Tuesday, February 25, 2014

ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் - இயக்குனர் ஆணை

      தொடக்கக் கல்வி - 25.2.2014 மற்றும் 26.2.2014 ஆகிய நாட்களில் உள்ளிருப்புப் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய இயக்குனர் ஆணை


8-ம் வகுப்பு தேசிய திறனாய்வுத் தேர்வு மூன்று வாரத்தில் முடிவுகள்........

     அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வு என்ற சிறப்பு திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதம் ரூ.500 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

         இந்த ஆண்டுக்கான திறனாய்வுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. தமிழகம் முழுவதும் 520 மையங்களில் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். சென்னை மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரத்தும் மேற்பட்டோர் தேர்வில் கலந்துகொண்டனர்.
 
       இதன் முடிவுகள் குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் திரு  கே. தேவராஜனிடம் கேட்டபோது, ‘‘விடைத்தாள்கள் தேர்வு மையங்களில் இருந்து வந்துகொண்டிருக்கின்றன. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்த பிறகு, கணினியில் மதிப்பீட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். தேர்வு முடிவை 3 வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்

Saturday, February 22, 2014

நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வுக் கூடங்கள்........

தொடக்கக் கல்வி - 2013-14 - பகுதி - II திட்டத்தின் கீழ் நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வுக் கூடங்களை நிறுவது சார்பான உத்தரவு

Friday, February 21, 2014

டிட்டோஜேக் சார்பிலான மார்ச் 6 ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பு





 

டிட்டோஜேக் - பள்ளிக் கல்வித் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை......

 

       டிட்டோஜாக் தலைவர்கள் இன்று காலை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
  பேச்சு வார்த்தையின் போது அரசு தரப்பில் ஒவ்வொரு கோரிக்கைக்கும் தனித்தனியாக பதிலளிக்கப்பட்டது. எனினும் நிதி தொடர்பான கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க முடியாது எனவும் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

   பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பிரச்சனைகள் எனில் உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதாகவும், நிதிச்சார்ந்த தீர்வுகள் உடனடியாக தீர்க்க இயலாது எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மூன்று நபர் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட டிட்டோஜாக் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை நிதித்துறை செயலாளருடன் பேசி வெளியிட ஆவணச் செய்வதாக பள்ளிக் கல்வித் துறைச் செயலர்  தெரிவித்தார்.
  எனவே இதையடுத்து டிட்டோஜாக் தலைவர்கள் கூடி விவாதிக்கின்றனர். அடுத்தக்கட்ட முடிவு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
 

Thursday, February 20, 2014

டிட்டோஜேக் உயர்மட்டக் குழு கூட்ட முடிவுகள்......

 Rakshith Kp's photo. 
 
        இன்று மாலை நடைபெற்ற டிட்டோஜேக் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு
       இன்று (20.02.2014) மாலை நடைபெற்ற டிட்டோஜேக் உயர்மட்டக் குழு கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

* 24.02.2014 அன்று மாலை 5மணிக்கு மாவட்ட அளவில் வேலை நிறுத்த ஆயுத்தக் கூட்டம் நடைபெறும். இதில் டிட்டோஜேக் இணைப்பு சங்கங்களின் மாவட்ட/ வட்ட நிரவாகிகள் பங்கேற்பு

* 25.02.2014 அன்று முதல் 28.02.2014 அன்று முடிய பிரச்சாரம் மற்றும் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடைபெறும்.

* 02.03.2014 அன்று மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெறும்.

* 03.02.2014 அன்று டிட்டோஜேக் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சென்னையில் சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது.

          மேலும் நாளை காலை பள்ளிக்கல்வி செயலாளருடன் சந்திப்பு நடைபெற உள்ளதெனவும் தெரிவித்தார். டிட்டோஜேக்கில் உள்ள சங்கங்கள் அனைத்தும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது என்ற கருத்தில் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது..

           அண்மையில் நடந்த மாபெரும் பேரணியால் தான் இன்று அரசு தரப்பில் பேச அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  கோரிக்கைகள் நிறைவேற்றினால் மட்டுமே வேலை நிறுத்தம் விலக்கிக்கொள்ளப்படும் என்றும் அதுவரை போராட்டங்கள் ஓயாது என நாளை நடைபெறும் செயலாளருடன் சந்திப்பின் போது வலியுறுத்தப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படியில் 50% ஐ அடிப்படை ஊதியத்துடன் சேர்த்திட மத்திய அரசு திட்டம்.

          மத்திய அரசு அறிவித்துள்ள 7வது ஊதியக்குழு அறிக்கை சமர்பிக்கப்பட்டு, அரசு அதை ஏற்பு செய்யும் வரையில் அரசு ஊழியர்கள் பயன்பெறும் பொருட்டு, தற்போது பெறும் அகவிலைப்படியில் 50% ஐ அடிப்படை ஊதியத்துடன் சேர்த்திட மத்திய அரசு திட்டம்.

    Cabinet approved terms of reference for 7th CPC, including merger of 50 per cent DA with basic pay

    As per Hindu Businessline News the Cabinet approved terms of reference for seventh pay commission. This includes merging dearness allowance above 50 per cent with basic pay. The excerpt of Hindu Businessline News is reproduced below:-
   Ahead of general election, the Centre today took key decisions to woo minorities and Government employees.
   For minorities, the Cabinet has decided to form equal opportunity commission as suggested by Sachhar Committee. This commission will suggest ways to ensure equal opportunities in jobs, education and even finding house on rent for minorities. The commission is expected to be constituted soon.
Terms of reference for 7th pay commission
       In order to benefit over 50 lakh employees and over 30 lakh pensioners, the Cabinet also approved terms of reference for seventh pay commission. This includes merging dearness allowance above 50 per cent with basic pay. Currently DA is around 90 per cent of basic pay and another hike of 10 per cent is expected soon. DA is calculated on the basis of change in retail inflation.
http://www.thehindubusinessline.com/economy/policy/cabinet-okays-setting-up-of-equal-opportunity-commission-coal-regulator/article5708924.ece