திருவள்ளுவர் பிறந்த தினம் வரும் ஆண்டு முதல் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவிப்பு
திருவள்ளுவர் பிறந்த தினம் வரும் ஆண்டு முதல்
நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என மத்திய
அரசு அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் உத்திரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த
பாரதிய ஜனதா எம்.பி. தருண் விஜயின் கோரிக்கையை ஏற்று மனித வள
மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி இதனை அறிவித்தார். இதற்கான அரசு
ஆணை விரைவில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.
இந்த பிரச்சினையை எழுப்பி
பேசிய தருண் விஜய் இந்தியாவின் பழமையான செம்மொழியான தமிழ் மொழியின் சிறப்பை
உணர வேண்டும் என வலியுறுத்தினார்.
வள்ளுவர் குறளின் சிறப்புகளை வட மாநிலங்களின்
குழந்தைகளும் அறிந்து கொள்ளும் வகையில் அவரது பிறந்த நாளை அனைத்து
பள்ளிகளிலும் கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும் என தருண் விஜய் கேட்டு
கொண்டார்.
வட இந்தியாவை சேர்ந்த தருண் விஜயின் இந்த
கோரிக்கையை பாராட்டும் விதமாக மாநிலங்களவையை சேர்ந்த தமிழக எம்.பி.க்களுடன்
ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் உள்ளிட்ட பிற மாநில எம்.பி.க்களும்
கரஒலி எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment