அனைத்து அலுவல்களுக்கும் மாதிரி படிவங்கள்
மற்றும் அலுவலக குறிப்புகள் வழங்கி கடைபிடிக்க உத்திரவு
தொடக்கக் கல்வித் துறையில் உள்ள இலட்சக் கணக்காண ஆசிரியர்கள் சார்ந்த விடுப்பு,
உயர்கல்வி முன் அனுமதி,
மருத்துவவிடுப்பு, ஈட்டியவிடுப்பு, அரைச்சம்பள விடுப்பு, வைப்புநிதி
முன்பணம் கோரல், பகுதி இறுதிப் பணம் கோரல், சேமநல நிதி கணக்கீடு, ஊக்க ஊதியம்
அனுமதித்தல், பதவி உயர்வுக்குண்டான ஊதிய நிர்ணயம், பண்டிகை முன்பணம், மருத்துவ
விடுப்பு அனுமதித்தல், ஆண்டு ஊதிய உயர்வு அனுமதித்தல், போன்ற நடைமுறைகள்
அந்தந்த உதவித் தொடக்கக்கல்வி அலுவலகப் பணியாளர்களால் அவர்கள் ஏற்கனவே
கையாண்ட நடைமுறைகளின்படி அலுவலக குறிப்புகளும், ஆணைகளும் வழங்கப்பட்டு வந்தன
ஆனால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களிலும்
ஒரே மாதிரியான வழி முறையிணை பின்பற்ற தொடக்கக் கல்வித் துறை இயக்குனரகம் மூலம்
”மாதிரிப்படிவங்கள், அலுவலக நடைமுறைக் கடிதம், அலுவலக செயல்முறை ஆணைகள்
மற்றும், பணிப் பதிவேட்டில் பதிய மாதிரி சீல்கள்” ஆகியன நிர்வாகப் பயிற்சியின்
போது வழங்கப்பட்டுள்ளது. .அதனை கடைபிடிக்க கோரப்பட்டு அனைத்து
உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கும் உரிய மாவட்டக் கல்வி அதிகாரிகள் வாயிலாக
அனுப்பப்படுள்ளதாக அறியப்படுகிறது.
No comments:
Post a Comment