Saturday, June 28, 2014

தமிழக ஆசிரியர் கூட்டணி - கிருஷ்ணகிரி மாவட்டச் செயற்குழுக் கூட்டம்

                தமிழக ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயற்குழுக் கூட்டம் இன்று (28.06.2014) ஒசூர் தேர்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் நடைபெற்றது.
            கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைமை நிலையச் செயலாளர் திரு. தூ. மனுநீதி முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்ட துணைச் செயலாளர் திருமதி மா. ஜோதி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். 
    பின்னர் மாவட்டத் தலைவர் இன்றைய கூட்டத்தில் நமது மாவட்டத்திலிருந்து மாநில தலைமை நிலையச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரு வ. மி. ஹபிபுர் ரஹ்மான் அவர்களுக்கு பாராட்டு, சேலம் (உருது) உதவித்தொடக்கக் கல்வி அலுவலராக  பதவி மாற்றம் பெற்றுள்ள தளி வட்டாரத் தலைவர் திரு கு. பயாஸ் அவர்களுக்கு பாராட்டு, மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மாவட்டச் செயலாளர் பணியிடத்தை நிரப்புதல் உள்ளிட்ட நிகழ்வுகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்
     பின்னர் மாவட்டக் கிளையின் சார்பிலும், ஊத்தங்கரை, ஒசூர், கெலமங்கலம், தளி, சூளகிரி உள்ளிட்ட வட்டாரங்களின் சார்பிலும் பாராராட்டு தெரிவிக்கப்பட்டது.
                தொடர்ந்து மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஏற்கனவே எற்று நடத்தி வந்த ஒசூர் வட்டாரத்திற்கே வழங்கிட தமது சொந்த கருத்தாக மாவட்டத் தலைவர் முன்மொழிந்து பேச அதைத் தொடர்ந்து அனைத்து வட்டாரச் செயலாளர்களும் அதை தமது நிலைப்பாடுகளாகவும் தனித் தனியே தெரிவித்தனர். அதன்படி ஒசூர் வட்டாரச் செயலாளர் திரு ம. பவுன்துரை அவர்கள் முறைப்படி மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 
              இதே கூட்டத்தில் ஒசூர் வட்டாரச் செயலாளராக திருமதி ச. தேன்மொழி அவர்களும், தளி வட்டாரத் தலைவராக திரு பசவராஜ் அவர்களும் தேர்வு செய்தமைக்கு ஒப்புதலும் வழங்கப்பட்டது. 
             பின்னர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்ட திரு வ.மி. ஹபிபுர் ரஹ்மான் அவர்களின் சிறப்புரை ஆற்றினார்.
              இறுதியில் மாவட்டப் பொருளாளர் திரு அ.செ. நவீத் அக்பர் அனைவருக்கும் நன்றி கூறினார்.
  
              



















No comments:

Post a Comment