![](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/t1/1013787_650002988391719_355060694_n.jpg)
டிட்டோஜாக் தலைவர்கள் இன்று காலை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை நடத்தினர்.
பள்ளிக்கல்வித்துறை
சார்ந்த பிரச்சனைகள் எனில் உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதாகவும்,
நிதிச்சார்ந்த தீர்வுகள் உடனடியாக தீர்க்க இயலாது எனவும் அரசுத் தரப்பில்
தெரிவிக்கப்பட்டது. மூன்று நபர் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட
டிட்டோஜாக் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை நிதித்துறை செயலாளருடன்
பேசி வெளியிட ஆவணச் செய்வதாக பள்ளிக் கல்வித் துறைச் செயலர்
தெரிவித்தார்.
எனவே இதையடுத்து டிட்டோஜாக் தலைவர்கள் கூடி விவாதிக்கின்றனர். அடுத்தக்கட்ட முடிவு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
![](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-frc1/t1/1900125_650002915058393_1625453732_n.jpg)
No comments:
Post a Comment