இன்று (26.12.2014) சென்னை திருவல்லிக்கேணி
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், பேராசிரியர் நரசிங்கம் நிலையத்தில்
தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.வின்சென்ட் பால்ராஜ்
அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து சங்கங்களும் பங்கு
பெற்றன. பேரணியை ஏற்கெனவே தாங்கள் நடத்திவிட்டோம் எனவும், மீண்டும் பங்கு
கொள்ளமாட்டோம் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பாதியிலேயே வெளியேறியது.
பின்பு மற்ற 5 சங்கங்கள் கூடி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
வருகிற 30.12.2013 அன்று தமிழக அரசுடன்
சந்தித்து கோரிக்கை வைக்கப்பட உள்ளது. அதையடுத்து 10.01.2014ல் மாவட்ட
அளவில் டிடோஜாக் கூட்டம் நடத்தவும், 11.01.2014 அன்று டிடோஜாக் சார்பில்
செய்தியாளர்களுடன் சந்திப்பு (PRESS MEET)ம், 02.02.2014 அன்று மாவட்ட
தோறும் பேரணி நடத்தி மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை
மீண்டும் சந்தித்து பேரணியில் பங்க்பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என
முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment