ஊத்தங்கரை ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி
அலுவலகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலராய் பணியாற்றி
தற்போது வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்திற்கு பணியிட மாறுதலில் சென்றுள்ள திரு
கொ.மா. சீனிவாசன் அவர்களுக்கு இன்று பாராட்டு மற்றும் வழியனுப்பு விழா நடைபெற்றது.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு இரா.
பிரசாத் அவர்கள் தலைமை தாங்கினார். கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி
இரா மகேசுவரி அவர்கள் முன்னிலை வகித்தார்.
விழாவில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத்
தலைவர் திரு செ. இராஜேந்திரன், வட்டாரச் செயலாளர் திரு சே. லீலா கிருஷ்ணன், ஆசிரியை
திருமதி ஈ. அகிலாண்டேஸ்வரி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர்
திரு செ. வெங்கடேசன், வட்டாரச் செயலாளர் திரு மு. மோகன் குமார், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றம் வட்டாரச் செயலாளர் திரு மாம்.கி.ஞானசேகரன் உள்ளிட்ட ஆசிரியர்களும்
அலுவலகப் திரு அருள், திரு பிச்சாண்டி, உள்ளிட்ட அலுவகப் பணியாளர்களும் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment