இன்று மாலை நடைபெற்ற டிட்டோஜேக் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு ஆசிரியர்களின்
கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு
இன்று (20.02.2014) மாலை நடைபெற்ற டிட்டோஜேக் உயர்மட்டக் குழு கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது.
* 24.02.2014 அன்று மாலை 5மணிக்கு மாவட்ட அளவில் வேலை நிறுத்த ஆயுத்தக் கூட்டம் நடைபெறும். இதில் டிட்டோஜேக் இணைப்பு சங்கங்களின் மாவட்ட/ வட்ட நிரவாகிகள் பங்கேற்பு
* 25.02.2014 அன்று முதல் 28.02.2014 அன்று முடிய பிரச்சாரம் மற்றும் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடைபெறும்.
* 02.03.2014 அன்று மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெறும்.
* 03.02.2014 அன்று டிட்டோஜேக் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சென்னையில் சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது.
மேலும் நாளை காலை பள்ளிக்கல்வி செயலாளருடன் சந்திப்பு நடைபெற உள்ளதெனவும் தெரிவித்தார். டிட்டோஜேக்கில் உள்ள சங்கங்கள் அனைத்தும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது என்ற கருத்தில் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது..
அண்மையில் நடந்த மாபெரும் பேரணியால் தான் இன்று அரசு தரப்பில் பேச அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகள் நிறைவேற்றினால் மட்டுமே வேலை நிறுத்தம் விலக்கிக்கொள்ளப்படும் என்றும் அதுவரை போராட்டங்கள் ஓயாது என நாளை நடைபெறும் செயலாளருடன் சந்திப்பின் போது வலியுறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment