தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்-அமைச்சர் ஆணையின்படி, ஊரக
தொழில்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சரால் 11.7.2014 அன்று நடைபெற்ற
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் மானியக்கோரிக்கை மீதான
விவாதத்தின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை தொடர்ந்து 2011, 2012 மற்றும்
2013 ஆகிய
ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க
தவறிய பதிவுதாரர்கள் பணி வாய்ப்பை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை
புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக மூன்று மாதங்களுக்கு அதாவது 7.3.2015-க்குள்
tnvelaivaaippu.gov.in ஆன்-லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment