாக, அடுத்த வாரம் சனிக்கிழமை 17.12.22 அன்று நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.


அரசு பள்ளிகளுக்கு சுமார் 800 கோடி மதிப்பீட்டில் 6000 புதிய வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு.......

 


    ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் 800 கோடி மதிப்பீட்டில் 6000 புதிய வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது......

கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு நாளை 09.12.2022 விடுமுறை......

 

மாண்டஸ் புயல் மழை காரணமாக இதுவரை 15 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளை ( 09.12.2022 )  விடுமுறை 


* கள்ளக்குறிச்சி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

 

* புதுக்கோட்டை ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


அரியலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


தஞ்சாவூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


திருவாரூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


திருப்பத்தூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* விழுப்புரம்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* கடலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* சென்னை ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* காஞ்சிபுரம்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


வேலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


புதுச்சேரி, காரைக்கால் 2 நாட்களுக்கு  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

Wednesday, December 7, 2022

மாநில அளவிலான கலைத் திருவிழா - போட்டிகள் நடைபெறும் நாட்கள் அறிவிப்பு.......

 நிர்வாக காரணங்களுக்காக மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 27.12.2022 முதல் 30.12.2022 வரை நடைபெற உள்ளன.



இனி அனைத்து நலத்திட்டங்களும் EMISல் பதிவாகி உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு மட்டுமே - பள்ளிக் கல்வித்துறை........

 

அனைத்து வகை அரசு / அரசு உதவி / பகுதி நிதி உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கல்வி தகவல் மேலாண்மை மையத்திடமிருந்து ( EMIS ) பெறப்பட்டு இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.


 இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் 2023-2024 கல்வியாண்டிற்கு அனைத்து வகை நலத்திட்டங்களும் மாணாக்கர்களுக்கு வழங்க வேண்டியுள்ளதால் முதன்மை கல்வி அலுவலர்கள் இதன் மீது தனி கவனம் செலுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையினை சரிபார்த்து அதில் வேறுபாடு இருப்பின் அதனையும் EMIS - இல் 16.12.2022 - க்குள் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


இனி வருங்காலங்களில் முதன்மை கல்வி அலுவலரால் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே சார்ந்த நலத்திட்டங்களுக்கான தேவைப்பட்டியலாக ( Indent ) எடுத்துக்கொள்ளப்படும் எனவும் இதன் மூலம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை  தெரிவித்துள்ளது.

பகுதி நேரப் பயிற்றுநர்கள் (ஓவியம்) கலந்தாய்வு 13/12/2022க்கு ஒத்திவைப்பு.......

 

தற்காலிக பகுதி நேர பயிற்றுநர்களுக்கு ( ஓவியம் ) விருப்ப மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 06.12.2022 வரை நீட்டிக்கப்படுகிறது.


மேலும் , பணியிட மாறுதல் கலந்தாய்வு 13.12.2022 செவ்வாய் கிழமை அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைதூரக் கல்வியில் பயின்ற படிப்பும், கல்லூரி படிப்புக்கு இணையானது - UGC கடிதம்........

 தொலைதூரக்கல்வியில்  பயின்ற படிப்பும் கல்லூரி படிப்புக்கு இணையானதே UGC உத்தரவு நகல்.