Wednesday, September 28, 2022

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்.....


IMG_20220928_153839


        மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    பணவீக்கம், விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். இதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், ஜூலை - டிசம்பர் காலத்துக்கான அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். பண்டிகைக்காலம் நெருங்கிவிட்ட நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருந்தனர்.

    இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதன்படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 38% ஆக உயர்ந்துள்ளது. இதனால் சுமார் 50 லட்சத்துக்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 60 லட்சத்துக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்

Tuesday, September 27, 2022

SMC & கிராம சபா கூட்டத்தில் பங்கேற்கும் முதன்மைக் கருத்தாளர்களுக்கான பங்கும் , பொறுப்பும் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனரின் செயல் முறைகள்........


   30.09.2022 அன்று நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்திலும் அதனைத்தொடர்ந்து 02.10.2022  கிராம சபா கூட்டத்திலும் பங்கேற்கும் முதன்மைக் கருத்தாளர்களுக்கான பங்கும் பொறுப்பும் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனரின் செயல் முறைகள்.


ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த முழு விபரம் .......

 


    தமிழ்நாட்டில் பி.எட் முடித்தவர்கள் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அதன்படி 2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விரும்புவோர் கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி உடன் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து சிலர் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனைத்தொடர்ந்து ஏப்ரல் 26ம் தேதி வரை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வில், முதல் தாளுக்கு 2,30,878 பேர் மற்றும் இரண்டாம் தாளுக்கு 4,01,886 பேர் என 6,32,764 என மொத்தம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளை ஆகஸ்ட் 25 தேதி முதல் 31ம் தேதி வரை நடத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டிருந்தது. பின்பு தேதி மாற்றியது.

    இந்நிலையில் தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்குரிய தேர்வு தேதி குறித்த அறிவிப்பை TRB வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, TRB தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்குரிய தேர்வானது அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் நடப்பு ஆண்டு முதல் இத்தேர்வை கணினி வழியில் நடத்த உள்ளதாக தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. அனைத்து தேர்வர்களும் கணினி வழித்தேர்வை (Computer Based Examination) பயிற்சி தேர்வுகளாக மேற்கொள்ள தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இதனை அனைத்து தேர்வர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு , கலந்தாய்வு - அறிவிப்பு

    IMG-20220927-WA0016

    IMG-20220927-WA0017 

 12.09.2022 நாளிட்ட இயக்குநரின் செயல்முறைகளில் 31.12.2008 க்கு முன்னர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியில் சேர்ந்து பணிபுரியும் 357 நபர்களை கொண்ட இறுதி தகுதிவாய்ந்தோர் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டது. வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வு தொடக்கக் கல்வி இயக்ககத்தில் EMIS இணையதளம் வாயிலாக கீழ் குறித்தவாறு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


1)  1.1.2022 முன்னுரிமைப் பட்டியலில்  1 முதல் 250 வரை உள்ள நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு  29.09.2022 அன்றும்

2) 251 to 356 வரை நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 30.9.2022 அன்றும் Emis மூலம் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது.



மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.......

 


    மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - செய்திக்குறிப்பு

    காலாண்டுத் தேர்வு முடிவுற்று அளிக்கப்படவேண்டிய விடுமுறை குறித்து கீழ்கண்டவாறு அறிவுரைகள் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது. 30.09.2022 அன்று காலாண்டுத் தேர்வு முடிந்தவுடன் 01.10.2022 முதல் 05.10.2022 வரை முதல் பருவ விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    எண்ணும் எழுத்தும் முதற்கட்ட பயிற்சி தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் அளிக்கப்பட்டதால், அதற்கு பதிலாக ஈடுசெய்யும் விடுப்பு அளிக்குமாறு தொடந்து ஆசிரியர் சங்கங்களும், ஆசிரியர்களும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் 06/10/2022, 07/10/2022 மற்றும் 08/10/2022 ஆகிய மூன்று நாட்களும் ஈடுசெய்யும் விடுப்பாக கருதப்படும். (மீதமுள்ள 2 நாட்கள் பின்பு ஈடுசெய்யப்படும்.)

    பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். தொடக்கப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10, 11, 12 தேதிகளில் எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்ட பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி நிறுவன இயக்குநரின் கடிதத்தில் (ந.எண்.2411/ஈ2/2021 நாள்.26.09.2022) தெரிவித்துள்ளவாறு நடத்த இருப்பதால், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் 13ம் தேதி பள்ளிகள் திறக்கும் என அறிவுறுத்தப்படுகின்றது.

Friday, September 23, 2022

வட்டாரக் கல்வி அலுவலர்கள் பணியிடங்கள்-- தேவையுள்ள ஒன்றியங்களுக்கு மாறுதல் செய்ய உத்தரவு.........

 வட்டாரக் கல்வி அலுவலர்கள் பணியிடங்கள்-- தேவையுள்ள ஒன்றியங்களுக்கு மாறுதல் செய்தல் சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்....... 

Wednesday, September 21, 2022

பள்ளிகளில் கலைத் திருவிழா பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை வெளியீடு......

 IMG_20220921_192850

பள்ளிகளில் கலைத் திருவிழா பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டு நெறிமுறைகள்......

 Proceedings for Art and Culture activites 2022-23 - .pdf