தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலச்
செயற்குழுக் கூட்டம் நேற்று (15.12.2014) . திருச்சி அருண் விடுதியில் காலை
10 மணி முதல் மாலை 4.30 வரையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் திரு அ. வின்செண்ட் பால்ராஜ் அவர்கள்
நகல் தீர்மானங்களை முன் மொழிந்தார். அதில் அவர் மாநில அளவில் உள்ள ஆசிரியர்களுக்கான பல்வேறு பிரச்சனைகள் பற்றியும் அவற்றைக் களைந்திட அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் தீர்மானங்கள், மற்றும் இயக்கச் செயல்பாடுகள் குறித்த தீர்மானங்கள் இடம்பெற்றிருந்தன. பின்னர் அனைத்து மாவட்டச் செயலர்களும்
அத்தீர்மானங்கள் குறித்து கருத்து தெரிவித்தனர் அத்தோடு தமது மாவட்டம்
தொடர்பான ஆசிரியர்கள் பிரச்சனைகள் குறித்தும் விளக்கினர்.
பின்னர் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக் கொண்ட
அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில
இந்தியச் செயலாளர் திரு வா. அண்ணாமலை அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அப்போது
அவர் இன்றைய ஆசிரியர்கள் பிரச்சனைகள் குறித்தும், அவற்றை தீர்த்திட தமிழக
ஆசிரியர் கூட்டணி மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் பற்றியும் விளக்கினார்.
மேலும் நடைபெற உள்ள டிட்டோஜேக் போராட்ட களத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் பங்களிப்பு பற்றியும் விளக்கம் அளித்தார்.
கூட்டத்தில் 31 மாவட்டங்களைச் சேர்ந்த மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment