மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தமிழக இடைநிலை
ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும், தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்திட
வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்
கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பிலான கிருஷ்ணகிரி மாவட்ட கோரிக்கை பேரணி இன்று
(02.02.2014) நடைபெற்றது.
கிருஷ்ணகிரி ஆர்.சி. பாத்திமா பள்ளி அருகில்
இருந்து துவங்கிய பேரணியில் 1356 பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட 2572 ஆசிரியர்கள்
பங்கேற்றனர். சுமார் 3 கி.மீ தூரம் நடைபெற்ற பேரணி, இறுதியில் கார்னேசன் திடலில் நிறைவடைந்தது.
பேரணிக்கு திரு மா. கிருட்டிணமூர்த்தி தலைமை
தாங்கினார், திரு இலா. தியோடர் ராபின்சன் பேரணியைத் துவக்கி வைத்தார், திரு வ.மி. ஹபிபுர்
ரஹ்மான் நன்றி கூறினார்.
பேரணியில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள்
எழுப்பியபடி அனைத்து ஆசிரியர்களும் கலந்துக்கொண்டனர். மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில்
இருந்தும் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இறுதியில் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக
உதவியாளர் (பொது) திரு டி. வெங்கடேசன் அவர்களிடம் அனைத்து சங்கப் பொருப்பாளர்களால்
கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்ட்து.
No comments:
Post a Comment