Thursday, May 26, 2016

தோப்புக்கரணம் [ Super Brain Yoga ].....


நம் நாட்டில் விநாயகரை வழிபடும் போதும்....,
படிக்கும் வயதில் ஆசிரியர் தண்டனையாக செய்ய சொல்வதும் “தோப்புக்கரணம்”

தோப்புக்கரணத்தின் பயன்கள்.. மூளைசெல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன நாடிகள் சுத்தம் பெறுகின்றன.

நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள்.
தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன.
தினமும் 3 நிமிடம் தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும். தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும்.
தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.
உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.
காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது.
தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக்
கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.
பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். வலது கை
விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும். உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.
எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.
 இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் –  மூலாதாரத்தில் - சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த
சோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும். மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் இந்த மூன்று நிமிடங்களே பலரால் ஆரம்பத்தில்
செய்ய முடியாது என்பதே உண்மை
செய்முறை:
.
முதலில் கால்களுக்கு இடையில் ஒரு ஜான் அளவு இடவெளி விட்டு நிற்கவேண்டும்.
இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக்கொண்டு..
மூச்சை இழுத்துக்கொண்டே அமரவும் அமர்ந்த நிலையில் ஒரு மூச்சு விட்டு..
பிறகு எழ வேண்டும் இப்பொழுது நின்ற நிலையில் ஒருமூச்சு விட வேண்டும்.
இவ்வாறு பத்து முறை தினமும் செய்தால் மாற்றம் உங்களுக்கே தெரியும்..
இதனை நம் முன்னோர்கள் பல வருடங்களுக்கு முன்னமே நமக்கு காட்டியுள்ளார்கள் ஆனால் நாம் அதை அலட்சியப்படுத்திவிட்டோம்.
இதனை வெள்ளைக்காரன் ஆராய்ச்சி செய்து அவன் பணம் சம்பாரிக்கிறான்.......
சந்தேகமெனில் youtube- ல் super brain yoga என்று தேடிப்பாருங்கள் விடயம்
உங்களுக்கே புரியும

நன்றி...
http://sadhanandaswamigal.blogspot.in

Wednesday, May 25, 2016

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம்....

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு நாளை 26.05.2016 முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்ப வழங்கப்படுகிறது. இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்ககலாம்

         எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு நாளை முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது. இன்று நன்பகல் 12 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மருத்துவக்கல்வி இயக்குநர் விமலா செய்தியாளர்களிடம் கூறியதாவது, மருத்துவ படிப்புக்கு இன்று நன்பகல் 12 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நாளை முதல் ஜூன் 6 வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும்.
         சென்னையில் நான்கு இடங்களில் விண்ணப்ப விநியோகம் செய்யப்படுகிறது. ராஜிவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். ஜூன் 17-ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகின்றது. ஜூன் 20-ல் முதல்கட்ட கலந்தாய்வும், ஜூலை 18-ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வும் நடத்தப்படுகிறது. ரூ.500 செலுத்தி விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுத்தேர்வு தொடர்பாக மாணவர்கள் தேவையில்லாமல் அச்சம் கொள்ள வேண்டாம் என்று மருத்துவ கல்வி இயக்குநர் விமலா கூறியுள்ளார்.

10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் - ஓர் பார்வை

  • இன்று வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் கண்ட தகவல்கள் ஓர் பார்வை
  • தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ல் துவங்கி, ஏப்ரல் 13ல் முடிவடைந்தது. 
  • இந்ததேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரத்து 185 மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர். இவர்களை தவிர 48 ஆயிரத்து 564 பேர் தனித் தேர்வர்களாகவும் எழுதியுள்ளனர்.
  • தேர்வு முடிவுகள் இன்று காலை, 9:31 மணிக்கு வெளியாகின.
  • மொத்தத்தில்  93.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  • இது கடந்த ஆண்டைவிட அதிகமாகும். இந்த ஆண்டும், வழக்கம் போல் மாணவர்களைவிட மாணவியரே அதிகம்  தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • நாமக்கல் ராசிபுரம்  எஸ்.ஆர்.வி.எக்ஸல் பள்ளியை சேர்ந்த பிரேமசுதா, விருதுநகர் மாவட்டம் பெரியவள்ளிக்குளம் நோபல் பள்ளியை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் 500-க்கு 499 மதிப்பெண்களை பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர். 
  • இதேபோல், 498 மதிப்பெண்கள் பெற்று 50 பேர் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 497 மதிப்பெண்கள் பெற்று 224 பேர் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.  இந்த தேர்வில் 93.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • தற்காலிக சான்றிதழ்களை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், ஜூன், 1 முதல் மாணவர்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமும், பதிவிறக்கம் செய்த சான்றிதழ்கள் ஜூன், 1ல் கிடைக்கும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். 
  • அதேநேரத்தில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே, 28ம் தேதிக்குள் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
  • தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தையும், வேலூர் மாவட்டம் கடைசி இடத்தையும் பெற்றுள்ளது.
சதம் அடித்த மாணவர்கள்...
  • ஆங்கில பாடத்தில் 51 மாணவர்கள்.
  • தமிழ் பாடத்தில் 73 மாணவர்கள்.
  • கணிதம் பாடத்தில் 18,754 மாணவர்கள்.
  • அறிவியல் பாடத்தில் 18,642 மாணவர்கள்.
  • சமூக அறிவியல் பாடத்தில் 39,398 மாணவர்கள் சதம் அடித்துள்ளனர்.
தேர்ச்சி விகிதம்...
  • மாணவிகள் - 95.9 சதவீதம்
  • மாணவர்கள் - 91.3 சதவீதம்
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்...
  • 1. கன்னியாகுமரி-- 98.17    
  • 2. திருநெல்வேலி- 95.3
  • 3. தூத்துக்குடி-- 96.93
  • 4. ராமநாதபுரம் - 97.1
  • 5. சிவகங்கை - 96.66
  • 6. விருதுநகர் - 97.81
  • 7. தேனி - 96.57
  • 8. மதுரை - 95.68
  • 9. திண்டுக்கல் - 92.57
  • 10. ஊட்டி - 93.25
  • 11. திருப்பூர் - 95.62
  • 12. கோவை - 96.22
  • 13. ஈரோடு - 98.48
  • 14. சேலம் - 94.21
  • 15. நாமக்கல் - 96
  • 16. கிருஷ்ணகிரி - 95.05
  • 17. தர்மபுரி - 94.77
  • 18. புதுக்கோட்டை - 94.46
  • 19. கரூர் - 96.67
  • 2-0. அரியலூர் - 92.52
  • 21. பெரம்பலூர் - 96.52
  • 22. திருச்சி - 95.92
  • 23. நாகப்பட்டினம்- 89.43
  • 24. திருவாரூர் - 89.33
  • 25. தஞ்சாவூர் - 95.39
  • 26. பாண்டிசேரி - 92.42
  • 27. விழுப்புரம் - 88.07
  • 28. கூடலூர் - 89.13
  • 29. திருவண்ணாமலை- 89.03
  • 30. வேலூர் - 86.49
  • 31. காஞ்சீபுரம் - 92.77
  • 32. திருவள்ளூர் - 90.84
  • 33. சென்னை - 94.25

Tuesday, May 24, 2016

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ......

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை புதன்கிழமை (மே 25) காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

         இந்தப் பொதுத்தேர்வு மார்ச் 15 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம், புதுவையில் 10.72 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளன.
       தேர்வர்கள் தங்களது தேர்வு பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றை
www.tnresults.nic.in,  
www.dge1.tn.nic.in, 
www.dge2.tn.nic.in  
ஆகிய இணையதளங்களில் பதிவு செய்து முடிவுகளை பெறலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

        இதுதவிர, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய, கிளை நூலகங்களில் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறியலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தெரிந்துகொள்ளலாம்.

விலையில்லா,சீருடை,மற்றும் புத்தகங்கள் - இயக்குனர் உத்திரவு

விலையில்லா,சீருடை,மற்றும் புத்தகங்கள் 1முதல் 8 வகுப்பு வரை 25/5/16 முதல் 31/5/16 வரை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 1/6/16 அன்று அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்த இயக்குனர் உத்திரவு