- இன்று வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் கண்ட தகவல்கள் ஓர் பார்வை
- தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ல் துவங்கி, ஏப்ரல் 13ல் முடிவடைந்தது.
- இந்ததேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரத்து 185 மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர். இவர்களை தவிர 48 ஆயிரத்து 564 பேர் தனித் தேர்வர்களாகவும் எழுதியுள்ளனர்.
- தேர்வு முடிவுகள் இன்று காலை, 9:31 மணிக்கு வெளியாகின.
- மொத்தத்தில் 93.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
- இது கடந்த ஆண்டைவிட அதிகமாகும். இந்த ஆண்டும், வழக்கம் போல் மாணவர்களைவிட மாணவியரே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- நாமக்கல் ராசிபுரம் எஸ்.ஆர்.வி.எக்ஸல் பள்ளியை சேர்ந்த பிரேமசுதா, விருதுநகர் மாவட்டம் பெரியவள்ளிக்குளம் நோபல் பள்ளியை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் 500-க்கு 499 மதிப்பெண்களை பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
- இதேபோல், 498 மதிப்பெண்கள் பெற்று 50 பேர் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 497 மதிப்பெண்கள் பெற்று 224 பேர் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். இந்த தேர்வில் 93.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- தற்காலிக சான்றிதழ்களை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், ஜூன், 1 முதல் மாணவர்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமும், பதிவிறக்கம் செய்த சான்றிதழ்கள் ஜூன், 1ல் கிடைக்கும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
- அதேநேரத்தில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே, 28ம் தேதிக்குள் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தையும், வேலூர் மாவட்டம் கடைசி இடத்தையும் பெற்றுள்ளது.
- ஆங்கில பாடத்தில் 51 மாணவர்கள்.
- தமிழ் பாடத்தில் 73 மாணவர்கள்.
- கணிதம் பாடத்தில் 18,754 மாணவர்கள்.
- அறிவியல் பாடத்தில் 18,642 மாணவர்கள்.
- சமூக அறிவியல் பாடத்தில் 39,398 மாணவர்கள் சதம் அடித்துள்ளனர்.
- மாணவிகள் - 95.9 சதவீதம்
- மாணவர்கள் - 91.3 சதவீதம்
- 1. கன்னியாகுமரி-- 98.17
- 2. திருநெல்வேலி- 95.3
- 3. தூத்துக்குடி-- 96.93
- 4. ராமநாதபுரம் - 97.1
- 5. சிவகங்கை - 96.66
- 6. விருதுநகர் - 97.81
- 7. தேனி - 96.57
- 8. மதுரை - 95.68
- 9. திண்டுக்கல் - 92.57
- 10. ஊட்டி - 93.25
- 11. திருப்பூர் - 95.62
- 12. கோவை - 96.22
- 13. ஈரோடு - 98.48
- 14. சேலம் - 94.21
- 15. நாமக்கல் - 96
- 16. கிருஷ்ணகிரி - 95.05
- 17. தர்மபுரி - 94.77
- 18. புதுக்கோட்டை - 94.46
- 19. கரூர் - 96.67
- 2-0. அரியலூர் - 92.52
- 21. பெரம்பலூர் - 96.52
- 22. திருச்சி - 95.92
- 23. நாகப்பட்டினம்- 89.43
- 24. திருவாரூர் - 89.33
- 25. தஞ்சாவூர் - 95.39
- 26. பாண்டிசேரி - 92.42
- 27. விழுப்புரம் - 88.07
- 28. கூடலூர் - 89.13
- 29. திருவண்ணாமலை- 89.03
- 30. வேலூர் - 86.49
- 31. காஞ்சீபுரம் - 92.77
- 32. திருவள்ளூர் - 90.84
- 33. சென்னை - 94.25
No comments:
Post a Comment