Sunday, June 29, 2014

நான் பார்த்து வியந்த அரசுப் பள்ளி..........


   மலையைக் குடைந்து கோயில் கட்டிய கதையை அனைவரும் அறிந்திருப்போம்.     
         மலையை வெட்டி கல்விக்கூடம் அமைத்த கதை உங்களுக்குத் தெரியுமா?
    ஆம், நேற்று ஓசூரில் நடைபெற்ற  தமிழக ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி மாவட்ட செயற்குழுவில் கலந்துக்கொள்ள சென்றபோது இக்காட்சியைக் கண்டேன்.
       ஒசூரில் உள்ள மிகப் பழமையான, புகழ்பெற்ற கோயில் சந்திர சூடேஷ்வரர் கோயில். அக்கோயில் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில்தான் இப்பள்ளி அமைந்துள்ளது.
   இப்பள்ளியின் பெயர் அரசு நகராட்சி துவக்கப் பள்ளி, சூடவாடி (தேர்ப்பேட்டை). 
       மிகப்பெரிய பாறையே மலையாக உருவெடுத்த தோற்றம் கொண்ட இம்மலையின் மீதுதான் இப்பள்ளியின் அனைத்து கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளது.
          அதன் அமைப்பும் பராமரிப்பு பாங்கும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
570 மாணவர்களையும், 18 ஆசிரியர்களையும் பாங்காய் பெற்ற இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ம. பவுன்துரை பாராட்டுக்குறியவர்.
     காரணம் பம்பரமாய் சுழலும் ஆசிரியர்கள் எமது ஆசிரியர்கள் என்றும், ஒவ்வோர் ஆசிரியரும் சுமார் 15,000 ரூபாய் வரையில் தமது பள்ளிக்கு (எதிர்ப்பார்ப்பும் இன்றி) ஆண்டுதோறும் செலவிடக்கூடிய  உன்னத மனம் படைத்தவர்கள் என்றும், எமது பள்ளியின் ஆசிரியர்களின் காலை வருகை நேரம் 8.50தான் என்றும் கூறிய கருத்துக்கள் என்னைக் கவர்ந்தன.



No comments:

Post a Comment