Friday, August 29, 2014

உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி

அகஇ - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி" என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி 10.09.2014 முதல் 12.09.2014 வரை நடைபெறவுள்ளது.

            அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள்.  .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி"
என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி 10.09.2014 முதல் 12.09.2014 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியானது காலை 9.30மணி முதல் மாலை 4.30மணி வரை நடைபெறவுள்ளது.

30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய இரு நாட்களும் அனைத்து DEEO / AEEO அலுவலகங்களுக்கும் வேலை நாள்

      தொடக்கக் கல்வி - தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்ப உள்ளதால், 30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய இரு நாட்களும் அனைத்து DEEO / AEEO அலுவலகங்களும் அலுவல் நாட்களாக செயல்பட இயக்குநர் உத்தரவு

எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் - வலுவூட்டல் - ஒரு நாள் பயிற்சி

அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் - வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 அன்று நடைபெறவுள்ளது.

        அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள்.  .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல்
- வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியானது காலை 9.30மணி முதல் மாலை 4.30மணி வரை நடைபெறவுள்ளது.

Thursday, August 28, 2014

7 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கினார் முதல்வர்

7 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கினார் முதல்வர் தமிழக அரசு செய்திக் குறிப்பு. 

 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு.

முதுகலை ஆசிரியர்கள்

மாவட்டத்திற்குள் - 30.08.2014
வேறு மாவட்டம் - 31.08.2014

இடைநிலை ஆசிரியர்கள்

மாவட்டத்திற்குள் -01.09.2014
வேறு மாவட்டம் - 02.09.2014

பட்டதாரி ஆசிரியர்கள்

மாவட்டத்திற்குள் - 03.09.2014
வேறு மாவட்டம் - 04.05.09.2014

Wednesday, August 27, 2014

இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுப்பட்டியல் வெளியீடு


        தொடக்கக்கல்வித்துறையின்(DEE) 1675 இடைநிலை ஆசிரியர்களின் தேர்வானோர் பட்டியலை TRB தற்போது வெளியிட்டுள்ளது. மற்ற துறைகளுக்கான தேர்வு பாட்டியல் விரைவில் TRB வெளியிடும்.

COMMUNITY வாரியாக முதல் Weight age Mark.

BC-84.09
BCM-81.05
MBC/DNC-84.81
SC-80.05
SCA-77.42
ST-75.76

வட்டாரச் செயற்குழுக் கூட்டம்.


தமிழக ஆசிரியர் கூட்டணி
ஊத்தங்கரை வட்டாரக் கிளை
வட்டாரச் செயற்குழுக் கூட்டம்.
இன்று (26.08.2014) தமிழக ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் செயற்குழுக் கூட்டம் வட்டாரத் தலைவர் திரு கி. கோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக வட்டாரச் செயலாளர் திரு சே. லீலாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்டார். அவர் தமது சிறப்புரையில் வரும் 12.10.2014 அன்று நடைபெற உள்ள மாவட்ட சிறப்பு மாநாட்டில் இவ்வட்டாரத்தில் இருந்து அதிக அளவிலான ஆசிரியர்கள் கலந்துக்கொள்ள வேண்டுமெனவும், இவ்வட்டாரத்தில் ஒய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவை மிக சிறப்பாக நடத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இயக்கம் தொடர்பானவை
தீர்மானம் : 1.
    வரும் 12.10.2014 ல் நடைபெற உள்ள மாவட்ட சிறப்பு மாநாட்டில் ஊத்தங்கரை வட்டாரத்தில் இருந்து அதிக அளவிலான ஆசிரியர்கள் பங்கேற்று சிறப்பித்தல்.
தீர்மானம் : 2.
     ஊத்தங்கரை ஒன்றியத்தில் பணிநிறைவு பெற்ற 5 இயக்க ஆசிரியர்களுக்கு மிகச்சிறப்பான முறையில் பாராட்டு விழா நடத்துதல்.
தீர்மானம் : 3.
     இயக்க இதழான “ஆசிரியர் இயக்க குரல்” க்கு 50 ஆயுட் சந்தாக்களை திரட்டி அளித்திட முயற்சி மேற்கொள்ளல்.
தமிழக அரசுக்கானவை :
தீர்மானம் : 4.
     தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு  மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட உரிய ஆணை விரைந்து வழங்கிட வேண்டும்.
தீர்மானம் : 5.
     பங்கேற்பு ஓய்வூதியத் திட்ட்த்தை முற்றிலுமாக இரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்திட வழிவகை செய்ய வேண்டும்.
      இறுதியில் வட்டாரப் பொருளாளர் திரு பூ. இராம்குமார் நன்றி கூறினார். கூட்டத்தில் திருமதி ஈ. அகிலாண்டேஸ்வரி, திருமதி இரா. சாந்தா, திரு மொ. சிதம்பரம், திரு கி. நாகேஷ், திரு த. செல்வம் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.