Saturday, December 28, 2013

தேசிய வருவாய்வழி திறன் தேர்வு: (NMMS) வட்டார அளவில் தேர்வு மையம்


              தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு  உதவித்தொகை திட்டத்தில் நடக்க உள்ள தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

        மத்திய அரசு, ஆண்டுதோறும், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, தேசிய அளவில் போட்டி தேர்வை நடத்தி, அதில் தேர்வு பெறும் மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 2 வரை, நான்கு ஆண்டுகளுக்கு கல்வி உதவிதொகை வழங்குகிறது. குடும்ப ஆண்டு வருமானம், 1.5 லட்ச ரூபாய்க்குள் உள்ள எட்டாம் வகுப்பு மாணவர்கள் எழுதலாம்.

            இதில் தேர்ச்சி அடைய, எஸ்.சி.,- எஸ்.டி., மாணவர்கள், 50 சதவீதம்; பிற மாணவர்கள், 55 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மாதம் 500 ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில், பிப்., 22 ல், திறன் தேர்வு நடக்க உள்ளது. இதற்கு, வரும், 28 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

          கடந்த ஆண்டு வரை, மாவட்டத்திற்கு இரண்டு மையங்களே அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேர்வில் அதிக அளவில் மாணவர்களை பங்கேற்க வைக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment