பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை புதன்கிழமை (மே 25) காலை 9.31 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
இந்தப் பொதுத்தேர்வு மார்ச் 15 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது.
தமிழகம், புதுவையில் 10.72 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள்
புதன்கிழமை வெளியிடப்படவுள்ளன.
தேர்வர்கள் தங்களது தேர்வு பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றை
www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in
ஆகிய
இணையதளங்களில் பதிவு செய்து முடிவுகளை பெறலாம் என்று அரசுத் தேர்வுகள்
இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுதவிர, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேசிய தகவலியல்
மையங்கள், அனைத்து மைய, கிளை நூலகங்களில் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை
அறியலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும்
தெரிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment