Saturday, January 4, 2014

அரசு பள்ளிகளில் 100 % மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த வேண்டும் பள்ளி கல்வி முதன்மை செயலாளர் அறிவுறுத்தல

                                             அரசு பள்ளிகளில் 100 % மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த வேண்டும் பள்ளி கல்வி முதன்மை செயலாளர் அறிவுறுத்தல்

வரும்கல்வியாண்டில்அரசு பள்ளிகளில் நூறு சதவீத மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த வேண்டும் என்று ஐந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்விதுறை அரசு முதன்மை செயலாளர் சபிதா அறிவுறுத்தியுள்ளார்.  
 பள்ளி கல்வித்துறையின் மீளாய்வு கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. இதில், கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், திண்டுகல் மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் கடந்த ஆண்டு பொது தேர்வில் 70 சதவீதத்திற்கு குறைவான தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வி முதன்மை செயலர் சபிதா தலைமை தாங்கினார்.பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வரவேற்புரையாற்றினார், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி முன்னிலைவகித்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு கடந்த ஆண்டு பொது தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கினார். 
இக்கூட்டத்தில் பள்ளி கல்விதுறை அரசு முதன்மை செயலாளர் பேசியதாவது: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் மிகவும் குறைந்துள்ளது. பிரைமரி பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் முன்வருவது இல்லை. வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, இந்த மாதம் முதலே மாணவர்கள் கணக்கெடுப்பை தொடங்க வேண்டும். 
உச்சநீதிமன்றம் மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை நடைமுறைபடுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுகல்லில் 12 பள்ளிகளின் பாத்ரூம் கதவு இல்லை, 15 பள்ளிகளில் உள்ள பாத்ரூம்களில் பீங்கான் வசதியில்லை, 347 பள்ளிகளில் குடிநீர் வசதியில்லாமல் உள்ளது. கோவையில் 40 பள்ளிகளில் பாத்ரூம் கதவு இல்லை, 100 பள்ளிகளில் உள்ள பாத்ரூம்களில் பீங்கான் வசதியில்லை, 120 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. திருப்பூர், நீலகிரி மாவட்டத்திலும் இதே நிலைதான் உள்ளது. கரூர் மாவட்டத்தில் மட்டுமே அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. எனவே, மற்ற நான்கு மாவட்டங்களிலும் கழிப்பிட வசதி பிரச்னையை விரைவில் முடிக்க வேண்டும்.     தனியார் பள்ளிகளில் 20 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கு அரசு வழங்க வேண்டிய தொகையை குறித்து மத்திய அரசிற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளோம். மத்திய அரசு இரண்டு முறைகளில் தொகையை பள்ளிகளுக்கு வழங்க உள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிரைமரி மற்றும் நர்சரி பள்ளிகளில் அங்கீகாரம் பெறாத பள்ளிகளாக கோவையில் 25 பள்ளிகள், கரூரில் 7 பள்ளிகள், நீலகிரியில் 18 பள்ளிகள் என 5 மாவட்டங்களையும் சேர்த்து 70 பள்ளிகள் வரும் ஏப்ரல் மாத இறுதியில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் சேர்க்கை நடக்காது. அரசு பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் 70 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி பெற்ற பள்ளிகள். 
வரும்கல்வியாண்டில் 95 சதவீத தேர்ச்சியை அடைய வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தலைமை ஆசிரியர்கள் பொது தேர்வில் இலக்கை அடைய முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேலும் பள்ளிகல்வி துறைகள் குறித்த பல்வேறு பிரச்னைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி  செய்து இருந்தார்.

           வரும்கல்வியாண்டில்அரசு பள்ளிகளில் நூறு சதவீத மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த வேண்டும் என்று ஐந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்விதுறை அரசு முதன்மை செயலாளர் சபிதா அறிவுறுத்தியுள்ளார்.
          பள்ளி கல்வித்துறையின் மீளாய்வு கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. இதில், கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், திண்டுகல் மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் கடந்த ஆண்டு பொது தேர்வில் 70 சதவீதத்திற்கு குறைவான தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வி முதன்மை செயலர் சபிதா தலைமை தாங்கினார்.பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வரவேற்புரையாற்றினார், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி முன்னிலைவகித்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு கடந்த ஆண்டு பொது தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கினார்.
                 இக்கூட்டத்தில் பள்ளி கல்விதுறை அரசு முதன்மை செயலாளர் பேசியதாவது: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் மிகவும் குறைந்துள்ளது. பிரைமரி பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் முன்வருவது இல்லை. வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, இந்த மாதம் முதலே மாணவர்கள் கணக்கெடுப்பை தொடங்க வேண்டும்.
              உச்சநீதிமன்றம் மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை நடைமுறைபடுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுகல்லில் 12 பள்ளிகளின் பாத்ரூம் கதவு இல்லை, 15 பள்ளிகளில் உள்ள பாத்ரூம்களில் பீங்கான் வசதியில்லை, 347 பள்ளிகளில் குடிநீர் வசதியில்லாமல் உள்ளது. கோவையில் 40 பள்ளிகளில் பாத்ரூம் கதவு இல்லை, 100 பள்ளிகளில் உள்ள பாத்ரூம்களில் பீங்கான் வசதியில்லை, 120 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. திருப்பூர், நீலகிரி மாவட்டத்திலும் இதே நிலைதான் உள்ளது. கரூர் மாவட்டத்தில் மட்டுமே அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. எனவே, மற்ற நான்கு மாவட்டங்களிலும் கழிப்பிட வசதி பிரச்னையை விரைவில் முடிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் 20 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கு அரசு வழங்க வேண்டிய தொகையை குறித்து மத்திய அரசிற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளோம். மத்திய அரசு இரண்டு முறைகளில் தொகையை பள்ளிகளுக்கு வழங்க உள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிரைமரி மற்றும் நர்சரி பள்ளிகளில் அங்கீகாரம் பெறாத பள்ளிகளாக கோவையில் 25 பள்ளிகள், கரூரில் 7 பள்ளிகள், நீலகிரியில் 18 பள்ளிகள் என 5 மாவட்டங்களையும் சேர்த்து 70 பள்ளிகள் வரும் ஏப்ரல் மாத இறுதியில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் சேர்க்கை நடக்காது. அரசு பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் 70 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி பெற்ற பள்ளிகள்.   வரும்கல்வியாண்டில் 95 சதவீத தேர்ச்சியை அடைய வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தலைமை ஆசிரியர்கள் பொது தேர்வில் இலக்கை அடைய முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேலும் பள்ளிகல்வி துறைகள் குறித்த பல்வேறு பிரச்னைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி செய்து இருந்தார்.

Friday, January 3, 2014

எட்டாம் வகுப்பு - தேசிய திறனறித் தேர்வு விண்ணப்பம் மற்றும் மாதிரி வினாத்தாள்.

                          எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) வரும் 22.02.2014 அன்று நடைபெற உள்ளது. அது தொடர்பான முக்கிய தகவல்களைப் பெற கீழ்க்கண்ட தொடுப்புகளைச் சொடுக்குக.......
 
விண்ணப்பம் :
http://tndge.in/docs/NMMS-2014.pdf

மாதிரி வினாத்தாள் :
http://tndge.in/docs/NMMS_MODALQUESTIONPAPER.pdf


 

Saturday, December 28, 2013

தேசிய வருவாய்வழி திறன் தேர்வு: (NMMS) வட்டார அளவில் தேர்வு மையம்


              தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு  உதவித்தொகை திட்டத்தில் நடக்க உள்ள தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

        மத்திய அரசு, ஆண்டுதோறும், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, தேசிய அளவில் போட்டி தேர்வை நடத்தி, அதில் தேர்வு பெறும் மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 2 வரை, நான்கு ஆண்டுகளுக்கு கல்வி உதவிதொகை வழங்குகிறது. குடும்ப ஆண்டு வருமானம், 1.5 லட்ச ரூபாய்க்குள் உள்ள எட்டாம் வகுப்பு மாணவர்கள் எழுதலாம்.

            இதில் தேர்ச்சி அடைய, எஸ்.சி.,- எஸ்.டி., மாணவர்கள், 50 சதவீதம்; பிற மாணவர்கள், 55 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மாதம் 500 ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில், பிப்., 22 ல், திறன் தேர்வு நடக்க உள்ளது. இதற்கு, வரும், 28 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

          கடந்த ஆண்டு வரை, மாவட்டத்திற்கு இரண்டு மையங்களே அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேர்வில் அதிக அளவில் மாணவர்களை பங்கேற்க வைக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

500 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்த திட்டம்




        சென்னை : தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் நடுநிலைப் பள்ளிகளில் 500 பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்த மத்திய இடைநிலைக் கல்வி திட்ட இயக்ககம் முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.1300 கோடி நிதியை மத்திய அரசிடம் கேட்டுப்பெற உள்ளது.தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டு முதல் மத்திய இடைநிலை கல்வி திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கம். இதை செயல்படுத்தும் நோக்கமாக 8ம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் நடுநிலை பள்ளிகளையும் தரம் உயர்த்தி 9ம் வகுப்பில் தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

             முதற்கட்டமாக கடந்த 2009-2010ம் ஆண்டில் 200 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. 2010-2011ம் ஆண்டு 344 நடுநிலைப்பள்ளிகளும், 2011-2012ம் ஆண்டில் 710 நடுநிலை பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 9ம வகுப்பில் மட்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு சம்பளம் வழங்குவது, வகுப்பறைகள் கட்டுவது உள்ளிட்ட வசதிகளை செய்ய கடந்த ஆண்டு மத்திய அரசு ரூ.510 கோடி நிதி வழங்கியது.

          இந்நிலையில், தற்போது தமிழகத்தில் இயங்கி வரும் சுமார் 8 ஆயிரம் நடுநிலைப் பள்ளிகளில் 500 பள்ளிகளை தரம் உயர்த்த உள்ளதாக ஆர்எம்எஸ்ஏ இயக்ககம் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. மேலும், தரம் உயர்த்தப்பட உள்ள பள்ளிகள் குறித்த விவரங்கள் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய ரூ.1300 கோடி நிதி தேவைப் படும் என்று கணக்கிட்டுள்ளது. இதுதொடர்பாக, வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி டெல்லியில் நடக்க உள்ள திட்ட மதிப்பீட்டுக் குழுவில் தமிழக அனைவருக்கும் கல்வி இயக்கம், ஆர்எம்எஸ்ஏ திட்ட இயக்ககம் சார்பில் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு தமிழகத்துக்கான நிதி தேவை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

நன்றி : தினகரன்

புதிய ஆசிரியர் நியமனம் - பணி நிரவலுக்கு பிறகே ..........

       தற்போது பள்ளிகளில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே  புதிய ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பணிநிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

              கடந்த ஆக.,17, 18 தேதிகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், 27ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். "தேர்ச்சி பெற்றவர்கள், மதிப்பெண் அடிப்படையில், பள்ளிகளில் காலியாக உள்ள 15 ஆயிரம் பணியிடங்களில் நிரப்பப்படுவர்" என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் (ஆசிரியர் இல்லாத இடங்களில் கூடுதல் காரணமாக எடுக்கப்பட்ட  ஆசிரியர்களை நியமித்தல்) செய்த பிறகு, புதிய ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

           கடந்த ஆக.,1 மாணவர்களின் வருகைப்பதிவேடு படி, ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கும் பணி நடந்து வருகிறது. விதிமுறைப்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் 160 மாணவர்களுக்கு, ஐந்து ஆசிரியர்களும் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் குறைவான மாணவர்களே வருகின்றனர்.

இதையடுத்து, உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர்; பணிநிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளது. இதனால், தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணியிடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Thursday, December 26, 2013

இன்றைய டிடோஜாக் கூட்டத்தின் முக்கிய முடிவுகள்

             இன்று (26.12.2014) சென்னை திருவல்லிக்கேணி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், பேராசிரியர் நரசிங்கம் நிலையத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.வின்சென்ட் பால்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து சங்கங்களும் பங்கு பெற்றன. பேரணியை ஏற்கெனவே தாங்கள் நடத்திவிட்டோம் எனவும், மீண்டும் பங்கு கொள்ளமாட்டோம் என தொடக்கப்பள்ளி ஆசிரியர்  கூட்டணி பாதியிலேயே வெளியேறியது. பின்பு மற்ற 5 சங்கங்கள் கூடி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.  
       வருகிற 30.12.2013 அன்று தமிழக அரசுடன்  சந்தித்து கோரிக்கை வைக்கப்பட உள்ளது. அதையடுத்து 10.01.2014ல் மாவட்ட அளவில் டிடோஜாக் கூட்டம் நடத்தவும், 11.01.2014 அன்று டிடோஜாக் சார்பில் செய்தியாளர்களுடன் சந்திப்பு (PRESS MEET)ம், 02.02.2014 அன்று மாவட்ட தோறும் பேரணி நடத்தி மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை மீண்டும் சந்தித்து பேரணியில் பங்க்பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Wednesday, December 25, 2013

பள்ளிகளுக்கு இடையே வகுப்பறை கல்வி இணைப்புத் திட்டம் செயலாக்கம் - எமது பள்ளி தேர்வு.



பள்ளிக் கல்வித் துறை சார்பில், அரசு பள்ளிகளுக்கு இடையே வகுப்பறைக் கல்வி இணைப்புத் திட்டம் (Collaborative Learning through Connecting Class Room across Tamil Nadu)  செயல்படுத்தப்பட உள்ளது.


மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்னோடிப் பள்ளிகளில் நடைபெறும் வகுப்பறைக் கல்வியை மற்ற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையிலும், சிறப்புப் பயிற்சி பெறுவதற்கும், பள்ளி கல்வித் துறை சார்பில் பள்ளிகளுக்கு இடையே வகுப்பறைக் கல்வி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வோர் மாவட்டத்திலும் முன்னோடி பள்ளிகளைத் தேர்வு செய்து, அவற்றுக்கு அகன்றகற்றை இணைய இணைப்பு மற்றும் வெப் கேமரா வழங்கப்படுகிறது.

முன்னோடி பள்ளிகளில் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை வெப் கேமரா மூலம் கணினியில் பதிவு செய்து, மற்ற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் காணும் வகையில் ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்படுள்ளது. வகுப்பறை இணைப்புத் திட்டத்துக்கு, மாவட்டத்தில் 4 அரசு நடுநிலைப் பள்ளிகள், 4 அரசு உயர் நிலைப் பள்ளிகள்  முன்னோடி பள்ளிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட முன்னோடி பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் கணினி இயக்குபவர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை சார்பில், வகுப்பறைக் கல்வி இணைப்புத் திட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பட்டியலில் எமது பள்ளியான ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் பள்ளியும் தேர்வு செய்யப்பெற்றுள்ளது குறித்து மிக்க மகிழ்வெய்துகிறேன். அதற்கான பயிற்சிப்பட்டறை வரும் 30.12.2013 அன்று கோவை செல்கிறேன்.