Thursday, November 6, 2014

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் தொலைதூர கல்வியை பிற மாநிலங்களில் வழங்க தடை

            தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், பிற மாநிலங்களில் தொலைதூர கல்வியை வழங்க யுஜிசி தடைவிதித்துள்ளது. தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள பகுதிகளில் மட்டுமே இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் பாடங்களை தொலைதூர கல்வி திட்டத்தில், வீட்டில் இருந்து கொண்டோ அல்லது வேலை பார்த்து கொண்டோ படிக்கலாம். இந்த கல்வியை தமிழகத்தில் மாநில அரசின் கீழ் உள்ள 10 பல்கலைக்கழகங்களும், சில நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் சில பல்கலைக்கழகங்களினால் நடத்தப்படும் தொலைதூர கல்வி மையங்களில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, பல்கலைக்கழக மானிய குழு, பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், பல்கலைக்கழகங்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் மட்டுமே தொலைதூர கல்வியினை வழங்க வேண்டும்.
        பிற இடங்களில் தொலைதூர கல்வி மையங்களை தொடங்கக் கூடாது என்று கூறி ஒரு கடிதத்தை அனுப்பியது. இந்த கடிதம் தொடர்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் உயர்கல்விதுறை அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் முடிவில் யுஜிசிக்கு எழுதப்பட்ட கடிதத்தில், பல்கலைக்கழகத்திற்கு தொலைதூர கல்வியினால் கிடைத்து வரும் வருவாய் தடைபடும். பல்கலைக்கு வருமான இழப்பீடும் ஏற்படும். எனவே, இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். இதுகுறித்து, பல்கலைக்கழக மானியக்குழு துணை தலைவர் தேவராஜ் கூறியதாவது: தமிழகத்தில் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் தொலைதூர கல்வியை பல்கலைக்கழகங்கள் வழங்கலாம்.
             மாநிலத்தின் மற்ற பகுதியில் தொலைதூர கல்வி வழங்க தமிழக அரசின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழக பல்கலைக்கழகங்கள் வேறு மாநிலங்களில் தொலைதூர கல்வி வழங்க கூடாது. அதேபோல, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருக்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அந்தந்த மாநிலத்தில் மட்டுமே தொலைதூர கல்வியை வழங்க வேண்டும். அதேபோல, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அனுமதியில்லாமல் தொலைதூர கல்வியை ஆரம்பித்தால் அவை ரத்து செய்யப்படும். எங்கள் கடிதம் கிடைத்த பிறகு, வெளிமாநிலங்களில் தொலைதூர கல்விநிலையம் வைத்திருக்கும் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையில் ஈடுபட கூடாது. அவ்வாறு குறிப்பிட்ட தேதிக்கு பிறகு மாணவர்களை சேர்த்து அவர்களை படிக்க வைத்தால் அந்த மாணவர்கள் பெறும் பட்டம் தகுதியற்றதாக கருதப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை பல்கலை மையம்
       சென்னை பல்கலைக்கழகத் துக்கு தமிழகத்தில் 40 மையங்களும், வெளிமாநிலத்தில் 50 மையங்களும், வெளிநாட்டில் 4 மையமும் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 22 இளங்கலை படிப்புகள், 14 முதுகலை படிப்புகள், 9 முதுகலை அறிவியல் படிப்புகள், 16 டிப்ளமோ படிப்புகள், 12 சான்றிதழ் படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

புதிய பள்ளிகள் (தொடக்க / நடுநிலைப் பள்ளிகள்) துவங்க கருத்துருக்கள் அனுப்ப இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - 2015-16ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் புதிய பள்ளிகள் (தொடக்க / நடுநிலைப் பள்ளிகள்) துவங்க கருத்துருக்கள் அனுப்ப இயக்குனர் உத்தரவு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு அறிவிப்பு......

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு அறிவிக்கை (Notification) இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

     விண்ணப்பங்கள் வரும் 10.11.2014 முதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலத்தில் கிடைக்கும்.
      விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 26-11-2014.
தேர்வு நடைபெறும் நாள்: 10.1.2015
      ஒவ்வொரு பாடத்திற்கும் உள்ள காலி பணியிடங்கள் பற்றிய விவரம் வருமாறு :-
தமிழ் - 277
ஆங்கிலம் - 209
கணிதம் - 222
இயற்பியல் - 189
வேதியியல் - 189

தாவரவியல் - 95
விலங்கியல் - 89
பொருளியல் - 177
வணிகவியல் - 135
உடற்கல்வி இயக்குநர் - 27
வரலாறு - 198

Wednesday, November 5, 2014

ஓய்வூதியம் திருத்தி அமைப்பு

1988 - 1995 காலகட்டத்தில் ஓய்வு: 60 ஆயிரம் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் திருத்தி அமைப்பு
    1988-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதிக்கும், 1995 -ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற சுமார் 60,000 தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது.

     இந்த அரசாணையின்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட ஓய்வூதியர்களின் ஓய்வூதிய கருத்துருக்கள் இந்திய தணிக்கை, கணக்குத் துறை மாநில முதன்மை கணக்காயர் (கணக்கு, பணிவரவு) அலுவலகத்தில் பெறப்பட்டுள்ளன.
   இதில் தங்கள் கருத்துருக்களை திரும்பப் பெற்றவர்களும், இனி அனுப்பும் ஓய்வூதியதாரர்களும் தங்கள் துறை அலுவலர்கள் மூலம் ஓய்வூதிய கொடுப்பாணை எண், பணிப் பதிவேடு, திருத்திய ஓய்வூதிய விண்ணப்பத்துக்கான முகாந்திரம், அரசு ஆணை எண். 363-ன்படி திருத்திய ஓய்வூதியத்துக்கு பணிப் பதிவேடு கிடைக்கவில்லை எனில், 4-ஆவது ஊதியக் குழுவின் அடிப்படையில் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்ட அட்டவணை, ஓய்வூதியதாரரின் விருப்பப் படிவம், இருப்பிட முகவரி, தற்போது ஓய்வூதியம் பெறும் கருவூலத்தின் சார் கருவூலத்தின் பெயர் ஆகிய விவரங்களுடன் அனுப்ப வேண்டும்..
         மேலும் விவரங்களுக்கு "துணை மாநில கணக்காயர் (ஓய்வூதியம்), மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம், 361, அண்ணா சாலை, சென்னை - 18' என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

டிசம்பர் -5 மத்திய அரசு ஊழியர்கள் போராட்ட அறிவிப்பு

50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் சேர்க்க கோரி டிசம்பர் -5 ம் தேதி அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் போராட்ட அறிவிப்பு

To observe “NATIONAL PROTEST DAY” ON 5th  December, 2014 All Over India along with all Central Trade Unions in India
------ooo-----
New Delhi, Nagpur,Mumbai,Ranchi, Bangalore, Cochin; 24/10/2014;

Central Government Employees Confederation (CGEC); National Organisation of Central Government Employees (NOCGE) and INTUC have unanimously resolved to observe “ NATIONAL PROTEST DAY” on 5th  December, 2014 all over India along with all Central Trade Unions in India (Viz: INTUC, BMS, CITU, HMS, AITUC, TUCC, AIUTUC, AICCTU, UTUC,SEWA, LPF and all Federations of Banks, Railways (NFIR & AIRF), Defence (INDWF & AIDEF), Insurance, Central/State Govt. and other Service Establishments Employees).


Demands
========

1. Central Govt. should desist from its unilateral move to amend Labour Laws and consult and honour the views of Central Trade Unions.


2. Central Govt. should withdraw the retrograde move in allowing/hiking Foreign Direct Investment (F.D.I.) in Defence Sector, Railways, Insurance, PSUs and other Sectors.

3. Restore minimum wages of Rs.15,000/- to all the Unorganised/Contract Workers and Minimum Wages of Rs.26,000/- to the lower paid employees of Central Government.

4. Demands of Bank Officers and Bank Employees should be immediately accepted in respect of their Wage Revision and other privileges and social security measures, which are over due (Go through the Circulars dated 14/10/2014 & 16/10/2014 issued by the UFBU, AIBOBOA, INBOC, INBEC and INBEF etc.)

5. Strict implementation of existing Labour Laws concerning the Welfare of the Working Class all over India.

6.Benefits of Regular Workers should be given to all Contract Workers.
7. Compulsory Registration of Trade Unions within 45 days and all the ILO Conventions meant for the Workers should be ratified by the Govt. Of India.

8. 50% D.A. of Central Staff should be merged with Pay and Interim Relief should be paid to all employees, pending finalisation of the 7th Central Pay Commission.

9. Minimum 4 Promotions should be given to all Central Govt. Officials, without the hindrances of Departmental Examinations and DPC proceedings, on or before their respective date of retirements.2

10. MACP/ACP benefits should be extended to all Central Government Employees, including the staff of Autonomous Body/Semi-Govt. Departments.

11. Bonus eligibility and Bonus Ceiling should be raised as per the present Price Index Cost of Living and Updated Model of Pay Structure.

12. Present quantum of Pension should be raised with adequate Medical facilities/Medical Allowance and the New Pension Scheme should be liberalised as Worker-Friendly.

Accordingly, all the Unions, Associations and their Federations are requested to observe  “NATIONAL PROTEST DAY” on 5th  December, 2014 by way of Mass Demonstrations and Mass Protest Meetiungs & Rallies all over India and give wide publicity through Newspapers, T.V.

Channels and AIR/Doordarshan etc. Concerned Office-bearers are requested to send a report after observing the above programme of action to the undersigned on or before 15/12/2014.

Saturday, October 25, 2014

சென்னையில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம்

          தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் 28.10.2014 அன்று சென்னையில் நடைபெறுகிறது.

Friday, October 24, 2014

8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அவசியமா? மாநிலங்களின் கருத்தை கேட்கிறது மத்திய அரசு

          இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) படி, 'எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி' என்ற நிலையால், அந்தந்த வகுப்பிற்குரிய திறனை பெறாமல், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாணவர் வந்துவிடுவதால், பெரிய வகுப்புகளில், மாணவர் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
                இதனால், கட்டாய தேர்ச்சியின் அவசியம் குறித்து, மாநில அரசுகள், கருத்து தெரிவிக்குமாறு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுள்ளது.ஆர்.டி.இ., சட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை, கட்டாயம் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது. இதை அப்படியே வேத வாக்காக எடுத்துக் கொண்டு, அனைத்து மாணவர்களையும், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு, 'புரமோட்' செய்து விடுகின்றனர். குறிப்பாக, அரசு பள்ளி ஆசிரியர்கள், இப்படி செய்கின்றனர். ஆனால், தனியார் பள்ளிகள், சரியாக படிக்காத மாணவருக்கு, சிறப்பு பயிற்சி அளித்து, தனியாக சிறப்புத் தேர்வை நடத்தி, அதில் தேறினால், அடுத்த வகுப்பிற்கு, 'புரமோட்' செய்கிறது.
சாதக, பாதகங்கள்:
       கட்டாய தேர்ச்சியினால், ஒவ்வொரு வகுப்பிற்குரிய திறனை, மாணவர்கள் பெறாமலேயே, ஒன்பதாம் வகுப்பிற்கு வந்துவிடும் நிலை உள்ளது. அதற்கு அடுத்த ஆண்டில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் நிலைக்கு, மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்.பிரச்னையின் அபாயத்தை உணர்ந்துள்ள மத்திய அமைச்சகமும், கட்டாய தேர்ச்சியினால் ஏற்பட்டுள்ள சாதக, பாதக அம்சங்களை ஆராய துவங்கி உள்ளது.இது தொடர்பாக, மாநில அரசுகள், கருத்து தெரிவிக்குமாறு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுள்ளதாகவும், 'கட்டாய தேர்ச்சி தேவையில்லை' என, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் வலியுறுத்தி உள்ளதாகவும், கல்வித் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.தமிழக அரசு தரப்பில், இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.
மறந்து விடுகின்றனர்:
       இந்த விவகாரம் குறித்து, கல்வியாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பதை, ஆசிரியர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். மாணவர்கள், ஒவ்வொரு வகுப்பிற்குரிய கற்றல் அறிவை, முழுமையாக பெற வேண்டும், அதற்கேற்ப கற்பிக்க வேண்டும் என்பதை, ஆசிரியர்கள் மறந்து விடுகின்றனர்.சட்டத்தை, ஆசிரியர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, கற்பித்தலில் மெத்தனம் காட்டு கின்றனர். சட்டத்தில் உள்ள எந்த பிரிவையும் நீக்க வேண்டிய அவசியமே இல்லை.ஒவ்வொரு வகுப்பிற்கும், பாட வாரியாக ஆசிரியர்கள் இருந்தால், அவர், சரியான முறையில் கற்பித்தல் பணியை செய்தால், அனைத்து மாணவர்களும், கண்டிப்பாக, அந்தந்த வகுப்பிற்குரிய அறிவை பெறுவர். மாணவர் - ஆசிரியர் விகிதாசார கணக்கீடு, இங்கே தவறாக கணக்கிடப்படுகிறது.ஒரு பள்ளியில், 60 மாணவர் இருந்தால், இரண்டு ஆசிரியர்கள் போதும் என, அரசு கருதுகிறது. ஆனால், 60 பேரும், பல வகுப்புகளில், பிரிந்து இருப்பர்.அப்போது, வகுப்பு வாரியாக, பாட வாரியாக, தனித்தனி ஆசிரியர்கள் இருந்தால் தான், கற்பித்தல் பணி சிறப்பாக இருக்கும். இதுபோன்ற நிலை, பல அரசு பள்ளிகளில் இல்லாதது தான் பிரச்னை.இவ்வாறு, பிரின்ஸ் கூறினார்.